Home
News

இனிமே Jio ரீசார்ஜ்னா ரூ.175 தான்.. 28 நாள் வேலிடிட்டி, 10GB டேட்டா, 11 OTT தளங்கள்.. அள்ளி கொடுத்த அம்பானி!

செட்டியார் இது ரேர் பீஸ் என்று கூறும் அளவிற்கு முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் கீழ் ஒரு ரேர் ஆன ரீசார்ஜ் உள்ளது. அந்த திட்டத்தின் விலை ரூ.175 (Jio Rs 175 Plan) ஆகும். இந்த திட்டத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதோ விவரங்கள்:

ரூ.175 திட்டம் ஏன் மிகவும் அரிதான திட்டம் என்றால்.. ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் இலவச ஓடிடி நன்மைகளுடன் வரும் ஒரே ஒரு டேட்டா பேக் இது மட்டும் தான். அதாவது இது வழக்கமான டேட்டா பேக்குகளை போல டேட்டாவை நன்மையை மட்டும் வழங்காமல், டேட்டாவோடு சேர்த்து 11 ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களையும் வழங்குகிறது.

இனிமே Jio ரீசார்ஜ்னா ரூ.175 தான்!

ரூ.175-ன் கீழ் எவ்வளவு டேட்டா கிடைக்கும்? என்னென்ன ஓடிடி தளங்களுக்கான அணுகல்கள் கிடைக்கும் ஜியோவின் ரூ.175 திட்டமானது 10ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவுடன் வருகிறது. கூடவே இது சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5),ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளஸ் (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+) ஆகிய பிரபலமான ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும்.

கூஓடவே சன்நெக்ஸ்ட் (SunXNT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சௌபால் (Chaupal), ஹொய்சொய் (Hoichoi) மற்றும் ஜியோ டிவி (JioTV) உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். முன்னரே குறிப்பிட்டபடி ஜியோவிலிருந்து நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பிற டேட்டா வவுச்சர்களும் உள்ளன, ஆனால் அவைகள் எதுவும் ரூ.175-ஐ போல ஓடிடி நன்மைகளுடன் வரவில்லை.

ரூ.175-ன் கீழ் கிடைக்கும் ஜியோசினிமா பிரீமியம் சந்தாவிற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். இது கூப்பன் வடிவில் உங்களுடைய மை ஜியோ அக்கவுண்ட்டில் கணக்கில் வரவு வைக்கப்படும். அதாவது ஓடிடி நன்மைகளுக்கான வேலிடிட்டி மட்டுமே கிடைக்கும். இதுவொரு டேட்டா பேக் என்பதால் இதற்கென தனியாக சர்வீஸ் வேலிடிட்டி இருக்காது. ஆக்டிவ் ஆக இருக்கும் பேஸிக் திட்டம் இல்லாமல் இந்த டேட்டா வவுச்சரை ரீசார்ஜ் செய்ய முடியாது.

சமீபத்தில் நிறுவனம் ரூ.11 மதிப்புள்ள புதிய டேட்டா வவுச்சரை அறிமுகம் செய்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஜியோவின் ரூ.11 டேட்டா வவுச்சர் ஆனது 1 மணிநேர வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு 10ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

இது மிகவும் விரைவான டேட்டா பயன்பாட்டிற்கான ஒரு டேட்டா வவுச்சராகும். அதாவது ஒரே நேரத்தில் அதிக அளவிலான டேட்டா தேவைப்படும் பயனர்களுக்கு, அல்லது அதிக சைஸ் கொண்ட ஃபைலை பதிவிறக்கம் செய்ய விரும்பும் பயனர்களுக்கு அல்லது உயர்தர வீடியோவை ஸ்ட்ரீமிங் செய்ய விழையும் பயனர்களுக்கு ஏதுவான திட்டமாக இருக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ சேவையின் கீழ் உள்ள மிகவும் விலையுயர்ந்த டேட்டா வவுச்சர் ரூ.359 ஆகும். இது 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியுடன் வருகிறது மற்றும் வாடிக்கையாளர்களுக்கு 50ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. மேலும் ஜியோவின் டேட்டா பிளான் பிரிவின் கீழ் ரூ.289 மற்றும் ரூ.219 ஆகிய திட்டங்களும் உள்ளன. இவ்விரு திட்டமும் முறையே 40ஜிபி மற்றும் 30ஜிபி அளவிலான டேட்டாவை 30 நாட்கள் என்கிற வேலிடிட்டியின் கீழ் வழங்குகின்றன.

இதேபோல ஜியோவிடம் ரூ.49 திட்டமும் உள்ளது. இந்த டேட்டா பேக்கின் வேலிடிட்டி 24 மணிநேரம் அல்லது 1 நாள் ஆகும். இதன் கீழ் உங்களுக்கு அன்லிமிடெட் டேட்டா கிடைக்கும். மேற்கண்ட எல்லா திட்டங்களுமே ஆக்டிவ் ஆக உள்ள பேஸிக் ப்ரீபெய்ட் பிளான் இல்லாமல் வேலை செய்யாது என்பதை மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

Best Mobiles in India

English summary
One and Only Plan From Jio Which Offers 10GB Data Along With 11 OTT Benefits Price Rs 175
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X