Home
News

3300GB டேட்டா.. யாரு விடுவா.. BSNL-ன் இன்னொரு புது ஆபர்.. செப்.30 வரை ரூ.100 தள்ளுபடி.. எந்த திட்டத்தில்?

பிஎஸ்என்எல் (BSNL) என்று சுருக்கமாக அழைக்கப்படும், இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) ஆனது அதன் வாடிக்கையாளர்களுக்காக ஒரு சிறப்பு பிராட்பேண்ட் சலுகையை (Special Broadband Offer) அறிவித்துள்ளது.

இந்த பிராட்பேண்ட் சலுகை பயனர்களுக்கான பிராட்பேண்ட் திட்டங்களில் தள்ளுபடிகளை ஒருங்கிணைக்கிறது. மேலும் இந்த சலுகை இரண்டு பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் - அவைகள் ரூ.499 மற்றும் ரூ.449 திட்டங்கள் ஆகும்.

BSNL-ன் இன்னொரு புது ஆபர்.. செப்.30 வரை ரூ.100 தள்ளுபடி!

ரூ.499 மதிப்புள்ள திட்டம் பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் பிளான் என்று அழைக்கப்படுகிறது மற்றும் ரூ.449 மதிப்புள்ள திட்டம் பிஎஸ்என்எல் ஃபைபர் பேசிக் நியோ பிளான் என்று அழைக்கப்படுகிறது. ஃபைபர் பேசிக் திட்டம் 60எம்பிபிஎஸ் ஸ்பீட் உடன் வருகிறது; மறுகையில் உள்ள ஃபைபர் பேசிக் நியோ திட்டம் 50எம்பிபிஎஸ் என்கிற ஸ்பீட் உடன் வருகிறது.

மேலும் ரூ.499 மற்றும் ரூ.449 ஆகிய இரண்டு திட்டங்களுமே 3.3 டிபி (அதாவது 3300 ஜிபி) வரையிலான டேட்டாவுடன் வருகின்றன. பிஎஸ்என்எல் அறிவித்துள்ள சிறப்பு பிராட்பேண்ட் சலுகையின் கீழ், தற்போது இந்த இரண்டு திட்டங்களும் நேரடியாக ரூ.399 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.

அதாவது ரூ.499 திட்டம் ரூ.100 தள்ளுபடியின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்; ரூ.449 திட்டம் ரூ.50 தள்ளுபடியின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். பிஎஸ்என்எல் அறிவித்துள்ள இந்த சிறப்பு பிராட்பேண்ட் சலுகை ஆனது இந்தியா முழுவதும் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால் சில வட்டங்களில், மேற்குறிப்பிட்ட 2 திட்டங்களுக்கும் இந்த சலுகை கிடைக்காமல் போகலாம்.

இதோடு பிஎஸ்என்எல் நிறுவனம் ஆனது பிராட்பேண்ட் இன்ஸ்டால் செய்யப்பட்ட மாதத்திற்கு இலவச சேவையையும் வழங்குகிறது. இந்த சலுகை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய [பிராட்பேண்ட் இணைப்பை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் செல்ஃப்கேர் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்.

இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 1 ஜிபிபிஎஸ் ஸ்பீட் திட்டத்தை தேர்வு செய்யும் பயனர்களுக்கு ரூ.6,000 தள்ளுபடி கிடைக்கிறது. பிஎஸ்என்எல்-ன் 1 ஜிபிபிஎஸ் பிளான் ஆனது ஃபைபர் ரூபி ஓடிடி (Fiber Ruby OTT) பிளான் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வழக்கமான செலவு ரூ.4,799 ஆகும். ஆனால் செப்டம்பர் 13 ஆம் தேதி வரை கிடைக்கும் சலுகை காலத்தின் கீழ், பயனர்கள் இந்த திட்டத்தை முதல் 6 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தள்ளுபடியுடன் பெறலாம்.

அதாவது இந்த திட்டம் முதல் ஆறு மாதங்களுக்கு ரூ.4,799 க்கு பதிலாக ரூ.1000 தள்ளுபடியை பெற்று ரூ.3,799 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். இப்படியாக உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 தள்ளுபடி என மொத்தம் 6 மாதங்களுக்கு ரூ.6000 தள்ளுபடி கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி இது செப்டம்பர் 13 ஆம் தேதி வரை மட்டுமே கிடைக்கும்.

பிஎஸ்என்எல் நிறுவனமானது ஃபைபர் வணிகத்தை பொறுத்தவரை இந்தியாவில் மூன்றாவது பெரிய நிறுவனமாகும். முதல் இரண்டு இடங்களில் - பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளன. ஃபைபர் மார்கெட்டில் ஒரு காலத்தில் முன்னணியில் இருந்த பிஎஸ்என்எல், ஏர்டெல் மற்றும் ஜியோவின் சிறந்த முதலீடுகள் மற்றும் அணுகல் காரணமாக மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளது.

சமீபத்தில் தனியார் டெலிகாம் நிறுவனங்களின் கட்டண உயர்வை பிஎஸ்என்எல் பின்பற்றுமா என்கிற சந்தேகம் கிளம்பியது. அதற்கு "இல்லை" என்கிற தீர்க்கமான பதிலைடஹ் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் பெம்மாசானி சந்திர சேகர். மணிகண்ட்ரோல் வலைதளத்திற்கு பேட்டியளித்த அவர் "கட்டணங்களை உயர்த்துவதில் பிஎஸ்என்எல் அதன் போட்டியாளர்களை பிரதிபலிக்காது (பின்பற்றாது), மாறாக மலிவு விலையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள திட்டமிட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
One More New Offer From BSNL Special Broadband Offer Discounts on Rs 499 449 3300GB Data Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X