ஆண்ட்ராய்டு டூ ஐபோன் 7 திருடப்பட்ட அம்சங்கள்.!!

By Meganathan
|

ஒவ்வொரு முறை புதிய ஐபோன் கருவி வெளியாகும் போதும் பல்வேறு எதிர்பார்ப்புகள் மற்றும் சர்ச்சைகள் ஆப்பிள் பிரியர்களை பந்தாடும். ஆண்ட்ராய்டு பயனர்களின் கேலி, கிண்டல்களில் துவங்கி புதிய கருவியில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் அதன் விலை என ஆப்பிளின் ஒவ்வொரு அம்சமும் அலசி ஆராயப்படும்.

கருவியின் முன்பதிவுகள் துவங்க இருக்கும் நிலையிலும், இந்தியாவில் அடுத்த மாதம் தான் இந்தக் கருவி கிடைக்கும் என்றாலும் ஆண்ட்ராய்டு பயனர்கள் இப்போதே இந்தக் கருவியை காலி செய்யத் துவங்கி விட்டனர். புதிய படம் வெளியாகும் முன்பே அது குறித்த பொய்க் கதைகளை பரப்புவதைப் போல் ஐபோன் குறித்த தகவல்களும் பரப்படுகின்றன.

என்ன தான் ஆப்பிள் உலகம் முழுக்க பிரபலமான பிரான்டாக இருந்தாலும் இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை என்னவோ குறைவு தான். உலகம் முழுக்க அதிகம் பயன்படுத்தும் இயங்குதளம் என்றால் அது ஆண்ட்ராய்டு தான். அந்த வகையில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இருந்து ஐபோன் 7 கருவியில் முதல் முறையாக வழங்கப்பட்டிருக்கும் சில அம்சங்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்.

டூயல் கேமரா

டூயல் கேமரா

ஆப்பிள் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த கருவியில் வழங்கப்பட்டதைப் போன்ற டூயல் கேமரா செட்டப் தனை எச்டிசி நிறுவனம் 2014 ஆம் ஆண்டிலேயே வழங்கிவிட்டது. எச்டிசி எம்8 கருவியில் டூயல் கேமரா கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.

எல்ஜி

எல்ஜி

இதோடு எல்ஜி ஜி5 கருவியிலும் டூயல் கேமரா வழங்கப்பட்டிருந்தது. மேலும் ஹூவாய் பி9 கருவியிலும் டூயல் கேமரா கொண்டிருக்கின்றது. இவை ஐபோன் 7 பிளஸ் கருவியை விடப் பாதி விலையில் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர் ப்ரூஃப்

வாட்டர் ப்ரூஃப்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் ஐபி67 சான்று கொண்ட வாட்டர் ப்ரூஃப் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் சோனியின் எக்ஸ்பீரியா இசட் கருவியில் 4 ஆண்டுகளுக்கு முன்பே வழங்கப்பட்டு விட்டது.

சாம்சங்

சாம்சங்

மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்7 மற்றும் எஸ்7 எட்ஜ் கருவிகளிலும் வாட்டர் ப்ரூஃப் அம்சம் குறைந்த விலையில் வழங்கப்படுகின்றது.

செல்பீ கேமரா

செல்பீ கேமரா

கடந்த ஆண்டு அறிமுமகமான ஐபோன் 6எஸ் / 6எஸ் பிளஸ் கருவிகளில் 5 எம்பி செல்பீ கேமராவினை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இம்முறை ஆப்பிள் நிறுவனம் 7 எம்பி செல்பீ கேமரா வழங்கியுள்ளது. ஆனால் ரூ.15,000 பட்ஜெட் விலையில் கிடைக்கும் கருவிகளிலேயே 8 எம்பி செல்பீ கேமரா கிடைக்கின்றது.

கேமரா

கேமரா

ஒரு வேலை ஆண்ட்ராய்டு கருவிகளின் கேமரா ஐபோன் 7 கேமராவிற்கு இணையாகாது என நினைத்தால் ஜியோணி எஸ்6எஸ் அல்லது ஒப்போ எஃப்1எஸ் கருவிகளை பயன்படுத்திப் பாருங்கள். இந்த இரு கருவிகளும் அதிக தரமுள்ள செல்பீக்களை வழங்குகின்றன.

ஹெட்போன் ஜாக்

ஹெட்போன் ஜாக்

ஆப்பிள் நிறுவனம் புதிய கருவிகளில் 3.5 எம்எம் ஜாக்தனை நீக்கிவிட்டு லைட்னிங் போர்ட் வழங்கியுள்ளது. எனினும் லீஇகோ நிறுவனம் இது போன்ற அம்சத்தினை லீஇகோ லீ2 மற்றும் லீமேக்ஸ் 2 கருவிகளில் யுஎஸ்பி டைப்-சி போர்ட்தனை சில மாதங்களுக்கு முன்பே வழங்கி விட்டது.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்

ஸ்டீரியோ ஸ்பீக்கர்

ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் கருவிகளில் ஆப்பிள் நிறுவனம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை வழங்கியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் சிறப்பான லவுட் ஸ்பீக்கர் அனுபவம் பெற முடியும். எனினும் இது போன்ற அம்சம் நிறைய ஆண்ட்ராய்டு கருவிகளிலும் கிடைக்கின்றது.

எச்டிசி

எச்டிசி

ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை வழங்கும் வழக்கத்தினை எச்டிசி நிறுவனம் முதன் முதலில் துவக்கி வைத்தது. இதன் பின் லெனோவோ மற்றும் மோட்டோரோலா போன்று பல்வேறு நிறுவன கருவிகளிலும் இந்த அம்சம் கிடைக்கின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Old Features the iPhone 7 and 7 Plus borrowed from Android Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X