சூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது: கிரண்பேடி வீடியோ ஆதாரம்., டுவிட்டரில் கிளம்பிய போர்

|

சூரியன் ஆனது பூமியின் பரப்பளவை விட சுமார் 333,000 மடங்கு பெரியது மற்றும் அதன் ஆற்றலை பொறுத்தவரை ஒவ்வொரு விநாடியும் 100 பில்லியன் ஹைட்ரஜன் குண்டுகளின் சக்தியை உற்பத்தி செய்கிறது. சூரியனின் மாபெரும் வெகுஜனம் (மாஸ்) ஆனது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து எட்டு கிரகங்களையும் ஈர்ப்பு விசையினால் சுற்றுப்பாதைக்குள் பூட்டி வைத்து உள்ளது.

மகத்தான எரிசக்தி வழங்கும் சூரியன்

மகத்தான எரிசக்தி வழங்கும் சூரியன்

அதே சூரியன் தான், அதன் மகத்தான எரிசக்தி மூலம் போதிய அளவுக்கு - அதாவது, திரவ நீருக்கான சரியான - வெப்பநிலையை பூமியின் மேற்பரப்பு மீது பாய்ச்சி, அதை வாழத் தகுந்த கிரகமாக உருவாக்கி வைத்துள்ளது.

அழகு மூலம் ஆச்சரியம்

அழகு மூலம் ஆச்சரியம்

விண்வெளியை மனிதர்களாகிய நாம் ஆராய்த்தொடங்கிய நாள் முதல் அதன் தூய்மையான அழகு மூலம் ஆச்சரியத்தையும் பிரமிப்பையும் அனுதினமும் பெற்றுக்கொண்டே இருக்கிறோம்.

இஸ்ரோ சூரியனை ஆராயத் திட்டம்

இஸ்ரோ சூரியனை ஆராயத் திட்டம்

இந்த செயற்கைக்கோள் ஆறு விஞ்ஞான ஆராய்ச்சி பேலோடுகளை சுமந்து செல்ல உள்ளது. அவை பூமியிலிருந்து 1.5 மில்லியன் கி.மீ தூரத்தில் உள்ள லக்ராஜியன் புள்ளி 1 (எல் 1) ஐ சுற்றி உள்ள ஒளிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. மேலும் இந்த நிகழ்வின் போது எந்தவொரு கிரகணமும் இல்லாமல் சூரியனை துள்ளியமாக ஆராய முடியும் என கண்காணிக்கப்படுகிறது. இது இஸ்ரோவுக்கு ஒரு பெரிய வெற்றியை அளிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கிரண்பேடி டுவிட்

கிரண்பேடி டுவிட்

இந்த நிலையில் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, சூரியனில் ஓம் சத்தம் கேட்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் சூரியனில் ஓம் என்ற சத்தம் கேட்பதாகவும், அது நாசாவால் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜியோ பட்ஜெட் பயணர்களா?- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்ஜியோ பட்ஜெட் பயணர்களா?- தினசரி 1.5 ஜிபி டேட்டா., இதோ 4 புதிய திட்டங்கள்

சூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது

சூரியனில் ஓம் சத்தம் கேட்கிறது

1.50 நிமடங்கள் கொண்ட அந்த காணொலியில் சூரியன், ஓம், சிவன் படங்கள் எல்லாம் இடம்பெற்றுள்ளன. அதோடு வீடியோ காணொலி பின்னால் ஓம் என்ற ஒலி கேட்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவிற்கு பல்வேறு தரப்பினரும் பதிலளித்து வருகின்றனர்.

டுவிட்டர் பதிவுக்கு பதிலளிக்கும் நெட்டிசன்கள்

இந்த டுவிட்டை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகின்றனர். அதோடு இந்த வீடியோவானது 1.56 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். அதோடு கிரண்பேடியின் இந்த பதிவுக்கு பலரும் ஆதரவும் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
Om sound coming from sun: kiran bedi tweet going viral

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X