விண்ணில் ஓராண்டாக ஸ்பேஸ்எக்ஸ்-ன் ஸ்டார்மேன்! என்ன நிலவரம்?
நீங்கள் ரேடியோவில் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு சலிப்படைந்துவிட்டீர்கள் எனில் ஸ்டார்மேனின் வலியை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
ஓராண்டிற்கு முன்பு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய ஃபால்கான் ஹெவி ராக்கெட் சிஸ்டம் மூலம், விண்வெளி உடையணிந்த ஸ்டார்மேன் பொம்மையுடன் கூடிய டெஸ்லா ரோட்ஸ்டர்-ஐ வெற்றிகரமாக சூரியனின் சுற்றுவட்டப்பாதைக்கு செலுத்தி பரிசோதித்தது.

ஸ்டார்மேனின் பயணம்
இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில், பூமியில் இருந்து 226,563,000 மைல்கள் தொலைவில் செவ்வாயின் சுற்றுவட்டப்பாதைக்கு அப்பால், சூரியனின் சுற்றுவட்டப்பாதையில் 10,000mph எனும் வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் என்கிறது ஸ்டார்மேனல கண்காணிக்கும் https://www.whereisroadster.com இணையதளம்.

36,000 மைல்கள்
இந்த கோணத்தில் பார்த்தால், விண்கலத்தின் உத்திரவாதம் 36,000 மைல்கள். ஆனால் இத்தொலைவை விட 13,183 மடங்கு அதிகமாக பயணித்துள்ளது. இது உலகம் முழுவதும் உள்ள சாலைகளில் 21 முறை பயணிப்பதற்கு ஈடானது.

ஸ்டார்மேன் ஸ்டார்
நீங்கள் ரேடியோவில் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் கேட்டு சலிப்படைந்துவிட்டீர்கள் எனில் ஸ்டார்மேனின் வலியை கொஞ்சம் எண்ணிப்பாருங்கள். ஸ்டார்மேன் ஸ்டார் ரோடை தொடங்கியது முதல் இரண்டு பாடல்களை மட்டுமே தொடர்ந்து கேட்டுவருகிறது. டேவிட் போவி-ன் பாடல்களான, ஸ்பேஸ் ஓடிடி மற்றும் ஈஸ் ஃதெர் லைப் ஆன் மார்ஸ்முறையே 99,519 மற்றும் 1,34,098 தடவை இசைக்கப்பட்டு ஸ்டார்மேனால் கேட்கப்பட்டுள்ளது.

557 நாட்கள்
இது சூரியனை சுற்றிவர 557 நாட்கள் தேவைப்படும் நிலையில், பூமி அல்லது வெள்ளியை இது மோதுவதற்கு முன்பாக பல மில்லியன் ஆண்டுகள் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மில்லியன் ஆண்டுகளில் இந்த ஸ்டார்மேன் பூமியின் மீது மோதுவதற்கு 6% வாய்ப்புகளும், வெள்ளியின் மீது மோதுவதற்கு 2.5% வாய்ப்புகளும் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மேலும் 2091ல் ஸ்டார்மேன் பூமிக்கு மிக அருகில் வரும் எனவும், இடைப்பட்ட தொலைவு சில நூறாயிரம் கிலோமீட்டராக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

பேட்டரி தீர்ந்திருக்கும்
ஸ்டார்மேன் எப்போதும் பாடல்களை கேட்டுக்கொண்டிருப்பதால், இந்நேரம் பேட்டரி தீர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியெனில் நுண் சிதைவுகள் அதன் தலையை துளைக்காமல் அல்லது ரோட்ஸ்டரை சிதைக்காமல் இருந்திருந்தால் ஸ்டார்மேன் தனியாக இருந்திருக்கவேண்டும். நுண்சிதைவுகள்விண்வெளி முழுவதும் நிரம்பி சூரியனின் சுற்றுப்பாதையில் வேகமாக சுற்றி வருகின்றன. அவை ரோட்ஸ்டர் அல்லது ஸ்டார்மேனை சிதைக்க வாய்ப்புள்ளது.

காந்தப்புலத்திற்கு மிகத்தொலைவில் உள்ளது
நுண்சிதைவுகளை தவிர்த்து பார்த்தால், ஸ்டார்மேன் பூமியின் காந்தப்புலத்திற்கு மிகத்தொலைவில் உள்ளது. ஆனால் அதேசமயம் சூரியபுயல் மற்றும் கதிரியக்கத்தால் தாக்கப்படுவதால், அதன் அழகிய சிவப்பு நிறம் மங்கி ரோட்ஸ்டர் தூசுக்களால் நிரம்பி வருகிறது.


Click it and Unblock the Notifications








