பழைய டெலிபோனை AI assistant ஆக மாற்றிய இளைஞர்.. எவ்வளவு செலவு? என்னென்ன வசதிகள் இருக்கு?
உலகம் முழுவதும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது. அதுவும் இந்த ஏஐ தொழில்நுட்ப வசதி ஆனது பல்வேறு சிக்கலான வேலைகளையும் சுலபமாகச் செய்துதர உதவுகிறது. இந்நிலையில் பழைய டெலிபோன் ஒன்று AI உதவியாளராக மாறி இருக்கிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
அதாவது பெங்களூரைச் சேர்ந்த பங்கஜ் என்ற இளைஞர் தனது தாத்தாவின் பழைய டெலிபோன் ஒன்றை தற்போது நவீன ஏஐ உதவியாளராக மாற்றி உள்ளார். குறிப்பாக இந்த சம்பவம் இப்போது சமூக வலைத்தளங்களில் அதிக வைரலாகி வருகிறது.

தற்போது உள்ள நவீன ஸ்மார்ட் ஸ்பீக்கர்களுடன் பேசுவது அவருக்குச் சலிப்பை ஏற்படுத்தியதால், 1970-களில் வெளியான பழைய ரோட்டரி டயல் வகை டெலிபோனை பங்கஜ் மாற்றியமைத்துள்ளார். குறிப்பாக இந்த முழு அமைப்பையும் உருவாக்க அவருக்கு வெறும் ரூ.2307 மட்டுமே செலவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் இந்த பழைய போனின் ரிசீவரை எடுத்த உடன் ஏஐ சிஸ்டம் தயாராகிவிடும். அடுத்து அவர் Hey Kiri என்ற வார்த்தையைச் சொன்னதும் அது வேலையை தொடங்கும். குறிப்பாக இதன் மூலம் டாக்ஸி புக் செய்வது, மீட்டிங்குகளை திட்டமிடுவது, உணவு ஆர்டர் செய்வது, மின்னஞ்சல்களைச் சுருக்கமாகக் கேட்பது மற்றும் வீட்டில் உள்ள விளக்குகளைக் கட்டுப்படுத்துவது போன்ற பல வேலைகளைச் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பங்கஜ் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்த வீடியோவை பகிர்ந்த நிலையில் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர். வெளியே பார்ப்பதற்கு 1970-களின் விண்டேஜ் போன் போல இருந்தாலும். இதன் உள்னே அதிநவீன ஏஐ தொழில்நுட்பம் செயல்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
ஜிமெயில் ஏஐ சேவை
மேலும் சில வாரங்களுக்கு முன்பு ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய ஏஐ அம்சங்கள் கொண்டுவரப்பட்டது. அதாவது ஜிமெயில் (Gmail) தளத்தில் Help Me Write என்ற அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது நமக்கு மெயில் எழுதும் சிரமத்தைக் குறைக்கும். பயனர்கள் டைப் செய்யும்போதே ஜமெயிலில் இருக்கும் ஏஐ வாக்கியங்களைப் பரிந்துரைக்கும். அதுவும் இந்த அம்சம் வாக்கியங்களைச் சரி செய்யும் அல்லது முழு மெயிலை கூட டைப் செய்து கொடுக்கும்.
அதுவும் உங்களின் ஸ்டைலை புரிந்து கொண்டு, நீங்கள் டைப் செய்வது போலவே ஒரு மெயிலை ரெடி செய்து கொடுக்கும். அதாவது ஒரே மாதிரியான மெயிலாக இருக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மெயில் என்பதை போல இருக்கும். பின்பு அந்த வெர்ஷனை கூட நீங்கள் படித்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
அதேபோல் கூகுள் ப்ரோ மற்றும் அல்ட்ரா சேவைகளை வைத்திருக்கும் பயனர்களுக்கு ஸ்மார்ட் தேடல் (Smart Search) வசதி கிடைக்கிறது. அதாவது நாம் ஜிமெயிலில் பழைய மெயிலை தேட வேண்டும் என்று செர்ச் இடத்தில் டைப் செய்வோம். அது கீவோர்ட்டை ஒப்பிட்டு பல மெயில்களை எடுத்து வந்து கொடுக்கும். ஆனால் இந்த ஸ்மார்ட் தேடல் வசதி மூலம் கீவோர்டை டைப் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது நேரடியாக என்ன வேண்டும் அதை டைப்செய்யலாம்.

உதாரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் புக் செய்த விமான டிக்கெட் தேவை என்று எளிதாகக் கேள்வி கேட்கலாம். அதற்கு ஜிமெயில் உங்கள் இன்பாக்ஸை ஸ்கேன் செய்து துல்லியமான முடிவுகளை வழங்கும். மேலும் அமெரிக்காவில் மட்டும் சில பயனர்களிடம் ஏஐ இன்பாக்ஸ் (AI Inbox) என்ற வசதியும் சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது மெயில்களை ஸ்கேன் செய்து, கவனிக்கப்படாத நினைவூட்டல்கள், செய்ய வேண்டிய வேலைகளை நமக்கு எடுத்து வந்து காட்டும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் கூகுள் நிறுவனத்தின் லார்ஜ் லெங்குவேஜ் மாடலான ஜெமினி 3 (Gemini 3) மூலம் இயங்குகின்றன. ஜிமெயில் சேவையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய அம்சங்களை அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.
photo credits: the2ndfloorguy, Pankaj


Click it and Unblock the Notifications








