Vodafone ராக்ஸ்.. அம்பானி ஷாக்ஸ்.. Jio கிட்ட இப்படி ஒரு பிளானே இல்ல.. தினமும் 4GB டேட்டா.. ரூ.500 பட்ஜெட்ல!
Vodafone 4GB Per Day Plan: ஏன் எதற்கு என்கிற சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) ஆகிய 2 டெலிகாம் நிறுவனங்களிடமும் தினமும் 4ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டம் இல்லை. இவ்விரு நிறுவனங்களுமே தத்தம் ப்ரீபெய்ட் பிரிவின் கீழ் அதிகபட்சம் டெய்லி 3ஜிபி டேட்டாவை வழங்கும் திட்டங்களை மட்டுமே கொண்டுள்ளன. ஆனால் வோடாபோன் ஐடியா அப்படி இல்லை. இது தினமும் 4ஜிபி டேட்டாவை வழங்குமொரு திட்டத்தை தன்வசம் கொண்டுள்ளது. அதென்ன திட்டம்? அதன் விலை என்ன? வேலிடிட்டி என்ன? நன்மைகள் என்னென்ன? இதோ விவரங்கள்:
நாம் இங்கே பேசுவது வோடாபோன் ஐடியாவின் ரூ.539 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றித்தான். விஐ-யின் ஹீரோ அன்லிமிடெட் தொகுப்பின் கீழ் உள்ள இந்த திட்டம் தான் - தினமும் 4ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆக இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு மொத்தம் 112ஜிபி டேட்டா கிடைக்கும்.

தினசரி டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு (அதாவது டெய்லி 4ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு) இந்த திட்டத்தின் டேட்டா ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறையும். இதோடு சேர்த்து டேட்டா டிலைட்ஸ் (Data delights) நன்மையின் கீழ் ஒவ்வொரு மாதமும் 2ஜிபி வரையிலான பேக்கப் டேட்டாவும் முற்றிலும் இலவசமாக கிடைக்கும். இதை பெற 121249-க்கு டயல் செய்ய வேண்டும் அல்லது விஐ ஆப் (vi App) வழியாக வழியாக உரிமை கோர வேண்டும்.
எல்லாவற்றை விட முக்கியமாக இந்த திட்டத்தின் கீழ் வீக்கென்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend data rollover) பலனும் கிடைக்கும். இதன்கீழ் ஒரு வாரத்தின் திங்கள் முதல் வெள்ளி வரையிலாக நீங்கள் பயன்படுத்தாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறு ஆகிய கடைசி 2 தினங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.
மற்ற நன்மைகளை பொறுத்தவரை, வோடாபோன் ஐடியா ரூ.539 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100இலவச எஸ்எம்எஸ்களும் அணுக கிடைக்கும். இலவச எஸ்எம்எஸ்களுக்கான ஒதுக்கீட்டை மீறிவிட்டால், அதாவது இலவசமாக கிடைக்கும் 100 எஸ்எம்எஸ்களை அனுப்பிய பிறகு, ஒவ்வொரு எஸ்எம்எஸ்-க்கும் கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் மற்றும் எஸ்டிடி எஸ்எம்எஸ்களுக்கு முறையே ரூ.1 மற்றும் ரூ 1.50 பைசா கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் இந்த திட்டத்தில் பிங்கே ஆல் நைட் (Binge All Night) பலனும் கிடைக்கும். இதன் கீழ் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை,எந்த விதமான கூடுதல் கட்டணமின்றி சர்ஃப், ஸ்ட்ரீம் மற்றும் ஷேர் செய்ய முடியும். ஒட்டுமொத்தமாக இது வெறுமனே டெய்லி 4ஜிபி டேட்டாவை வழங்குமொரு வித்தியாசமான திட்டம் மட்டுமல்ல; கொடுக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 200% வொர்த் ஆன ஒரு திட்டமாகும்.
சமீபத்தில் இந்நிறுவனம் ரூ.175 க்கு ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இது ஆக்டிவ் சர்வீஸ் வேலிடிட்டி இல்லாத ஆனால் ஓடிடி சந்தாக்களை வழங்கும் ஒரு டேட்டா வவுச்சர் ஆகும். இதன் கீழ் டேட்டாவும் கிடைக்கும் கூடவே ஒரே லாக்இன்-ஐ பயன்படுத்தி ஏராளமான ஓடிடி இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்கும் விஐ மூவீஸ் & டிவி சூப்பர் சந்தாவும் ( Vi Movies & TV Super subscription) இலவசமாக கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் ஜீ5 (ZEE5), சோனி லைவ் (SonyLIV), பேன்கோட் (FanCode), அட்ராங்கி (Atrangi), கிளிக் (Klikk), சாவ்பால் (Chaupal), நம்மபிளிக்ஸ் (NammaFlix), மனோரமா மேக்ஸ் (Manorama MAX), பிளேபிலிக்ஸ் (PlayFlix), டிஸ்ட்ரோ டிவி (Distro TV), ஷீமாரூ மீ (Shemaroo Me), ஹாங்காமா (Hungama), யப் டிவி (YuppTV), நெக்ஸ்ஜிடிவி (NexGTv) மற்றும் பாக்கெட் பிலிம்ஸ் (Pocket Films) ஆகிய ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும்; கூடவே 10ஜிபி டேட்டாவும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








