வெடித்து சிதறிய செல்போன்: ஆசிரியர் பரிதாப பலி.. எந்த மாடல்? நடந்தது என்ன?
செல்போன்கள் வெடிப்பது இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மகாராஷ்டிராவில் பைக் ஓட்டும் போது ஸ்மார்ட்போன் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ABP Majha வெளியிட்ட தகவலின்படி, மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுரேஷ் பிகாஜி சங்கரமே என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, அவரது பாக்கெட்டில் நத்திங் (Nothing) துணை பிராண்டான சிஎம்எப் போன் 1 (CMF Phone 1) வெடித்ததால் பரிதாபமாக இறந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தேசிகஞ்ச் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும் சுரேஷ் பிகாஜி சங்கரமே உடன் பைக்கில் வந்த மற்றொரு நபர் பலத்த காயம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஒரு மாதத்திற்கு முன்பு வாங்கப்பட்டது என்றும், அவர் பைக்கில் போகும் போது அவரின் பாக்கெட்டில் இருந்து வெடித்ததால் பரிதாபமாக இறந்தார் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன் வெடிப்புக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது. இருப்பினும்,பல்வேறு ஆதாரங்களின் அறிக்கைகளின்படி, ஸ்மார்ட்போனின் பேட்டரியில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு போன் வெடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்தச் சம்பவம் குறித்து நத்திங் நிறுவனம் சார்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதேபோல் செல்போன் வெடிப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் செல்போனில் இருக்கும் பேட்டரி. சில சமயம் பேட்டரி சூடாகி பருமனாகி வெடித்து சிதறுகிறது.பேட்டரி வெடிப்பதற்கு காரணம், சார்ஜர் மட்டும்தான். ஒரு மொபைல் போனில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரியை பொருத்தே அதற்கான சார்ஜர் வழங்கப்படும். ஆனால் வேறுஒருவரின் சார்ஜரை மாற்றிப் போடும் போது வோல்ட் சப்ளையில் மாற்றம் அடைகிறது.
உதாரணமாகக் குறைந்த எம்ஏஹெச் பவர் கொண்ட பேட்டரியில் அதிக வோல்ட் சப்ளை உள்ள சார்ஜர் போடும் போது பேட்டரி பருமன் அடையத் தொடங்குகிறது. இதனால் சார்ஜ் சரியாக நிக்காமல் அடிக்கடி பேட்டரி லோ ஆகும். அதன் காரணமாக மொபைல் போன் நீண்ட நேரமோ அல்லது இரவு முழுவதுமோ சார்ஜ் போடும் நிலை ஏற்படுகிறது. அப்படி பேட்டரி பருமன் அடைந்துக் கொண்டே வருகையில் ஒருகட்டத்தில் வெடித்து சிதறுகிறது. எனவே மொபைலுக்கு என்று வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டும் சார்ஜ் போடுதல் என்பது முக்கிமான ஒன்று.
அதேபோல் செல்போனில் பேட்டரி மாற்றும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், சரியான மொபைலுக்கு சரியான எம்ஏஹெச் பேட்டரி போட வேண்டும். விலை குறைவு என்று சாதாரன பேட்டரி பொருத்தினால், செல்போன் பயன்பாடு அதிகமாக இருக்கும் போது போன் உடனடியாக சூடாகி வெடித்து விடும்.
ஸ்மார்ட்போனின் பேட்டரி எப்போதும் சரியான ஆரோக்கியத்துடன் இருக்க 20%க்கு கீழ் சார்ஜ் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் 20 சதவீதம் சார்ஜில் இணைத்து 90 சதவீதம் வரை சார்ஜ் செய்வது பேட்டரியை நீண்ட காலம் பழுதாகாமல் பராமரிக்க உதவும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நீங்கள் ஃபாஸ்ட் சார்ஜரில் சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் பேட்டரி 0%-ல் இருந்து சார்ஜ் செய்யும்போது உங்களது போன் சூடாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே எப்போதும் உங்களது ஸ்மார்ட்போனை ஆஃப் ஆகும் வரை பயன்படுத்தாதீர்கள்.

ஸ்மார்ட்போன் ஒரு வேலை தண்ணீருக்குள் விழுந்தால் அதை சிறிது நேரம் கலட்டி வைத்து விட்டு ஆன் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் ஒருவேலை ஆன் ஆகலாம் ஆனால் அதை அப்படியே சார்ஜ் போடும் போது சார்ட்டேஜ் ஏற்பட்டு பேட்டரி உடனடியாக சூடாகி வெடித்துவிடவும் வாய்ப்பு உள்ளது. எனவே முறையாக சர்வீஸ் செய்த பிறகு ஆன் செய்ய வேண்டும்.
மொபைல் போன் பேட்டரி சேதமாவதைத் தவிர்க்க எப்போதுமே குளிர்ந்த இடத்தில் வையுங்கள். அதற்கு வேண்டி ஃப்ரிட்ஜில் எடுத்து வைக்க வேண்டாம். அதாவது அறை வெப்பநிலையிலேயே வெயில் அதிகம் படாத இடத்தில் செல்போனை வைப்பது பேட்டரி மற்றும் போனுக்கும் பாதுகாப்பானது.


Click it and Unblock the Notifications








