Home
News

Airtel பிராட்பேண்ட், DTH, IPTV கஸ்டமர்களுக்கு லிமிட்.. இனி ஒரு வீட்டில் எத்தனை கனெக்ஷன் இருக்கலாம்?

பார்தி ஏர்டெல் (Airtel) தனது ஏர்டெல் பிளாக் சேவையை ஒன் ஏர்டெல் என மறுபெயரிட தொடங்கியதில் இருந்து, கஸ்டமர்கள் மத்தியில் ஒரே குழப்பமும், கேள்விகளுமாக உள்ளது. பழைய ஏர்டெல் பிளாக் கஸ்டமர்களின் நிலை என்ன? புதிய சேவையின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள முன்பணம் எவ்வளவு? இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

ஆனால் உண்மையில் ஏர்டெல் பிளாக் மற்றும் ஒன் ஏர்டெல் ஆகிய இரண்டுமே சேவை அடிப்படையில் அப்படியேதான் இருக்கிறது, ஆனால் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது வாடிக்கையாளர்கள் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் மொபைல் (Airtel Postpaid Mobile), ஏர்டெல் வைஃபை (Airtel Wi-Fi) மற்றும் ஏர்டெல் டிடிஎச் /ஐபிடிவி இணைப்புகள் (Airtel DTH / IPTV connections) அனைத்தையும் ஒரே திட்டத்தின் கீழ் இணைக்கும் வசதியை வழங்குகிறது.

One Airtel லிமிட்.. இனி ஒரு வீட்டில் எத்தனை கனெக்ஷன் இருக்கலாம்?

ஏர்டெல் பிளாக்கை போலவே ஒன் ஏர்டெல் சேவையும் இந்தியா முழுவதும் கிடைக்கிறது. ஏர்டெல் வழங்கும் அனைத்து சேவைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் இணைப்பதன் மூலம், இது வாடிக்கையாளர்களுக்கு பல கட்டணங்களை செலுத்துவதிலும், அவை அனைத்தையும் தனித்தனியாக கண்காணிப்பதிலும் உள்ள சிரமத்தை கணிசமாக குறைக்கிறது.

ஆனால் ஒன் ஏர்டெல் சேவையின் கீழ் பயனர்கள் பெறக்கூடிய மொபைல், டிடிஎச் (டைரக்ட்-டு-ஹோம்) மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளுக்கு ஒரு உச்ச வரம்பு உள்ளது. அதாவது மேக்சிமம் லிமிட் (maximum limit) உள்ளது. ஒன் ஏர்டெல் சேவையின் கீழ் மொபைல் இணைப்புகள் போஸ்ட்பெய்ட் இணைப்புகளாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். ப்ரீபெய்ட் இணைப்புகள் இந்த சேவையின் கீழ் சேர்க்கப்படவில்லை.

எனவே, நீங்கள் மொபைல் இணைப்புகளை (Mobile Connections) தேர்வு செய்தால், நீங்கள் பெறக்கூடிய இணைப்புகளின் எண்ணிக்கைக்கு ஒரு வரம்பு (Limit) உள்ளது. ஆனால், அந்த வரம்பு உங்கள் முழு குடும்பத்தையும் (அனைத்து குடும்ப உறுப்பினர்களையும்) நீங்கள் வசதியாக சேர்க்கும் அளவுக்கு பெரியதாக உள்ளது.

இருப்பினும், நீங்கள் ஒரு அலுவலகத்தை நடத்துகிறீர்கள் என்றால், உங்களுக்கு என்டர்பிரைஸ் சேவைகள் (Enterprise services) தேவைப்படும், ஏனெனில் எந்தவொரு நடுத்தர அளவிலான நிறுவனத்திற்கும் ஒன் ஏர்டெல் போதுமானதாக இருக்காது. வைஃபை (WiFi) மற்றும் டிடிஎச் இணைப்புகளுக்கும் (DTH Connections) இது பொருந்தும்.

