2025 ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள்.. எந்தெந்த Samsung போன்களுக்கு One UI 7 Update கிடைக்கும்?
சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் ஒன் யுஐ 7 அப்டேட் (One UI 7 Update) வழியாக ஏற்பட்ட லாக் ஸ்கிரீன் பக் (Lock screen bug) காரணமாக, தென் கொரியாவில் உள்ள பயனர்களுக்கு குறிப்பிட்ட அப்டேட்டை வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்தி இருந்தது. தற்ப்போது அது சரிசெய்யப்பட்டு ஒன் யுஐ 7 அப்டேட் மீண்டும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட தொடங்கியுள்ளது.
இருப்பினும், அமெரிக்கா உட்பட சில சந்தைகளில் சாம்சங்கின் ஆண்ட்ராய்டு 15 அப்டேட் (Samsung Android 15 Update) இன்னும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இந்தியாவிற்கான ஒன் யுஐ 7-ன் ரோட் மேப்பை (Samsung One UI 7 update India Roadmap) சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்களுக்கு சிறிது நிவாரணம் அளிக்கிறது.

சாம்சங்கின் ஒன் யுஐ 7 அப்டேட் எப்போது இந்தியாவில் ரிலீஸ் ஆகும்? என்னென்ன சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு / டேப்லெட்களுக்கு கிடைக்கும்? கிடைக்கப்பெற்ற அறிக்கைகளின்படி, ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான ஒன் யுஐ 7 அப்டேட் ஆனது முதலில் கேலக்ஸி எஸ்24 சீரீஸ் (Galaxy S24 Series), கேலக்ஸி இசட் போல்ட் 6 (Galaxy Z Fold 6) மற்றும் கேலக்ஸி இஸட் ப்ளிப் 6 (Galaxy Z Flip 6) மாடல்களுக்கு தான் கிடைக்கும்.
குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட் 2025 ஏப்ரல் மாதத்திற்குள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் 2025 மே மாதத்தில், கேலக்ஸி எஸ்23 சீரீஸ் (Galaxy S23 Series), கேலக்ஸி எஸ்22 சீரீஸ் (Galaxy S22 Series), கேலக்ஸி எஸ்21 சீரீஸ் (Galaxy S21 Series), கேலக்ஸி இஸட் பிளிப் 5 (Galaxy Z Flip 5), கேலக்ஸி இஸட் போல்ட் 5 (Galaxy Z Fold 5) மற்றும் கேலக்ஸி டேப் எஸ்10, கேலக்ஸி டேப் எஸ்9, மற்றும் கேலக்ஸி டேப் எஸ்8 சீரிஸ் டேப்லெட்ககளுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
பின்னர் ஜூன் மாதத்தில், கேலக்ஸி ஏ05எஸ் (Galaxy A05s), கேலக்ஸி ஏ06 (Galaxy A06), கேலக்ஸி ஏ14 (Galaxy A14), கேலக்ஸி ஏ14 5ஜி (Galaxy A14 5G), கேலக்ஸி ஏ15 5ஜி (Galaxy A15 5G), கேலக்ஸி ஏ16 5ஜி (Galaxy A16 5G), கேலக்ஸி ஏ25 5ஜி (Galaxy A25 5G), கேலக்ஸி ஏ33 5ஜி (Galaxy A33 5G), கேலக்ஸி ஏ34 5ஜி (Galaxy A34 5G), கேலக்ஸி ஏ35 5ஜி (Galaxy A35 5G), கேலக்ஸி ஏ53 5ஜி (Galaxy A53 5G), கேலக்ஸி ஏ54 5ஜி (Galaxy A54 5G), கேலக்ஸி ஏ55 5ஜி (Galaxy A55 5G), மற்றும் கேலக்ஸி ஏ73 5ஜி (Galaxy A73 5G) உள்ளிட்ட ஸ்மார்ட்போன்கள் இந்த அப்டேட்டை பெறும்.
இதோடு கேலக்ஸி எப்05, கேலக்ஸி எப்14, கேலக்ஸி எப்14 5ஜி, கேலக்ஸி எப்15 5ஜி, கேலக்ஸி எப்16 5ஜி, கேலக்ஸி எப்34 5ஜி, கேலக்ஸி எப்54 5ஜி மற்றும் கேலக்ஸி எப்55 5ஜி ஆகியவற்றுடன் கேலக்ஸி எம்05, கேலக்ஸி எம்14, கேலக்ஸி எம்14 5ஜி, கேலக்ஸி எம்15 5ஜி, கேலக்ஸி எம்16 5ஜி, கேலக்ஸி எம்33 5ஜி, கேலக்ஸி எம்34 5ஜி, கேலக்ஸி எம்35 5ஜி, கேலக்ஸி எம்53 5ஜி, கேலக்ஸி எம்55 5ஜி மற்றும் கேலக்ஸி எம்55எஸ் 5ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கும் அப்டேட் கிடைக்கும்
ஒன் யுஐ7 அப்டேட்-ஐ எவ்வாறு பதிவிறக்குவது? உங்கள் ஸ்மார்ட்போனிற்கு ஒன் யுஐ7 அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, செட்டிங்ஸ் > சாஃப்ட்வேர் அப்டேட் > டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் என்பதற்கு செல்லவும். உங்கள் மாடலுக்கு அப்டேட் வந்து இருந்தால், அது தானாகவே பதிவிறக்க தொடங்கும். அப்டேட் செய்ய தொடங்குவதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போன் வைஃபை உடன் இணைக்கப்பட்டு, போதுமான பேட்டரி அள்வு கொண்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளவும்.


Click it and Unblock the Notifications








