Home
News

மே 1 வரும் புது சிக்கலுக்கு முன்.. OnePlus யூசர்களுக்கு அடுத்த ஆப்பு.. இனி இந்த 2 போனுக்கும் UPDATE வராது!

மே 1 முதல், இந்தியாவில் உள்ள 4500 ஒன்பிளஸ் ஸ்டோர்கள் இழுத்து மூடப்படவுள்ள நிலையில், ஒன்பிளஸ் யூசர்களுக்கு இன்னொரு அதிர்ச்சிகரமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதென்ன அறிவிப்பு? இதனால் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள்? 4500 ஒன்பிளஸ் ஸ்டோர்கள் ஏன் இழுத்து மூடப்படவுள்ளன? இதோ விவரங்கள்:

அதென்ன அறிவிப்பு? ஒன்பிளஸ் நிறுவனமானது இந்திய சந்தையில் வாங்க கிடைக்கும் அதன் 2 ஸ்மார்ட்போன்கள் ஆனது கடைசி சாஃப்ட்வேர் அப்டேட்டை பெறுவதாக அறிவித்துள்ளது. அதாவது இனிமேல் இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் எந்த விதமான அப்டேட்டும் இனி கிடைக்காது என்று அர்த்தம்; இவ்விரு ஸ்மார்ட்போன்களின் சாஃப்ட்வேர் அப்டேட் சைக்கிள் ஆனது முடிக்கு வந்துள்ளது.

இனி இந்த 2 OnePlus போனுக்கும் UPDATE வராது!

என்ன மாடல்கள்? கடைசி சாஃப்ட்வேர் அப்டேட்டை பெற்றுள்ள ஒன்பிளஸ் மாடல்கள் - ஒன்பிளஸ் 8 (OnePlus 8) மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ (OnePlus 8 Pro) ஸ்மார்ட்போன்கள் ஆகும். கடந்த ஏப்ரல் 2020 இல் அறிமுகமான இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்கும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் மற்றும் 3 முக்கிய ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படியே ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோ மாடல்களுக்கான லேட்டஸ்ட் மற்றும் லாஸ்ட் அப்டேட் ஆன ஆக்சிஜன்ஓஎஸ் 13.1.0.587 வெர்ஷன் மற்றும் ஏப்ரல் 2024 ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்ச் ஆனது தற்போது வெளியாக தொடங்கியுள்ளது. அடுத்த சில நாட்களில் இந்த அப்டேட்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி இந்த 2 OnePlus போனுக்கும் UPDATE வராது!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் 8 மற்றும் 8 ப்ரோவிற்கான இந்த ஓவர்-தி-ஏர் (Over-The-Air - OTA) அப்டேட் ஆனது படிப்படியாக வெளியிடப்படும். அதாவது ஆரம்பத்தில் ஒரு சிறிய சதவீத பயனர்களை வந்து அடையும். பின்னர் அடுத்த சில நாட்களில் பரந்த அளவிலான பயனர்களை படிப்படியாக வந்தடையும்.

உங்களுக்கு இந்த லேட்டஸ்ட் அப்டேட் வந்துள்ளதா என்பதை செட்டிங்ஸ் > அபௌட் டிவைஸ் > ஆக்ஸிஜன் ஓஎஸ் > செக் ஃபார் அப்டேட்ஸ் (Settings > About device > OxygenOS > Check for updates) வழியாக கைமுறையாகவும் சரிபார்க்கலாம்.

இனி இந்த 2 OnePlus போனுக்கும் UPDATE வராது!

பயனர்களுக்கு நன்றி சொன்ன ஒன்பிளஸ்: ஒன்பிளஸ் 8 சீரீஸிற்கான லாஸ்ட் சாஃப்ட்வேர் அப்டேட் குறித்த அறிக்கையில், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பயனர்களுக்கும், அவர்கள்அளித்த ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ளது. தீவீரமாக கருத்துகளை வழங்கி, பிழைகளை பற்றி புகார் அளித்து, ஆக்சிஜன்ஓஎஸ்-ஐ மேம்படுத்துவதில் உதவியதற்கும் ஒன்பிளஸ் நிறுவனம் நன்றி கூறியுள்ளது.

மேலும் ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோவிற்கான சாஃப்ட்வேர் அப்டேட்கள் முடிவடைந்து விட்ட போதிலும் கூட, பயனர்களின் கருத்துக்களை கேட்பதற்கும், எதிர்காலத்தில் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதற்கும் நாங்கள் உறுதியாக இருக்கிரோம் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் பயனர்களுக்கு உறுதி அளித்துள்ளது.

"ஆக்சிஜன்OS 13.1.0.587 வெளியீட்டின் மூலம், ஒன்பிளஸ் 8 மற்றும் ஒன்பிளஸ் 8 ப்ரோவிற்கான எங்கள் வாழ்க்கை சுழற்சி பராமரிப்பு வாக்குறுதியை நாங்கள் அதிகாரப்பூர்வமாக நிறைவேற்றியுள்ளோம். இது ஒரு மறக்கமுடியாத பயணமாகும், மேலும் எங்கள் மனமார்ந்த நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறோம். கடந்த நான்கு வருடங்களில் உங்கள் அனைவரின் ஆதரவிற்கு நன்றி, நாம் கைகோர்த்து நீண்ட தூரம் வந்துள்ளோம்" என்று ஒன்பிளஸ் நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் 4500 ஒன்பிளஸ் ஸ்டோர்கள் ஏன் இழுத்து மூடப்படவுள்ளன? ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் பிராண்டில் தீர்க்கப்படாத சிக்கல்கள் காரணமாகவே மே 1 முதல் ஒன்பிளஸ் டிவைஸ்களுக்கான விற்பனையை நிறுத்துவதாக பல மொபைல் ரீடெயில் செயின்கள் அறிவித்துள்ளன. ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்திற்கு பெயர் பெற்ற ஒன்பிளஸ்-க்கு இந்த முடிவு ஒரு பெரிய அடியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

Best Mobiles in India

English summary
One More Shocking News For OnePlus Users No More Software Update For These 2 OnePlus Smartphones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X