Home
News

நீங்க ஆன்லைன் ஃபுட் பிரியரா? சண்டே 50 சதவீதம் தள்ளுபடி! ONDC ஆட்டம் ஆரம்பம்!

ஸ்விகி (Swiggy), சோமேட்டோ (Zomato) நிறுவனங்களையே தூக்கி சாப்பிடும்படியான அறிவிப்பை ஓஎன்டிசி (ONDC) வெளியிட்டுள்ளது. சூப்பர் சேவர் சண்டேஸ் (Super Saver Sundays) என்னும் ஆஃபர் மூலம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் 50 சதவீத தள்ளுபடியை வழங்கப்போகிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போதைய காலத்தில் பெரும்பாலான மக்களிடையே வீட்டில் சமைப்பதற்கான ஆர்வம் குறைந்துவிட்டது. ஏனென்றால், நமக்கு பிடித்த உணவுகளை ஆன்லைனில் ஆர்டர் செய்தால் 15 முதல் 30 நிமிடங்களுக்குள் வீடு தேடி வந்து விடுகிறது. இதனால், சமைப்பதற்கான நேரமும், கடைக்கு சென்று வாங்குவதற்கான நேரமும் மிச்சமாவதால் பலரும் அந்த பழக்கத்துக்கு மாறிவருகின்றனர்.

இனிமே சண்டே 50 சதவீதம் தள்ளுபடி! ONDC ஆட்டம் ஆரம்பம்!

நாள்தோறும் பல லட்சம் பேர் ஆன்லைனில் உணவுகளை ஆர்டர் செய்து வருவதால், அதுதொடர்பான நிறுவனங்களுக்கும் மிகப்பெரும் வளர்ச்சியை கண்டு வருகின்றன. இவற்றில் ஸ்விகி (Swiggy), சோமேட்டோ (Zomato), ஈட்ஷூர் (EatSure) ஆகிய மூன்று ஆன்லைன் ஃபுட் ஆர்டர் நிறுவனங்கள் முன்னணியில் இருப்பதால், இவற்றுக்கு அதிக ஆர்டர்கள் வருகின்றன.

குறிப்பாக, ஸ்விகி, சோமேட்டோவில் மட்டும் ஒரு நாளைக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. இவ்வளவு, பெரிய மார்க்கெட்டாக ஆன்லைன் ஃபுட் டெலிவரி உருவாகி வருவதால், அதற்கான கட்டணங்களையும் அந்தந்த நிறுவனங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட மத்திய அரசு ஓஎன்டிசி (ONDC) மூலம் ஆன்லைன் ஃபுட் டெலிவரி சேவையை தொடங்கியது.

அதுமட்டுமல்லாமல், அதிரடி ஆஃபர்களை வழங்கி வாடிக்கையாளர்களை மெல்ல மெல்ல தன்பக்கம் இழுத்து வருகிறது. இருப்பினும், ஸ்விகி, சோமேட்டோ அளவுக்கு ஆர்டர்கள் வரவில்லையென்பதால், பிரம்மாண்டமான திட்டத்தை அவிழ்த்துவிட்டுள்ளது. அதன்படி, சூப்பர் சேவன் சண்டேஸ் (Super Saver Sundays) என்னும் ஆஃபர் நாட்களை அறிவித்துள்ளது. அதாவது, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஓஎன்டிசி மூலம் ஃபுட் ஆர்டர் செய்வோருக்கு 50 சதவீத தள்ளுபடி கிடைக்கும்.

இந்த ஆஃபர் கிழமை, நாளை முதல் (ஜூன் 18) தொடங்குகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பல பேர் ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட திட்டமிட்டிருப்பீர்கள். அவர்களுக்கு, இந்த சூப்பர் சேவன் சண்டேஸ் மிகுந்த லாபத்தை தரும். அதோடு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படும் என்று ஓஎன்டிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆஃபரை ஃபாசோஸ் (Faasos), ஓவன் ஸ்டோரி (Oven Story), பெஹ்ரூஸ் பிரியாணி (Behrouz Biryani), மெக்டொனால்ட் (McDonald) வாவ்மொமொ (WowMomo), பீட்சா ஹட் (Pizza Hut), பார்பிக்யூ நேஷன் (Barbeque Nation) உள்ளிட்ட புகழ்பெற்ற நிறுவனங்களில் இருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்த ஓஎன்டிசி ஃபுட் ஆர்டரை பேடிஎம் (Paytm), போன் பே (PhonePe), மேஜிக்பின் (Magicpin) ஆகிய ஆப்கள் மூலமும் செய்துகொள்ள முடியும். உங்களிடம் பேடிஎம் இருந்தால், அதில் Search டேப்பில் ONDC என்று டைப் செய்யுங்கள். அப்போது, ONDC Store டேப் தோன்றும். அதை கிளிக் செய்தால், ஃபுட் ஆர்டர் பக்கம் தோன்றும். அதன்பின் ஆர்டர் செய்துகொள்ளலாம்.

இதேபோல பேடிஎம், மேஜிங் பின் ஆப்களிலும் செய்துகொள்ள முடியும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
ONDC Super Saver Sundays Announces 50 Percent Off On Food Orders Starting June 18
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X