சுதந்திர தினத்தில் வெளியாகும் ஓலா இ-ஸ்கூட்டர்- 18 நிமிடம் சார்ஜ் செய்தால் 75 கிமீ பயணிக்கலாம்!

|

ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சுதந்திர தினத்தன்று அதாவது ஆகஸ்ட் 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த ஓலா ஸ்கூட்டர் ஆனது மொத்தம் 10 வண்ணங்களில் வரும் என கூறப்படுகிறது. இதந் இளஞ்சிவப்பு நிறம் இன்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுதந்திர தினத்தன்று அறிமுகம்

சுதந்திர தினத்தன்று அறிமுகம்

சுதந்திர தினத்தன்று இதன் கிடைக்கும் தன்மை மற்றும் விவரக்குறிப்புகள் வெளியிடப்படும். ஓலாகேப்ஸ்-ன் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் டுவிட்டரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் வெளியீட்டு தேதியை அறிவித்தார்.

மெய்நிகர் நிகழ்வு மூலம் வெளியீடு

மெய்நிகர் நிகழ்வு மூலம் வெளியீடு

இந்த வெளியீட்டு நிகழ்வானது மெய்நிகர் நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த தினத்தில் ஓலா ஸ்கூட்டர் வெளியீட்டு தேதி மற்றும் விவரக்குறிப்புகள் தெரியவரும் மேலும் அந்த தினத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என அகர்வால் டுவிட் செய்துள்ளார்.

10 வண்ணங்களில் வரும் ஸ்கூட்டர்

10 வண்ணங்களில் வரும் ஸ்கூட்டர்

முன்னதாகவே ஓலாவின் ஸ்கூட்டர் 10 வண்ணங்களில் வரும் என்பது தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதன் இளஞ்சிவப்பு வண்ண வாகனத்தை அகர்வால் டுவிட் செய்தார். அதேபோல் இந்த ஸ்கூட்டரை தற்போது ரூ.500-க்கு முன்பதிவு செய்யலாம்.

18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் பயணம்

அதேபோல் இந்த ஸ்கூட்டர்களானது மேட் மற்றும் பளபளப்பு என இரண்டு விருப்பங்களில் வரும். இந்த ஸ்கூட்டர் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கிய 24 மணி நேரத்தில் 1 லட்சம் முன்பதிவுகளை பெற்றது. 400-க்கும் மேற்பட்ட நகரங்களில் மிகப்பெரிய வாகன சார்ஜிங் நெட்வொர்க்கை நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் இதை 18 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 75 கிலோமீட்டர் பயணிக்கலாம்.

ரூ.499 டோக்கன் தொகை

ரூ.499 டோக்கன் தொகை

ரூ.499 டோக்கன் தொகையாக முன்பதிவு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. "இந்தியாவின் இவி புரட்சி (இவி- எலக்ட்ரானிக் வெஹிக்கிள்) வெடிக்கும் ஆரம்பத்தில் இருக்கிறது. எங்களுடன் இணைந்து தங்கள் ஸ்கூட்டரை ஒதுக்கிய 100,000+ புரட்சியாளர்களுக்கு மிகப்பெரிய நன்றி" என பவிஷ் அகர்வால் டுவிட்டரில் குறிப்பிட்டார்.

இந்தியா முழுவதும் அமோக வரவேற்பு

"எங்கள் முதல் மின்சார வானத்திற்கு இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த மகத்தான பதிலுக்கு நான் மகிழ்ச்சியடைகிறேன்" எனவும் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார். உலகை நிலையான இயக்கத்திற்கு மாற்றுவதற்கான எங்கள் பணியில் இது ஒரு மகிப்பெரிய படி என கூறினார். ஓலா ஸ்கூட்டரை முன்பதிவு செய்து இவி புரட்சியில் இணைந்த அனைத்து நுகர்வோருக்கும் நன்றி என தெரிவித்தார். மேலும் இது ஆரம்பம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

புதிய ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்த மாத இறுதியில் நாட்டில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சிறந்த வகுப்பு துவக்க இடமும் கிடைக்கும் என கூறியுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பணிச்சூழலியல் இருக்கைகளுடன் வரும் என ஓலா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு பெரும் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.

முன்பதிவு செய்ய வழிமுறைகள்

முன்பதிவு செய்ய வழிமுறைகள்

இதை முன்பதிவு செய்ய olaelectric.com என்ற தளத்தை அணுகலாம். இதை முன்பதிவு செய்ய ரூ.499 செலுத்த வேண்டும். ஓலா தலைவரும் குழு தலைமை நிர்வாக அதிகாரியுமான பவிஷ் அகர்வால், நுகர்வோர் விருப்பங்களையும் வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்த மகத்தான வரவேற்பையடுத்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார். இவி புரட்சியில் இணைந்த நுகர்வோருக்கு நன்றி கூறுகிறேன் என குறிப்பிட்ட அவர் இது ஆரம்பம் மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Ola Electric Scooter Set to Launching in India on August 15 With 10 Different Colours

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X