ஒன்பிளஸ் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும்.. விலை இதுவாக தான் இருக்குமா?
இந்த ஆண்டில் ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான ஸ்மார்ட்போன் மாடல்களில் ஒன்பிளஸ் 10 ப்ரோ சாதனம் ஒரு கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒன்பிளஸ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஸ்மார்ட்போன் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட OnePlus 10 Pro, இப்போது இந்தியாவிற்கு வந்து வசந்த காலத்தில் விற்பனைக்கு வரும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன் பற்றிய தகவலைப் பார்க்கலாம்.

OnePlus 10 Pro எப்போது இந்தியாவிற்கு வரும்?
உலகளாவிய சந்தைகளில் சாதனத்தின் கிடைக்கும் தன்மை பற்றி நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. ஆனால், இந்த வசந்த காலத்திற்கான இந்திய விற்பனையை நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது என்று Gizmochina தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, ஒன்பிளஸ் அதன் முதன்மை சாதனங்களை மார்ச் 2022 இறுதிக்குள் இந்தியாவில் கொண்டு வரலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவிற்கு வரும் OnePlus 10 Pro ஆனது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வேறுபட்டதாக இருக்காது என்று கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 9 சீரிஸின் விற்பனையைத் தடுக்குமா?
OnePlus 10 Pro ஆனது OnePlus 9 தொடரின் விற்பனையைத் தடுக்கலாம் என்று கருதப்படுகிறது. OnePlus 9RT இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு நீண்ட நாட்கள் ஆகவில்லை என்பதனால் இந்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 10 ப்ரோவின் விலை சுமார் ரூ.70,000 ஆக இருக்கும் என்று சமீபத்திய லீக் தகவல் தெரிவிக்கிறது. இது ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் அதன் தொடரின் பிற சாதனங்களின் விற்பனையைச் சீர்குலைக்கும் என்பதனால் நிறுவனம் இதன் அறிமுகத்தை இன்னும் கவனமாக மேற்கொள்ளும் என்று கருதப்படுகிறது.

OnePlus 10 Pro சிறப்பம்சங்கள்
இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் OnePlus 9 மற்றும் OnePlus 9R சாதனங்களின் விற்பனையை அதிகரிக்க நிறுவனம் இந்தியாவில் OnePlus 9RT இன் வெளியீடு தாமதமாகியிருக்கலாம். OnePlus 10 Pro விவரக்குறிப்புகள் பற்றிப் பார்க்கையில், இந்த புதிய OnePlus 10 Pro ஆனது Qualcomm Snapdragon 8 Gen1 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 6.7' இன்ச் LTPO 2.0 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 120Hz வரையிலான புதுப்பிப்பு வீதத்திற்கான ஆதரவையும் அதிகபட்ச பிரகாசத்தின் 1300nits மற்றும் பாதுகாப்பிற்காக மேலே கொரில்லா கிளாஸ் விக்டஸையும் கொண்டுள்ளது.

கேமரா அம்சம்
கேமரா பிரிவில், இந்த சாதனம் 50MP Samsung ISOCELL JN1 அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 48MP Sony IMX789 முதன்மை சென்சார் மற்றும் OIS உடன் 8MP 3.3x டெலிஃபோட்டோ சென்சார் கொண்ட மூன்று கேமரா அமைப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. அதேபோல், நிச்சயமாக இந்த OnePlus 10 Pro சாதனம் ஆனது Hasselblad பிராண்டிங் உடன் வரும் என்பதில் சந்தேகமில்லை. மேலும், கேமராக்கள் Hasselblad நேச்சுரல் கலர் ஆப்டிமைசேஷன் 2.0 உடன் Hasselblad ஆல் டியூன் செய்யப்பட்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பேட்டரி அம்சம்
இது ஸ்மார்ட்போனின் கேமரா அனுபவத்தை மற்றொரு தரத்திற்குக் கொண்டு செல்லும் என்பது ஒன்பிளஸ் ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரித்துள்ளது. இருப்பினும், இதன் விலை மட்டுமே இப்போது சற்று அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் கருதுகின்றனர். இருப்பினும், இதன் முழு அம்சங்கள் வெளிவரும் போது இந்த விலை நியாயமானது தானா என்பதை நாம் ஆராயலாம். OnePlus 10 Pro ஆனது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்குகிறது மற்றும் 5000mAh பேட்டரியை 80W வேகமாக சார்ஜ் செய்வதை ஆதரிக்க முடியும். இவை சீனாவிற்கான சாதன விவரக்குறிப்புகள் என்பது கவனிக்கத்தக்கது. அது இந்தியாவுக்கு மாறக்கூடும்.


Click it and Unblock the Notifications