உஷாரய்யா உஷாரு.. அவசரப்பட்டு OnePlus 10T 5G-ஐ 'புக்' பண்ணிடாதீங்க!

|

இதுவரை 'லீக்ஸ்' தகவல்கள் வழியாக மட்டுமே "பேசப்பட்டு" வந்த OnePlus 10T 5G ஸ்மார்ட்போனை பற்றி ஒன்பிளஸ் நிறுவனம் (ஒருவழியாக) அதிகாரபூர்வமாக வாயை திறந்துள்ளது.

பவர்ஃபுல் ஆன டிவைஸ் ஆக இருக்கும் - சந்தேகமே வேண்டாம்!

பவர்ஃபுல் ஆன டிவைஸ் ஆக இருக்கும் - சந்தேகமே வேண்டாம்!

ஒன்பிளஸ் 8டி ஸ்மார்ட்போனிற்கு பிறகு 9டி மாடல் அறிமுகம் செய்யப்படாத காரணத்தினால் 10டி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே போனது.

பொதுவாகவே அந்தந்த ஆண்டின் இறுதியில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மிகவும் 'பவர்ஃபுல் ஆன டிவைஸ்' ஆக இருக்கும் என்பதால் 10டி ஸ்மார்ட்போனின் மீது ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு இருக்கும் ஆவல் - நியாயம் தான்.

ஆனால் அறிவிக்கப்பட்ட வேகத்தில் அதை ப்ரீ-புக் செய்யும் ஐடியா உங்களுக்கு இருந்தால் - நிதானம் தேவை! ஏன் என்று விரிவாக பார்ப்போம் வாருங்கள்!

இனி இனி "பத்தல பத்தல"னு சொல்ல முடியாது; நியாயமான விலையில் உலகின் முதல் 200W போன்!

OnePlus 10T 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

OnePlus 10T 5G இந்திய அறிமுக தேதி அறிவிப்பு!

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட வெளியீட்டு நிகழ்வானது, நியூயார்க் நகரில், இந்திய நேரடி இரவு 7:30 மணிக்கு நடைபெறும்.

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கம் வழியாகவும் கூட வரவிருக்கும் OnePlus 10T 5G ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஆகஸ்ட் 3 ஆம் தேதி நியூயார்க் நகரில் உள்ள கோதம் ஹாலில், ஒன்பிளஸ் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக விழா நடக்கும்.

ஒன்பிளஸ் 10டி-யில் இடம்பெறும் 2 முக்கியமான அம்சங்கள்!

ஒன்பிளஸ் 10டி-யில் இடம்பெறும் 2 முக்கியமான அம்சங்கள்!

நீண்ட காத்திருப்புகளுக்கு பின் வெளியாகும் இந்த ஒன்பிளஸ் டி சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆனது OxygenOS 13 அப்டேட்டை பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம், இது ஒன்பிளஸ் 10 ப்ரோ வழியாகவே முதன் முதலில் அணுக கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆக OxygenOS 13 ஆனது முதலில் OnePlus 10 Pro வில் அறிமுகப்படுத்தப்படும், அதை தொடர்ந்து OnePlus 10T க்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் வந்து சேரும் என்று நம்பலாம்.

அறியாதோர்களுக்கு OxygenOS 13 ஆனது ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே (AOD) மற்றும் ஜென் மோட் உள்ளிட்ட OnePlus இன் "சொந்த" அம்சங்களை வழங்கும்.

மேலும், OnePlus 10T 5G ஆனது Qualcomm இன் Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீன ஸ்மார்ட்போன்களின் ஆட்டத்தை கலைக்க முடிவு செய்த Google! என்ன சமாச்சாரம்?சீன ஸ்மார்ட்போன்களின் ஆட்டத்தை கலைக்க முடிவு செய்த Google! என்ன சமாச்சாரம்?

டிக்கெட் வாங்கினால் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் - ஃப்ரீ?

டிக்கெட் வாங்கினால் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் - ஃப்ரீ?

இந்த வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்ள டிக்கெட் வாங்குபவர்கள். OnePlus Nord Buds உட்பட டாப்-டயர் Merchandise-ஐ (உயர்மட்ட விற்பனை பொருட்களை) பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

ஒன்பிளஸ் 10T 5G வெளியீட்டு நிகழ்வை ஆன்லைன் வழியாக பார்ப்பது எப்படி?

