Home
News

ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய விலை இதுதானா?- விற்பனை தேதி லீக்: மூன்று கேமரா, சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் வசதி!

இந்தியாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் இந்திய விலை மற்றும் விற்பனை தேதி லீக் ஆகியுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ அடிப்படை விலை இந்தியாவில் ரூ.66,999 ஆக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய அறிமுக தேதி

ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்திய அறிமுக தேதி

ஒன்பிளஸ் 10 ப்ரோ இந்தியாவில் மார்ச் 31 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வ வெளியீட்டு நிகழ்வை டுவிட்டர் மூலம் அறிவிக்கிறது. அதன் அறிமுகத்திற்கு முன்னதாக நம்பகமான டிப்ஸ்டர் கணக்கில் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் முதல் விற்பனை தேதியுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட அதன் சீன மாடலுக்கு ஒத்த விவரக்குறிப்புகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முதன்மை ரக ஸ்மார்ட்போனானது ஃபிளாக்ஷிப் அம்சமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ அடிப்படை விலை

ஒன்பிளஸ் 10 ப்ரோ அடிப்படை விலை

இந்த தகவலை டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவின்படி, ஒன்பிளஸ் 10 ப்ரோ அடிப்படை விலை ரூ.66,999 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் டாப் எண்ட் வேரியண்ட் விலை ரூ.71,999 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் வரவிருக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனானது ஏப்ரல் 5 முதல் இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் ஒன்பிளஸ் 9 ப்ரோ வெளியீட்டு விலை குறித்து பார்க்கையில், இதன் அடிப்படை மாடல் ரூ.64,999 ஆகவும் டாப் எண்ட் மாடல் விலை ரூ.69,999 ஆகவும் இருந்தது.

ஒன்பிளஸ் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 10 ப்ரோ சிறப்பம்சங்கள்

ஒன்பிளஸ் 10 ப்ரோ ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட சீன மாடலுக்கு ஒத்த விவரக்குறிப்புகளை கொண்டு உலகளவில் அறிமுகப்படுத்தப்படும் என நம்பப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது க்யூ எச்டி ப்ளஸ் (1,440x3,216 பிக்சல்கள்) தெளிவுத்திறனுடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் வளைந்த எல்டிபிஓ 2.0 அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது 1 ஹெர்ட்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் டைனமிக் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே வீதத்தைக் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாக்கப்படும் என நம்பப்படுகிறது. முன்னதகாவே குறிப்பிட்டுள்ளபடி, இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி சிப்செட் வசதியோடு வரும் என எதிர்பார்க்ப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது 80 வாட்ஸ் சூப்பர் வூக் ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜ் ஆகிய ஆதவோடு வரும் எனவும் இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் எனவும் நம்பப்படுகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

இந்தியாவில் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனத்தின் இந்திய விலை மற்றும் விற்பனை தேதி லீக் ஆகியுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோ அடிப்படை விலை இந்தியாவில் ரூ.66,999 ஆக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், இந்த சாதனத்தில் 48 எம்பி சோனி ஐஎம்எக்ஸ் 789 முதன்மை சென்சார் உட்பட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 எம்பி சோனி எம்எம்எக்ஸ் 615 கேமரா சென்சார் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Oneplus 10 Pro India price and Sale Date Leaked Before its Launch: Expected Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X