ஒன் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கான டிடிஎச், மொபைல் மற்றும் பிராட்பேண்ட் இணைப்புகளின் வரம்பு என்ன? நீங்கள் ஒன் ஏர்டெல் திட்டத்தின் கீழ் ஐபிடிவி (IPTV - இன்டர்நெட் புரோட்டோகால்) இணைப்புகளை பெறுகிறீர்கள் என்றால், நீங்கள் அதிகபட்சமாக ஒரு இணைப்பை பெறலாம். இது ஏர்டெல் நிர்ணயம் செய்துள்ள வரம்பு ஆகும்.

டிடிஎச், மொபைல் மற்றும் பிராட்பேண்டைப் பொறுத்தவரை, 20 இணைப்புகளுக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது போதுமான அளவிலான இணைப்புகள் ஆகும். அடிப்படையில், வீடுகள் அல்லது அலுவலகங்களில் உங்களுக்கு 20 வரையிலான டிடிஎச் அல்லது பிராட்பேண்ட் இணைப்புகள் தேவைப்படாது. இருப்பினும், மொபைல் இணைப்புகளை பொறுத்தவரை, ஒரு வீடு அல்லது அலுவலகம் 20 போஸ்ட்பெய்ட் இணைப்புகளைப் பெறும் சூழ்நிலை ஏற்படலாம். இதுவே சாத்தியமற்றதாக தோன்றலாம். அதனால் தான் ஏர்டெல் 20 இணைப்புகள் என்கிற வரம்பை நிர்ணயித்துள்ளது.

இந்த 20 போஸ்ட்பெய்ட் முதன்மை இணைப்புகளும் அதனுடன் மேலும் 9 கூடுதல் துணை இணைப்புகளை இணைக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். எனவே இதன் பொருள் என்னவென்றால், ஒன் ஏர்டெல் திட்டத்தின் கீழ், தொழில்நுட்ப ரீதியாக, பயனர்களுக்கு 9 x 20 = 180 போஸ்ட்பெய்ட் மொபைல் இணைப்புகள் வரை இருக்கலாம். இதன் சிறப்பு என்னவென்றால், அனைத்து இணைப்புகளும் ஒரே கட்டண பட்டியலின் கீழ் வரும்.

ஐபிடிவி சேவையை பொறுத்தவரை, ஒவ்வொரு முதன்மை ஐபிடிவி இணைப்புடனும் மூன்று துணை இணைப்புகள் வரை இணைக்கப்படலாம். டிடிஎச் இணைப்புகளுக்கும் இது பொருந்தும். அனைத்து சேவைகளையும் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைலில் உள்ள ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் (Airtel Thanks App) மூலம் நிர்வகிக்கலாம்.

மாற்றாக, பயனர்கள் டெஸ்க்டாப் அல்லது மொபைலில் உள்ள பிரவுசர் வழியாக ஏர்டெல் நிறுவனத்தின் இணையதளத்தில், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை பயன்படுத்தி தங்கள் ஏர்டெல் அக்கவுண்ட்டில் லாக்-இன் செய்யலாம். ஏர்டெல்லின் மொபைல் மற்றும் இணைய தளம் மூலம் சேவைகளை இடைநிறுத்தவும் செய்யலாம், சேர்க்கலாம் மற்றும் நீக்கலாம்.

மேற்கண்ட விவரங்களை எல்லாம் தவிர்த்து, ஒன் ஏர்டெல் தொடர்பாக வேறு ஏதேனும் குழப்பம் இருந்தால், பயனர்கள் வாடிக்கையாளர் சேவை குழுவை தொடர்பு கொள்ளலாம். இங்கே இன்னொரு நல்ல விஷயம் என்னவென்றால், ஏர்டெல் நிறுவனமானது ஆனது ஏர்டெல் ஒன் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு உயர்தர வாடிக்கையாளர் சேவை அனுபவத்தையும் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
One Airtel Service Has Maximum Limit for Postpaid Mobile Broadband DTH IPTV Connections
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X