Home
News

நோ லிமிட்... நீ இறங்கி ஆடு கபிலா.. Jio SIM-க்கான 5ஜி திட்டம்.. ஒரே ரீசார்ஜில் 56 நாளுக்கு ஓஹோன்னு நன்மைகள்!

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது, அதன் பயனர்களுக்காக 56 நாட்கள் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் 5ஜி (Unlimited 5G) நன்மையுடன் வருகிறது என்பதால், இதை 5ஜி திட்டம் (5G Plan) என்றும் குறிப்பிடலாம்.

நினைவூட்டும் வண்ணம் தினமும் 2ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டாவை வழங்கும் திட்டங்களில் மட்டுமே இந்த அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மை கிடைக்கிறது. அதிக செலவின்றி ஜியோவின் 5ஜி சேவையைபெற விரும்பினால், ஜியோ சேவையின் கீழ் கிடைக்கும் இந்த திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். நாம் இங்கே பேசும் திட்டத்தின் விலை ரூ.629 ஆகும்.

Jio SIM-க்கான 5ஜி திட்டம்.. ஒரே ரீசார்ஜில் 56 நாளுக்கு ஓஹோ!

இந்த ரூ.629 திட்டத்தின் மூலம், பயனர்கள் 56 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறுகிறார்கள். ஜியோவின் இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இது உண்மையான வரம்பற்ற 5ஜி டேட்டாவை வழங்குகிறது. அதாவது 5ஜி-ஐ பொறுத்தவரை, பயனர் எவ்வளவு டேட்டாவை பயன்படுத்தலாம் என்பதற்கு எந்த வரம்பும் அல்லது கட்டுப்பாடும் இல்லை.

ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியாளர்கள் ஆன பார்தி ஏர்டெல் (Airtel) மற்றும் வி (Vi) என்கிற வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்களிடம் கூட, இதேபோன்ற அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைத்தாலும், முறையே 30 மற்றும் 28 நாட்களுக்கு 300ஜிபி என்ற வரம்பு உள்ளது.

ஆனால் ரூ.629-ன் கீழ் அத்தகைய வரம்பு இல்லை. இந்த ஒரு காரணத்திற்காகவே ஜியோவின் 5ஜி சேவை ஆனது நாட்டின் சிறந்த 5ஜி சேவையாக திகழ்கிறது. 5ஜி கவரேஜ் மற்றும் கிடைக்கும்தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டாலும் கூட, முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவே முன்னணியில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.629 திட்டத்தின் கீழ் கிடைக்கும் நன்மைகள்: ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.629 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) மற்றும் தினமும் 2ஜிபி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 56 நாட்கள் சர்வீஸ் வேலிடிட்டியை கொண்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இதனுடன் வரம்பற்ற 5ஜி நன்மையும் இணைக்கப்பட்டுள்ளது.

5ஜி டேட்டா மற்றும் 56 நாட்கள் சேவை செல்லுபடியாகும் காலத்தை வழங்கும் ஜியோவின் ஒரே திட்டம் இதுவாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்துடன் பெரிய அளவிலான ஓடிடி (ஓவர்-தி-டாப்) நன்மைகள் எதுவும் இணைக்கப்படவில்லை. இருப்பினும், நீங்கள் மதிப்புமிக்க மற்றும் அதிக விலை கொண்ட கூகுள் ஏஐ ப்ரோ (AI Pro) சந்தாவை பெறுவீர்கள்.

இது இந்தியாவில் உள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. 18 மாதங்களுக்கு எந்த கூடுதல் செலவும் இல்லாமல் ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஏஐ ப்ரோ சந்தா ஆகும். இதில் உள்ள ஒரே நிபந்தனை என்னவென்றால், பயனர் ரூ.349 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள ஜியோ திட்டத்தின் மூலம் தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது மட்டுமே ஆகும்.

இதோடு சேர்ந்து கிட்டத்தட்ட எல்லா வகையான ஓடிடிகளும் வேண்டுமென்றால் ரிலையன்ஸ் ஜியோ ரூ.200 டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்யலாம்.ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.200 திட்டம் ஆனது ஓடிடி பாஸ் (OTT pass) என்றும் அழைக்கப்படுகிறது. ஏனென்றால் 4ஜி டேட்டாவுடன் ஏராளமான ஓடிடி தளங்களுக்கான அணுகலையும் இது வழங்குவதால், ஜியோ நிறுவனம் இத்திட்டத்தை ஓடிடி பாஸ் என்று முன்னிலைப்படுத்துகிறது.

இந்த ரூ.200 திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தைக் (validity) கொண்டுள்ளது. இத்திட்டத்தில் பயனர்களுக்கு 30ஜிபி டேட்டா கிடைப்பதுடன், YouTube Premium, Amazon Prime Video, JioHotstar, SonyLIV, ZEE5, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanccha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, Times Play, Tarang Plus மற்றும் JioTV போன்ற ஓடிடி நன்மைகளும் கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
One and Only Jio Recharge Which Offer truly Unlimited 5G Data For 56 Days is Rs 629 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X