ola, uber சேவை தொடக்கம்: ஏசி ஆஃப், 2 பேர் மட்டும் அனுமதி, டிரைவரோடு ஒரு செல்பி, இன்னும் பல,

|

ஓலா, உபர் சேவை நாட்டின் ஆரஞ்ச் மற்றும் க்ரீன் அலர்ட் உள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கு பல்வேறு பாதுகாப்பு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை

இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு 1389 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 762 ஆக அதிகரித்துள்ளது சற்று ஆறுதல் தரும் தகவலாக உள்ளது.

மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

இந்தியாவில் மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை எட்டியுள்ளது. நாட்டின் இரண்டாவது மோசமான பாதிப்புக்குள்ளான மாநிலமாக குஜராத் உள்ளது. குஜராத்தில் பாதிப்பு 5,500ஐ நெருங்கியுள்ளது. டெல்லியில் பாதிப்பு 4 ஆயிரத்து 500ஐ கடந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மூவாயிரத்து 500ஐ கடந்துள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் பாதிப்பு மூவாயிரத்தை நெருங்கியுள்ளது.

Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!Google-ல் இதைத் தேடவே கூடாது மீறினால் உங்களுக்குத் தான் ஆபத்து! உஷாராக இருக்க இதைப் படியுங்கள்!

புதிய நோய் தொற்றுகள்

புதிய நோய் தொற்றுகள்

அதேபோல் சமீபத்தில் புதிய நோய் தொற்றுகள் குறித்து பார்க்கையில்டெல்லி (427), குஜராத் (374), பஞ்சாப் (330), தமிழ் நாடு (266), அரியானா (66), ஜம்மு காஷ்மீர் (35) ஆகிய மாநிலங்கள் ஒரே நாளில் அதிக அளவிலான பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.
தொற்றுநோய்களின் அதிகரிப்பு பஞ்சாபில் எதிர்பாராத விதமாக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா நோய்தொற்று, கடந்த இரண்டு நாட்களில், கிட்டத்தட்ட 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

3-வது கட்டமாக ஊரடங்கு

3-வது கட்டமாக ஊரடங்கு

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ந் தேதி இரவு வரை தொடர இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு ஓரளவு தளர்த்தி இருக்கிறது. இந்த தளர்வுகள் அனைத்தும் 40 நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது.

அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்

அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம்

கொரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி தளர்வுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

ஓலா, உபர் சேவை

ஓலா, உபர் சேவை

இந்த நிலையில் ஓலா, உபர் சேவை தொடங்கப்பட்டுள்ளது சில வாடிக்கையாளர்களுக்கு அந்த நிறுவனம் சார்பில் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. ஓலா, உபர் சேவையானது ஆரஞ்ச், பச்சை அலர்ட் உள்ள பகுதிகளில் மட்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உபர் விதக்கப்பட்ட விதிகள்

உபர் விதக்கப்பட்ட விதிகள்

சேவை தொடங்கப்பட்டது குறித்து உபர் தெரிவிக்கையில், கார் அல்லது ஆட்டோ என எது புக் செய்தாலும் அதில் சமூக இடைவெளிவிட்டு அமர வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இரண்டு பேருக்கு மேல் பயணிப்பதை தவிர்க்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்

பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும்

அதேபோல் 65 மேல் உள்ள முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்டோர்கள் வெளியே வராமல் வீட்டிலேயே இருக்கும்படி உபர் சார்பில் அறிவுறத்தப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மாநில அரசும் மத்திய அரசும் இணைந்து எடுத்து வருகிறது. இருப்பினும் அதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்பது பிரதான உண்மையாகும்.

ஓலா, தனது இணையதளத்தில் தெரிவித்துள்ள விதிகள்

ஓலா, தனது இணையதளத்தில் தெரிவித்துள்ள விதிகள்

இது குறித்து ஓலா, தனது இணையதளத்தில் கூறியுள்ளதாவது, நாட்டின் 100 க்கும் மேற்பட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, அங்கு மீண்டும் சேவைகளைத் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஓலா கேப்ஸ், ஓலா ஆட்டோ மற்றும் ஓலா பைக் திங்கள் முதல் அந்த பகுதிகளில் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. டெல்லியில் ஓலாவின் சேவைகள் குர்கான் மற்றும் காசியாபாத்தில் கிடைக்கும்.

பாதுகாப்பைப் பொறுத்தவரை

பாதுகாப்பைப் பொறுத்தவரை

ஓலா கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கான பயணங்களை இடைநிறுத்தியுள்ளது. அனைத்து ஓட்டுநர்களும் முகமூடிகள், கிருமிநாசினிகள் பயன்படுத்த வேண்டும். ஓட்டுநர்கள் எல்லா நேரங்களிலும் முகமூடிகளை அணிய வேண்டும், ஒவ்வொரு சவாரிக்கு முன்னும் பின்னும் வண்டிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் பிறதரப்பினர் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றவில்லை எனக் கண்டால் பயணிகள் மற்றும் ஓட்டுநர் ஆகிய இருவரும் சவாரியை ரத்து செய்வதற்கான விருப்பங்கள் காண்பிக்கப்படும்.

ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு

ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு

இது தவிர, ஓட்டுநர் மற்றும் பயணிகள் பாதுகாப்பு நெறிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்த, அவர்கள் உண்மையில் முகமூடிகளை அணிந்திருக்கிறார்களா என்பதை சரிபார்க்கும் பயன்பாட்டின் மூலம் ஒரு செல்ஃபி எடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.

BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?BSNL ரூ.96 திட்டத்தில் அதிரடி மாற்றம்: நமக்கு லாபமா., நஷ்டமா?

சவாரிக்கு முன்னும் பின்னும் வாகனத்தை சுத்திகரிக்க வேண்டும்

சவாரிக்கு முன்னும் பின்னும் வாகனத்தை சுத்திகரிக்க வேண்டும்

பயணிகள் முகமூடி அணிவதும், சவாரிக்கு முன்னும் பின்னும் வாகனத்தை சுத்திகரிப்பதும் நிறுவனம் கட்டாயமாக்கியுள்ளது. அதேபோல் ஏ.சி.க்கள் அணைக்கப்படும் மற்றும் காற்று போக்கு இருக்கும் வகையில் அனைத்து ஜன்னல்களும் திறந்தபடியே இருக்க வேண்டும். அதே சமூக இடைவெளியை கடைபிடித்தே அனைத்து நடவடிக்கைகளும் இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

source: indiatimes.com

Best Mobiles in India

English summary
OLA, Uber resume services: ACs will be switched off, must following safety rules

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X