Home
News

கலக்குற மார்க்கு.. WhatsApp-க்கு வந்த Imagine அம்சம்.. சும்மா டைப் பண்ணா போதும்.. மீதியை AI பார்த்துக்கும்!

1 நிமிடம் வரை நீளும் லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸ்-ஐ ஸை (Long Voice Status) அறிமுகம் செய்த கையோடு வாட்ஸ்அப் நிறுவனம் இமேஜின் (Imagine) என்கிற புதிய அம்சத்தை சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தின் பயன் என்ன? இதை பயன்படுத்துவது எப்படி? இது எப்போது அனைத்து வகையான பயனர்களுக்கும் வந்து சேரும் ? சமீபத்தில் வந்த லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸின் பயன் என்ன? வேறு என்னென்ன புதிய அம்சங்கள் வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ளது மற்றும் வரவுள்ளது? இதோ விவரங்கள்:

வாட்ஸ்அப்பிற்கு வந்துள்ள இமேஜின் என்றால் என்ன? இமேஜின் என்பது வாட்ஸ்அப் தளத்தில் சேர்க்கப்படவுள்ள இன்னுமொரு ஏஐ அம்சமாகும். டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ வழியாக கிடைத்த லேட்டஸ்ட் தகவலின்படி, இமேஜின் என்கிற அம்சமானது பயனர்கள் தங்கள் விருப்பப்படி ஏஐ போட்டோக்களை உருவாக்க அனுமதிக்கும் ஒரு அம்சமாகும்.

கலக்குற மார்க்கு.. WhatsApp-க்கு வந்த Imagine அம்சம்!

மெட்டாவின் லார்ஜ் லேங்குவேஜ் மாடலை (Mata Large Language Model) அடிப்படையாக கொண்ட இந்த அம்சமானது டெக்ஸ்ட் வழியிலாக போட்டோக்களை உருவாக்கும் சுதந்திரத்தை பயனர்களுக்கு வழங்கும். டபுள்யூஏபீட்டாஇன்ஃபோ (WABetaInfo) சமீபத்திய அறிக்கையின்படி, புதிய வாட்ஸ்அப் அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.24.12.4-இல் காணப்பட்டுள்ளது.

இந்த அம்சத்தின் மூலம், வாட்ஸ்அப் பயனர்கள் ஆப்பிற்குள்ளேயே ஏஐ-ஐ பயன்படுத்தி புகைப்படங்களை உருவாக்க முடியும். இந்த புதிய ஏஐ இமேஜின் அம்சமானது வாட்ஸ்அப்பில் அணுக கிடைக்கும் அட்டாச்மென்ட் விருப்பத்தின் (Attachment option) கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சத்தை ஏற்கனவே பெற்றுள்ள பீட்டா பயனர்கள் அட்டாச்மென்ட் விருப்பத்தில் உள்ள இமேஜினை கிளிக் செய்வதன் மூலம் ஏஐ-ஜெனெரேட்டட் படங்களை உருவாக்க முடியும்.

இந்த புதிய ஏஐ இமேஜின் அம்சம் எப்போது அனைத்து பயனர்களுக்கு வந்து சேரும்? டபுள்யூஏபீட்டாஇன்ஃபோவின் அறிக்கையின்படி, தற்போது வரையிலாக இந்த புதிய ஏஐ இமேஜின் அம்சம் ஏற்கனவே மெட்டாஏஐ-ஐ (MetaAI) கொண்டுள்ள உள்ள வாட்ஸ்அப் பயனர்களுக்கு மட்டுமே வரும். அதிலும் இந்த மெட்டா ஏஐ சாட்பாட் ஆனது தற்போது வரையிலாக அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வேறு சில பிராந்தியங்களில் மட்டுமே அணுக கிடைக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக வாட்ஸ்அப் ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோ (WhatsApp AI Generated Profile Photo) என்கிற புதிய அம்சம் குறித்த தகவலும் வெளியானது. இது வாட்ஸ்அப் செயலிக்கு உள்ளயே ஏஐ ஜெனெரேடட் ப்ரொபைல் போட்டோக்களை உருவாக்கி அதன் பயன்படுத்துவதற்கான விருப்பத்தை வழங்கும் என்றும் கூறப்பட்டது. அதுதான் இமேஜின் என்கிற பெயரின்கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா? அல்லது அது முற்றிலும் வேறொரு அம்சமாக வருமா? என்பதில் தெளிவு இல்லை!

சமீபத்தில் வந்த லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸின் பயன் என்ன? வாட்ஸ்அப் அதன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கான லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸ் என்கிற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே இது நீளமான வாய்ஸ் மெசேஜ்களை ஸ்டேட்டஸ் அப்டேட் ஆக ஷேர்ஸ் செய்ய அனுமதிக்கிறது. முன்னதாக, வாட்ஸ்அப் பயனர்கள் 30 வினாடிகள் வரையிலான வாய்ஸ் நோட்களை மட்டுமே ஸ்டேஸ்ட் அப்டேட் ஆக்க பகிர முடிந்தது.

தற்போது இது மேலும் 30 வினாடிகளுக்கு நீட்டிக்கப்பட்டு, மொத்தம் 1 நிமிடமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டேட்டஸ் அப்டேட் பக்கத்திற்கு சென்று, மைக்ரோஃபோன் ஐகானை லாங் பிரஸ் செய்வதன் மூலம்.. லாங் வாய்ஸ் ஸ்டேட்டஸை ஷேர் செய்ய முடியும். இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன்கள் ஆகிய இரண்டிலுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக வாட்ஸ்அப்பில் உள்ள டீஃபால்ட் சாட் வால்பேப்பர் அம்சத்தில் க்ரீன் கலரை தவிர்த்து மேலும் பல கலர் ஆப்ஷன்களை விரைவில் சேர்க்கப்படும் என்கிற தகவலும் வெளியானது. ஐஓஎஸ் 24.11.10.70-க்கான லேட்டஸ்ட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் டீஃபால்ட் சாட் வால்பேப்பரில் மல்டிபிள் கலர் ஆப்ஷன்கள் (மொத்தம் 5 கலர் ஆப்ஷன்கள் அணுக கிடைக்கிறது: டீஃபால்ட் க்ரீன் தீம் உடன் சேர்த்து ப்ளூ, க்ரே, ரெட் மற்றும் பர்பிள் கலர் ஆப்ஷன்கள்) அணுக கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
One More New AI Feature in WhatsApp Called Imagine Which Allow Users to Generate AI Images From Text
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X