ஒன்பிளஸ் 10T 5G வெளியீட்டு நிகழ்வை ஆன்லைன் வழியாக பார்ப்பது எப்படி?

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள இங்கிருந்து ஒருவர் தங்களுக்கான டிக்கெட்டுகளை வாங்கலாம் அல்லது குறிப்பிட்ட அறிமுக நிகழ்வின் லைவ் ஸ்ட்ரீமிங்-ஐ ஆன்லைன் வழியாக காணலாம்.

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சரியான நேரத்தில் OnePlus நிறுவனத்தின் லான்ச் சைட் அல்லது OnePlus YouTube சேனலை அணுக வேண்டியது மட்டுமே ஆகும்.

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

விலையில் தான் ஒரே குழப்பம்.. சில தகவல்கள் ரூ.35,000 என்கிறது!

விலையில் தான் ஒரே குழப்பம்.. சில தகவல்கள் ரூ.35,000 என்கிறது!

இதுவரை வெளியான லீக்ஸ் விவரங்களை வைத்து பார்க்கும் போது, OnePlus 10T 5G ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ.35,500 முதல் ரூ.47,400 வரை என்கிற வரம்பில் கீழ் "எங்காவது ஒரு புள்ளியில்" அறிமுகம் செய்யப்படலாம் என்பது போல் தெரிகிறது.

ஆனால் லேட்டஸ்ட் தகவல் ஒன்று ரூ.50,000 என்கிறது!

ஆனால் லேட்டஸ்ட் தகவல் ஒன்று ரூ.50,000 என்கிறது!

லேட்டஸ்ட் லீக் அறிக்கையொன்று, இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.49,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கிறது.

நமக்கு கிடைத்த தகவல்கள் அனைத்துமே ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதாக தெரிவதால் எல்லா தகவல்களையுமே மேலோட்டமாக எடுத்துக்கொள்வது நல்லது.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க ஒன்பிளஸ் 10டி ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் விற்பனை குறித்த எந்த விவரங்களையும் நிறுவனம் உறுதிப்படுத்தவில்லை.

எனவே நீங்கள், இந்த ஸ்மார்ட்போனை (அறிவிக்கப்பட்டதும்) ப்ரீ-புக் செய்யும் ஐடியாவில் இருந்தால்.. உஷாராகி கொள்ளுங்கள். ஏனெனில் இது ரூ.35,000 க்கும் வரலாம்; ரூ.50,000 க்கும் வரலாம்!

ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!ரூ.20,000 க்குள் இந்த 5 போன்கள் தான் இப்போதைக்கு பெஸ்ட்! நம்பி வாங்கலாம்!

ரூ.50,000-க்கு இது வொர்த்-ஆ இருக்குமா ?

ரூ.50,000-க்கு இது வொர்த்-ஆ இருக்குமா ?

இதற்கு பொத்தாம் பொதுவான பதில்களை கூறி விட முடியாது. இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது என்பதை பொறுத்தே நாம் ஒரு முடிவுக்கு வர முடியும்.

இதுவரை வெளியான லீக்ஸ் தகவல்களின்படி, OnePlus 10T 5G ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 6.7-இன்ச் ஃபுல்-எச்டி+ AMOLED டிஸ்ப்ளே, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 சிப்செட், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஸ்னாப்பருடன் 50 மெகாபிக்சல் மெயின் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 150W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,800mAh பேட்டரி, 16GB LPDDR5 ரேம் மற்றும் அதிகபட்சமாக 512GB UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை பேக் செய்யலாம்.

மேற்கண்ட அம்சங்களில் 90% உண்மையானால் கூட, இதன் விலை ரூ.50,000 ஆக இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர்களை கண்ணை மூடிக்கொண்டு இதை வாங்குவது கொஞ்சம் கஷ்டம் தான்!

Photo courtesy: OnePlus

Most Read Articles
Best Mobiles in India

English summary
Official India Launch Date of OnePlus 10T 5G Announced. Big Confusion in Price Details.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X