Home
News

மக்கள் பணத்தை சுரண்டாதீங்க.. Ola, Uber-க்கு இந்திய அரசு நோட்டீஸ்.. ஒரே இடம் ஆனா வேற-வேற ரேட்.. எப்படிங்க?

இந்தியாவின் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority- CCPA) முக்கிய டாக்ஸி நிறுவனங்களான ஓலா (Ola) மற்றும் உபர் (Uber) நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஓலா மற்றும் உபர் போன்ற டாக்ஸி சேவையை (taxi service) பயன்படுத்தும் நுகர்வோருக்கு அவர்களின் ஸ்மார்ட்போன் வகையைப் (smartphone model) பொறுத்து வேறுபட்ட விலை நிர்ணயம் (different range of price for users) செய்யப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக CCPA தற்போது நோடீஸ் (notice) அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் வெளியான ஒரு சமூக வலைதள பதிவில் (social media post) ஓலா (Ola) மற்றும் உபர் (Uber) போன்ற டாக்சி சேவை நிறுவனங்கள் பயனர்கள் பயன்படுத்தும் வெவ்வேறு விதமான ஸ்மார்ட்போன் மாடலின் (different smartphone model users) அடிப்படையில், அவர்களுக்கு ஒரே இடத்திற்கான பயணத்திற்கு வெவ்வேறு விதமான கட்டணங்களை வசூலிப்பது (different unfair of price for same place) ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டது.

மக்கள் பணத்தை சுரண்டாதீங்க.. Ola, Uber-க்கு இந்திய அரசு நோட்டீஸ்..

மக்கள் பணத்தை சுரண்டாதீங்க.. Ola, Uber-க்கு இந்திய அரசு நோட்டீஸ்:

குறிப்பாக ஆண்ட்ராய்டு போனில் (Android phone) ஒரு விலையையும், ஐபோனில் (iPhone) வேறு ஒரு விலையையும் நிறுவனங்கள் வசூலிப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரே இடத்திற்கு ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்கள் வெவ்வேறு விதமான கட்டணங்களை (two different price for same place in android and iPhone) வசூலித்ததை கண்டித்தும், கட்டண முறை அணைத்து பயனர்களுக்கு ஒரே மாதிரியானதாக நியமானதாக இல்லாததை கண்டித்தும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

வெளிப்படையான விலை ஏற்றத்தாழ்வுகள் குறித்த முந்தைய அவதானிப்புகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய அமைச்சர் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தள பதிவை தொடர்ந்து, பல்வேறு ஸ்மார்ட்போன்களில் இந்த முரண்பாடு சரிபார்க்கப்பட்டபோது, ஒரே இடத்திற்கான கட்டண முரண்பாடுகளை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) நேரடியாக உணர்ந்தது.

ஒரே இடத்திற்கு வெவ்வேறு போனில் வெவ்வேறு விலையா? என்ன கணக்கு? பதில் சொல்லுங்க Ola.. Uber?

அதேபோல், இது குறித்து நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட பல புகார்களைப் (customer complaints about unfair ola and uber price) பெற்றதை அடுத்து, CCPA மூலம் நுகர்வோர் விவகாரத் துறை, டாக்ஸி நிறுவனங்களிடமிருந்து பதில்களைக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சில குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் மாடல்களில் அதிக கட்டணங்களும், மற்றவை குறைந்த கட்டணங்களும் காட்டப்பட்டிருப்பதை சுட்டி காண்பித்து பதில் அளிக்கும் படி Ola மற்றும் Uber நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நுகர்வோர் குறைகளை நிவர்த்தி செய்வதையும், டாக்ஸி ஒருங்கிணைப்பாளர்களிடையே நியாயமான நடைமுறைகளை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பிரபலமான டாக்சி நிறுவனங்கள் தங்கள் விலை நிர்ணய வழிமுறைகளையும், இந்த கட்டண மாறுபாடுகளுக்கு பங்களிக்கும் காரணிகளையும் தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. CCPA-வின் இதுபோன்ற தலையீடு இது முதல் முறையல்ல, தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் பதிவு செய்யப்பட்ட புகார்கள் காரணமாக,ஆப்பிள் (Apple) நிறுவனத்திற்கு ஒரு நோட்டீசை இதற்கு முன்பு அனுப்பியிருந்தது.

Apple நிறுவனத்திற்கும் நோட்டீஸ் வழங்கிய CCPA:

இதில் iOS 18 மற்றும் அதற்குப் பிந்தைய பதிப்புகளுக்கான புதுப்பிப்புகளைத் தொடர்ந்து, ஐபோன்களில் செயல்திறன் சிக்கல்களைப் பற்றி நுகர்வோர் புகார் அளித்தனர். இந்தத் துறை இந்தக் குறைகளை ஆராய்ந்து, பயனர்கள் எழுப்பிய கவலைகளைத் தீர்க்க ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து பதிலைக் கோரியது. இதனை தொடர்ந்து தற்போது இந்த பட்டியலில் ஓலா மற்றும் உபர் சேர்ந்துள்ளது.

இந்த நிறுவனங்கள் நியாயமான நடைமுறைகளைப் பின்பற்றுவதையும், நுகர்வோரைச் சுரண்டாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்கான பரந்த முயற்சியை ஓலா, உபர் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ்கள் எடுத்துக்காட்டுகின்றன. CCPA எடுத்த நடவடிக்கைகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொழில்நுட்ப சேவைகளில் நுகர்வோர் நம்பிக்கையை வலுப்படுத்தும் அதே வேளையில், இந்தப் பிரச்சினைகளுக்கு தெளிவையும் தீர்வையும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் இனி நியாயமான விலையில் டாக்சி சேவை கிடைக்குமென்று நம்பப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Ola Uber Received Government CCPA Notice For Unfair Pricing For Customers Using Android and iPhone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X