உறவு முடிந்தவுடன் மொபைல் போனைத் தேடும் 3ல் ஒருவர்

Posted By: Staff
உறவு முடிந்தவுடன் மொபைல் போனைத் தேடும் 3ல் ஒருவர்

பிரிட்டனில் வசிக்கும் பலர் மொபைல் போன்களுக்கு அடிமைகளாக இருப்பது போல் தோன்றுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. சன் என்ற நிறுவனம் எடுத்த சர்வேயில் பிரிட்டனில் வாழும் பலர் படுக்கைக்குச் செல்லும் வரை மொபைல் போனில் செலவிடுவதாக தெரிவிக்கிறது.

அது மட்டும் அல்லாமல் உடலுறவு முடிந்தவுடனே 3ல் ஒருவர் தங்கள் மொபைல் போன்களைத் தேடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. சன் நிறுவனம் செய்த ஆய்வின்படி பிரிட்டனில் 90 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கின்றனர்.

இவர்களில் பலர் எல்லா நேரங்களிலும் மொபைல் போன்களிலேயே செலவிடுகின்றனர். மேலும் மற்ற காரியங்களைவிட மொபைல் போன்களுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அதனால் 3ல் இருவர் படுக்கைக்குச் செல்லும் வரை மொபைல் போன்களில் செலவிடுவதாகவும், 3ல் ஒருவர் உடலுறவு முடிந்தவுடனே மொபைல் போன்கலைத் தேடுவதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

Read more about:
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot