Jio ஸ்பெஷல் பிளான்.. ஒரே ஒரு ரீசார்ஜ்ல 3 மாசத்துக்கு மஜா.. டெய்லி 2GB, அன்லிமிடெட் 5ஜி, OTT, வாய்ஸ், SMS!
இந்த ஜியோ (Jio) திட்டத்தை, ஒரு ஸ்பெஷல் பிளான் (Special Plan) என்று கூறுவதற்கு நியாயமான காரணம் ஒன்று உள்ளது. அது என்னவென்றால்.. இந்த 2025 இல் ஒட்டுமொத்த ஜியோ ப்ரீபெய்ட் சேவையிலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி (Disney Plus Hotstar OTT) நன்மையை இலவசமாக வழங்கும் ஒரே ஜியோ ரீசார்ஜ் இது மட்டும்தான்!
குறிப்பாக ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி-ஸ்டார் இணைப்பு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலைப்பாட்டில், இன்றைய நிலவரப்படி, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அணுகலுடன், ஜியோவிடமிருந்து வரும் ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே உள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ.949 (Jio Rs 949 Plan). இதுவொரு அன்லிமிடெட் 5ஜி டேட்டா பிளானாகும் (Unlimited 5G Data Plan).

விரிவான நன்மைகளை பொறுத்தவரை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), டெய்லி 100 எஸ்எம்எஸ்கள் 2ஜிபி டெய்லி டேட்டாவுடன் வருகிறது. மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜியோசினிமா, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோடிவி ஆகிய கூடுதல் நன்மைகளையும் வழங்கும்
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் கிடைக்கும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் (Disney Plus Hotstar Mobile) நன்மையானது 90 நாட்கள் அல்லது 3 மாதங்களுக்கு அணுக கிடைக்கும். ஆனால் ரூ.949 திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எப்யுபி டேட்டா நுகர்வுக்கு பிறகு, இந்த திட்டத்தின் இண்டர்நெட் ஸ்பீட் 64கேபிபிஎஸ் ஆக குறைகிறது.
இது டெய்லி 2ஜிபி டேட்டாவை வழங்குமொரு திட்டமான இருப்பதால் இதன் கீழ் ஜியோவின் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையையும் (Jio Unlimited 5G Data Offer) அணுக கிடைக்கும். இதன்கீழ் ஜியோ 5ஜி நெட்வொர்க் கிடைக்கும் பகுதிகளில் உள்ள 5ஜி ஸ்மார்ட்போன்களை கொண்டுள்ள ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும்.
ஏர்டெல் நிறுவனத்தின் கீழும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை வழங்கும் திட்டங்கள் உள்ளன. ஆனால் 5ஜி சேவைகளை பெரிய அளவில் அறிமுகம் செய்யாததால் வோடபோன் ஐடியாவிடம் இருந்து அன்லிமிடெட் 5ஜி நன்மை எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் சமீபத்தில் இந்நிறுவனம் அன் லிமிடெட் 4ஜி திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது.
இதன்கீழ் வோடபோன் ஐடியாவானது தனது 12 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் அன்லிமிடெட் 4ஜி டேட்டா (Vodafone Idea Unlimited 4G Data) நன்மையை சேர்த்துள்ளது. இந்த 12 திட்டங்களும் முற்றிலும் புதிய திட்டங்கள் அல்ல. அவைகளின் வழக்கமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகளுடன் அன்லிமிடெட் 4ஜி டேட்டா நன்மை சேர்க்கப்பட்டுள்ளது.
எந்தெந்த திட்டங்களின் கீழ் வோடபோன் ஐடியாவின் அன்லிமிடெட் 4ஜி டேட்டா கிடைக்கும்? 28 நாட்கள் செல்லுபடியாகும் வோடபோன் ஐடியா ரூ.365 திட்டம், 1 மாதம் என்கிற வேலிடிட்டியின் வரும் வோடபோன் ஐடியா ரூ.379 திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட வோடபோன் ஐடியா ரூ.407 திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் வரும் வோடபோன் ஐடியா ரூ.408 திட்டம்.
28 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் வோடபோன் ஐடியா ரூ.449 திட்டம், 28 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் வரும் வோடபோன் ஐடியா ரூ.469 திட்டம், 84 நாட்கள் செல்லுபடியாகும் வோடபோன் ஐடியா ரூ.979 திட்டம், 84 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் வரும் வோடபோன் ஐடியா ரூ.994 திட்டம்.
84 நாட்கள் செல்லுபடியாகவும் வோடபோன் ஐடியா ரூ.996 திட்டம், 84 நாட்கள் செல்லுபடியாகவும் வோடபோன் ஐடியா ரூ.997 திட்டம் மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகவும் வோடபோன் ஐடியா ரூ.998 திட்டம், கடைசியாக 70 நாட்கள் வேலிடிட்டியின் கீழ் வரும் வோடபோன் ஐடியா ரூ.1198 திட்டம்.


Click it and Unblock the Notifications








