கொசுவத்தி நெருப்பால் வெடித்து சிதறிய பிரிட்ஜ்: முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்- எப்படி தெரியுமா?

|

பொதுவாக எலெக்ட்ரானிக் பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு தகவல் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளது. இதை பலரும் சாதாரண தகவலாக கடந்து செல்கினறனர்.

மொபைல் போன் வெடிப்பு நிகழ்வு

மொபைல் போன் வெடிப்பு நிகழ்வு

குறிப்பாக கையில் வைத்திருக்கும் மொபைல்களில் பலரும் கவனம் செலுத்துவதில்லை. மொபைல் போன் வெடித்து உயிரிழந்தார் என்ற செய்திகளை நாம் சர்வ சாதாரணமாக கடந்த செல்கிறோம். ஆனால் அதனால் வரும் விளைவுகளை அறிவதில்லை.

மொபைல் போன் வெடிப்பு காரணம்

மொபைல் போன் வெடிப்பு காரணம்

எந்த நேரமும் மொபைல் போனை உபயோகப்படுத்திக் கொண்டே இருப்பது. சார்ஜ் போட்டுக் கொண்டு உபயோகிப்பது, ஒரே நேரத்தில் பல ஆப்ஸ்களை ஓபன் செய்து பயன்படுத்துவது என்பதை அறவே தவிர்க்க வேண்டும். இதனால் பேட்டரி சூடாகி உடனடியாக போன் வெடித்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதெல்லாம் நமக்கு நடக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தை புறந்தள்ளவிட்டு முன்னெச்சரிக்கையோடு இருப்பது நல்லது.

அனைத்து எலெக்ட்ரானிக் பொருளையும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்

அனைத்து எலெக்ட்ரானிக் பொருளையும் பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும்

மொபைல் போன் மட்டுமில்லை ஒவ்வொரு எலக்ட்ரானிக் பொருளையும் பாதுகாப்போடு பயன்படுத்த வேண்டும். திருவாரூரில் ஒருவர் பிரிட்ஜ் மேல் கொசுவத்தி கொளுத்தி வைத்து விட்டு உறங்கியது தான் மீண்டும் உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இரவில் உறங்கச் சென்ற முதியவர்

இரவில் உறங்கச் சென்ற முதியவர்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மணவாளன் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரிசாமி. இவருக்கு 82 வயது. இவருக்கு நவநீதம் என்ற மனைவியும் ஸ்டாலின் என்ற மகனும் இருக்கின்றனர். இவர் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்க சென்றுள்ளார்.

பிரிட்ஜ் மேல் கொசுவத்தி வைத்த முதியவர்

பிரிட்ஜ் மேல் கொசுவத்தி வைத்த முதியவர்

பக்கிரிசாமி உறங்க செல்வதற்கு முன்னாள் எப்போதும் பிரிட்ஜை அணைத்து வைத்து விட்டு பிளக்கை கலட்டி வைப்பது வழக்கம். அதேபோல் படுக்க செல்வதற்கு முன்பாக பிரிட்ஜை ஆப் செய்துள்ளார். அதன்பின் பிரிட்ஜ் மேல் கொசுவர்த்தி கொளுத்தி வைத்து விட்டு உறங்கச் சென்றுள்ளார்.

பற்றி எரிந்த கொசுவத்தி நெருப்பு

பற்றி எரிந்த கொசுவத்தி நெருப்பு

பிரிட்ஜ் ஆப் செய்த பிறகு அது ஒரு சாதாரண பொருள் என்றே பலரும் நினைக்கிறோம். ஆனால் அதனுள் உள்ள குளிரூட்டி சாதனம் மற்றும் கேஸ் பிரிட்ஜ் உள்ளேயே இருக்கும். இந்த நிலையில் பிரிட்ஜ் மேல் வைக்கப்பட்டிருந்த கொசுவத்தி நெருப்பு பிரிட்ஜ் மேல் போடப்பட்டிருந்த துணி மீது விழுந்து முழுவதும் எரிய ஆரம்பத்துள்ளது.

உஷார்., எச்சரிக்கை தகவல்: தப்பித் தவறி கூட whatsapp-ல இத பண்ணாதீங்க!

உடல் கருகி உயிரிழந்த முதயவர்

உடல் கருகி உயிரிழந்த முதயவர்

துணி முழுவதும் எரிந்த சில விநாடியில் பிரிட்ஜ் பற்றி வெடித்து சிதறியது. இதில் பக்கிரசாமி உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் பக்கிரிசாமியின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
old man died on explodes refrigerator near thiruvarur

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X