300 தீவிரவாதிகளின் சடலம் எரித்து ஆற்றில் வீச்சு-தடயத்தை மறைத்த பாக்.!
பாகிஸ்தான் இறந்தவர்களின் சடலங்களை எரித்து ஆற்றில் வீசியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதை ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.
புல்வாமா தாக்குதலுக்கு பலி தீர்க்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் அதிரடியாக ஊருடுவி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
இதை இந்திய விமனாப்படையும் மத்திய அரசும் அறிவித்தன. இருந்த போதிலும் பாகிஸ்தான் இந்தியா தாக்குதல் நடத்தவில்லை என்று முன் கூறியது. பிறகு இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது உண்மை. இதில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று கூறியது.

தாக்குதல் நடத்திய போது, ஆக்டிவேட்டில் இருந்த செல்போன்களும், செயற்கைகோள் ஆதாரங்களையும் இந்தியா ஆதாரமாக வெளியிட்டது.
மேலும், பாகிஸ்தான் இறந்தவர்களின் சடலங்களை எரித்து ஆற்றில் வீசியிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதை ஒருவர் நேரில் பார்த்துள்ளார்.

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு:
புல்வாமாவில் தாக்குதல் நடத்திய பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் முகாம் அமைத்து தங்கியிருந்தனர். மேலும், இவர்கள் தங்கியிருந்தை மத்திய அரசு செயற்கைகோளுடன் கண்காணித்து வந்தது. தீவிரவாதிகள் முகாம் மீது மிராஜ் 2000 போர் விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதிய ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் 300 பேர் கொல்லப்பட்டுள்ளது இதன் மூலம் உண்மை என தெரியவந்துள்ளது. இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிப்.26ம் தேதி தாக்குதல்:
இந்தியா தாக்குதல் நடத்தியது: காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு என்ற தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக கடந்த பிப்ரவரி 26ம் தேதி பாகிஸ்தான் பாலகோட்டில் இந்தியா விமாப்படை தாக்குதல் நடத்தியது.

1000 கிலோ வெடி மருந்து:
இதில் ஆயிரம் கிலோ வெடி மருந்துகளை மிராஜ் 2000 விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 300 தீவிரவாதிகள் பலியானதாக தகவல் வெளியானது. இதை பாகிஸ்தான் மறுத்து வந்தது.

300 செல்போன் ஆக்டிவேட்:
இந்நிலையில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முன் அவர்கள் பயன்படுத்தி வந்த செல்போன்கள் ஆக்வேடில் இருந்துள்ளன.

தொழில்நுட்ப ஆதாரம்:
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது, ஒவ்வொரு ஆதரமாக வெளியாகி வருகின்றது. இதில், தொழில்நுட்பத்தின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 300 செல்போன் அந்த நேரத்தில் உச்சபட்ச சிக்னல் உடன் ஆக்டிவேட் உடன் இருந்துள்ளது. இது தாக்குதல் நடக்கும் முன்பு வரை.

செல்போன் சிக்னல் கருவிகள்:
தொலைபேசி சிக்னல்களுக்கான கருவிகளும் தீவிரவாதிகளின் முகாம்களில் இருந்துள்ளது. இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் அவைகள் சீர்குலைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழப்பு நிச்சயம்:
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்த குறிப்பான தகவல்கள் இல்லை. எனினும் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பது மட்டும் வெளிவாக தெரியவருகின்றது.

விமானப்படை தலைவர் உறுதி:
இந்த தாக்குதல் நடத்தப்பட்டது உண்மை. இதில் தீவிரவாதிகளின் முகாம் அடியோடு அழிக்கப்பட்டன. தீவிரவாதிகளை அழிப்பது எங்களின் இலக்கு. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள் என்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது. இதை அரசு விரைவில் வெளிப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

புதிய தகவல்வெளியானது:
பாலகோட் தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் சடலங்கள் எரிக்கப்பட்டதாகவும், ஆற்றில் வீசப்பட்டதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடயங்கள் மறைப்பு:
பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்து முடிந்த பின்னர், அந்த இடங்களை, பாகிஸ்தான் அதிகாரிகள், தாக்குதல் எதுவுமே நடக்காதது போல் மாற்ற முயன்றதை நேரில் பார்த்ததாக ஒருவர் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைக்காட்சிக்கு பேட்டி:
இதில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதை அடுத்து, சிலரது சடலங்களை தீயிட்டு எரித்ததாகவும், ஆற்றில் தூக்கி வீசியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications