இஷ்ட ப்ரிம்டா அர்த்தபுஷ்டா- காலகேயர்கள் மொழியை திணிக்க முயற்சி: கிலிக்கிக்கு தனி இணையதளமே தொடக்கம்!

|

மகிழ்மதி எனும் நாட்டை போர் தொடத்து வெல்ல முயன்றவர்களே காலக்கேயர்கள். ஆனால் இந்த போரில் சாதுர்யமாக செயல்பட்டவர், கட்டப்பா என்ற போர் வீரரால் "பாகு" என்று அன்போடு அழைக்கப்படும் அமரேந்திர பாகுபலி.

வெறித்தனமாக போரிட்ட காலகேயர்கள்

வெறித்தனமாக போரிட்ட காலகேயர்கள்

இந்த போரில் காலகேயர்கள் அரக்கத்தனமாக செயல்பட்டு கட்டப்பாவின் படையால் உருவாக்கப்பட்ட தடுப்புச் சுவரை தகர்த்து எறிந்தனர். இந்த போரில் காலகேயர்கள் மகிழ்மதி வீரர்களை கொஞ்சம் கொஞ்சமாக வீழ்த்தினர்.

மரணம் உறுதி என்று நினைத்த மகிழ்மதி வீரர்கள்

மரணம் உறுதி என்று நினைத்த மகிழ்மதி வீரர்கள்

அதுமட்டுமின்றி மகிழ்மதி வீரர்களே தங்களுக்கு மரணம் உறுதி என்று நினைத்து அனைவரும் மரணம் மரணம் என்ற கோஷமிடும் அளவிற்கு, மகிழ்மதி கோட்டை வாயிலில் காலகேயர்கள் கொடியை பறக்கச் செய்தனர் காலகேயப் படை வீரர்கள்.

காலகேயத் தலைவனின் தலையெடுப்பவன் அரசன்

காலகேயத் தலைவனின் தலையெடுப்பவன் அரசன்

தனது சொந்த மகன் பல்வாள் தேவன் மற்றும் வளர்ப்பு மகன் பாகுபலி ஆகிய இருவரில் யார் காலக்கேயத் தலைவனின் தலையை எடுக்கிறார்களோ அவர்களே மகிழ்மதியின் அரசனாக முடிசூடுவார்கள் என்ற அந்த நாட்டின் ராஜமாதாவான சிவகாமிதேவி அறிவித்திருந்தார். இந்த போரில் பாகுபலி போர் முறைக்கு புறம்பாக துணியில் மண்ணெண்ணய் ஊற்றி அதை காலகேய வீரர்கள் மீது வீசினார். இந்த தாக்குதல் காலகேய வீரர்களுக்கு புதிது என்றாலும் அவர்கள் மனம் தளரவில்லை.

பாகுபலி நெஞ்சில் அம்பை எய்திய வீரர்கள்

பாகுபலி நெஞ்சில் அம்பை எய்திய வீரர்கள்

பல்வேறு சிறப்புமிக்க மகிழ்மதி நாட்டை ஆழ்வதற்கு காலகேய தலைவனின் தலை போதும் என்றால், அந்த கூட்டத் தலைவனின் வீரம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அந்த நாட்டு மக்கள் மகிழ்மதியின் முடிசூடா மன்னனாக பாகுபலியை நினைத்துக் கொண்டு இருந்தனர். இப்பேர்பட்ட புகழ் வாய்ந்த பாகுபலி நெஞ்சில் அம்பை எய்திய புகழ் படைத்த வீரர்கள்தான் காலக்கேயர்கள்.

உயிர் ஆசையை காட்டிய பாகுபலி

உயிர் ஆசையை காட்டிய பாகுபலி

காலக்கேயர்கள் வெற்றியை தன் வசம் உறுதியாக்கிக் கொண்டு இருந்த நேரத்தில், அமேரந்திர பாகுபலி என்ற வீரர் தன் வசியமிக்க சொல்லால் மகிழ்மதி வீரர்களை மீண்டும் போரிடச் செய்தார். அனைவருக்கும் உயிர் ஆசையை காண்பிக்கும் வகையில் யார் என்னோடு உயிர் வாழப்போகிறீர்கள் என்று கேட்க., கட்டப்பா முதல் அனைத்து வீரர்களும் நான் நான் என்று கத்திக் கொண்டு காலக்கேயர்களை கொலை செய்யத் தொடங்கினர்.

பல்வால் தேவனின் செயலால் விரக்தி அடைந்த காலகேயர்கள்

பல்வால் தேவனின் செயலால் விரக்தி அடைந்த காலகேயர்கள்

இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால், இந்த போர் நேரத்தில் மகிழ்மதி நாட்டில் இருந்த சிலரை காலக்கேயர்கள் பிணைக் கைதியாக பிடித்து வைத்திருப்பார்கள். எதிரி நாட்டு மக்களை கொலை செய்யக் கூடாது என்ற நோக்கோடு அவர்களை வைத்து மிரட்டும் நேரத்தில் பல்வாள் தேவன் என்ற இளவரசன் தங்கள் சொந்த நாட்டு மக்களையே கொன்று வீழ்த்துவார். பின்நாளில் பல்வாள்த் தேவனே மகிழ்மதி அரசனான கொடூர செயல் இன்னொரு கதை.

பல்வால் தேவனுக்கு காலகேயர்களே பரவால்ல

பல்வால் தேவனுக்கு காலகேயர்களே பரவால்ல

இந்த நொடியில் காலகேய தலைவனும், காலக்கேய வீரர்களும் ஒரு நொடியில் திகைத்து மன உளைச்சலுக்கு ஆழாகுவார்கள். இந்த நிகழ்வை உணர்ந்த மக்கள் இந்த கொடும் அரசனிடம் நாடு சிக்குவதற்கு காலக்கேயர்களிடமே சென்றிருக்கலாம் என நினைக்கத் தொடங்கினர்.

பாகுபலிக்கு இணையாக சண்டையிடும் காலகேய தலைவன்

பாகுபலிக்கு இணையாக சண்டையிடும் காலகேய தலைவன்

இது எல்லாம் ஒருபுறம் இருக்க பாகுபலி என்ற மாவீரனை கட்டப்பா எப்படி துரோகத்தால் பின்புறம் இருந்து குத்திக் கொலை செய்தாரோ. அதேபோல் தான் காலக்கேய தலைவனும் துரோகத்தால் வீழ்த்தப்பட்டார். ஆம்., பாகுபலியோடு காலக்கேய தலைவர் மும்முரமாக சண்டையிட்டுக் கொண்டிருப்பார்.

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட காலகேய தலைவன்

துரோகத்தால் வீழ்த்தப்பட்ட காலகேய தலைவன்

இருவருக்கும் உச்சக் கட்ட சண்டை நடந்துக் கொண்டிருக்கும் அப்போது பாகுபலி கத்தியை எடுத்து காலக்கேய தலைவரை குத்துவதற்கு நெருங்கி வருவார். அந்த சமயத்தில் ராஜமாதா சிவகாமி தேவியின் மகனும் பின்னாளில் மகிழ்மதியின் அரசனுமான பல்வால் தேவன், காலக்கேயனின் பின் தலையில் எதிர்பாரா நேரத்தில் தாக்கிக் கொள்வான்.

பாகுபலி புகழ் இருக்கும் வரை காலகேய தலைவனின் புகழும் இருக்கும்

பாகுபலி புகழ் இருக்கும் வரை காலகேய தலைவனின் புகழும் இருக்கும்

பல்வால் தேவன் தாக்காமல் இருந்திருந்தால் பாகுபலியை காலக்கேயர் சமாளித்திருப்பார் என அந்த நாட்டு வீரர்கள் எண்ணிய படி தலைவனை இறந்த சோகத்தில் தங்கள் நாட்டுக்கே திரும்புவார்கள். இந்த சூழ்ச்சி போரில் வெற்றி பெற்றதாக மகிழ்மதியும் வெற்றி விழா கொண்டாடும். காலக்கேயர்கள் வீழ்ந்து விட்டார்கள் என்று நினைத்தாலும். மகிழ்மதி மக்கள், கட்டப்பா உள்ளிட்ட அனைவரும் பாகுபலியை காலக்கேயர்களை வீழ்த்திய மாவீரன் என்றே புகழ்வார்கள். பாகுபலி புகழ் உள்ளவரை காலக்கேயர்கள் பெருமையும் தலைத்தோங்கும் என்பதில் ஆச்சரியப்பட இல்லை.

காலகேய மொழிக்கு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்

காலகேய மொழிக்கு உருவாக்கப்பட்டுள்ள இணையதளம்

இப்பேர் பட்ட புகழ் கொண்ட காலக்கேயர்கள் பேசும் மொழி முதலில் இக்கால மக்களால் விமர்சிக்கப்பட்டது காலப்போக்கில் பாராட்டுக்கும் உள்ளானது. இந்த மொழி தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்தும் வருகிறது. தற்போது இந்த மொழிக்கு ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

கிலிக்கி என பெயரிட்டு தனி இணையதளம்

கிலிக்கி என பெயரிட்டு தனி இணையதளம்

பாகுபலி படத்தில் காலகேயர்கள் மொழியை மீட்டெடுத்து எழுதிய மதன் கார்க்கி தற்போது இந்த மொழியை கொஞ்சம் கொஞ்சம் வளர்த்தும் வருகிறார். மேலும் இந்த மொழியை அனைவரும் கற்றுக் கொள்ளும் வகையில் தனி இணையதளத்தையும் உருவாக்கியுள்ளார்.

காலகேய மொழி இணையதளத்தை வெளியிட்ட ராஜமௌலி

காலகேய மொழி இணையதளத்தை வெளியிட்ட ராஜமௌலி

இந்த இணையதளத்துக்கு கிலிக்கி என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 3000 எழுத்துக்களும் உருவாக்கப்பட்டு அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த இணையதளத்தை பாகுபலியை வடிவமைத்த ராஜமௌலியே வெளியிட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Official websites opened for bahubali famous kalakeya kiliki language

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X