இந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.!

|

எந்நாளும் பொது போக்குவரத்துக்களை பயன்படுத்துவோர் சில சமயங்களில், பொதுவாக அவசர சூழல்களில் கால் டாக்சி அல்லது ஆட்டோக்களில் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிச்சயம் ஏற்படும். அதுவும் ஓலா அல்லது உபெர் சேவைகளை தான் மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்

இந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.!

இந்நிலையில் ஓலா நிறுவனம் தனது வாடகை பை; சேவையை இந்தியாவின் 150நகரங்களில் விரிவாக்க செய்வதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் சிறந்த வளர்ச்சியை பெற்று வரும் ஓலா நிறுவனம் தொடர்ந்து தனது வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ள ஓலா பைக் சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.

குறிப்பாக அடுத்த 12மாதங்களில் மூன்று மடங்கு அதிக வளர்ச்சியை பெற வேண்டும் என்பதை ஓலா தனது குறிக்கோளாகவும் அறிவித்துள்ளது. தற்சமயம் இந்தியாவில் இரு சக்கர வாகனமான பைக்கின் சேவை மிகவும் அத்தியவசியமாகக் கருதப்படுகிறது. இதனால் நிச்சியம் வாடகை பைக் அனைத்து இடங்களிலும் நல்ல வரவேற்பை பெறும் என ஓலா நிறுவனம் சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.!

ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த புதிய சேவை பயணிகளுக்கு மட்டுமல்லாது பல லட்சம் இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வேலைவாய்ப்பாகவும் இருக்கும் எனவும், பின்பு இதற்காக 3லட்சம் பேருடன் களம் இறங்க உள்ளோம் என்று ஓலா விற்பனைப் பிரிவுத் தலைவர் அருண் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியாவில் மக்களின் போக்குவரத்து தேவையை சிறந்த முறையில் பூர்த்தி செய்து வருகிற ஓலா நிறுவனம். குறிப்பாக சிறிய நகரத்திலிருந்து பெரும் மெட்ரோ நகரங்கள் வரையில் சிறந்த சேவையாக ஓலா செயல்படுகிறது என ஸ்ரீநிவாஸ் தெரிவித்தார்.

இந்தியா: 150 நகரங்களில் ஓலா பைக் சேவை அறிமுகம்.!

ஓலா பைக் சேவை முதன்முதலாக இந்த புதிய சேவை முதலில் குர்கான், ஃபரிதாபாத் மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது தற்போதைய சூழலில் ஓலா நிறுவனத்தின் கீழ் மில்லியன் ஓட்டுநர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Ola Bike Centers Extends 150 Cities in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X