நவம்பரில் ஆபிஸ் 2013ஐ களமிறக்கும் மைக்ரோசாப்ட்

By Karthikeyan
|
நவம்பரில் ஆபிஸ் 2013ஐ களமிறக்கும் மைக்ரோசாப்ட்

இந்தியாவில் கணினி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது மைக்ரோசாப்டின் ஆபிஸ்தான். ஏனெனில் இந்தியாவில் பெரும்பாலோர் மைக்ரோசாப்ட் ஆபிஸில் சாப்ட்வேரில்தான் வேலை செய்கின்றனர்.

தற்போது மைக்ரோசாப்ட் தனது ஆபிஸ் 2013ஐ அறிமுகம் செய்திருக்கிறது. மைக்ரோசாப்ட் எஸ்டிஎன் மற்றும் டெக்நோட் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆபிஸ் 2013 நவம்பரின் மத்தியில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆபிஸ் 2013 வர்த்தகத்திற்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அதோடு க்யு1 2013 என்ற சாப்ட்வேரையும் தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்ய மைக்ரோசாப்ட் திட்டமிட்டிருக்கிறது. மேலும் அக்டோபர் 19க்கு பின் மேக்கிற்காக ஆபிஸ் 2010 அல்லது ஆபிஸ் 2011ஐ வாங்குவோருக்கு ஆபிஸ் 2013யும் இலவசமாக அப்க்ரேட் செய்ய இருக்கிறது மைக்ரோசாப்ட். விண்டோஸ் ஆர்ட் சாதனங்கள் ஆபிஸ் ப்ரிவியூவைக் கொண்டிருக்கும்.

அதுபோல் ஆபிஸ் 365 என்டர்ப்ரைஸ் வாடிக்கையாளர்கள் வரும் நவம்பரில் மிக விரைவில் இந்த ஆபிஸ் 2013ஐ அப்டேட் செய்ய முடியும். மேலும் வாலியூம் லைசென்சிங் வாடிக்கையாளர்கள் லின்க், ஷேர்பாயின்ட் மற்றும் எக்ஸ்சேன்சோடு இந்த ஆபிஸ்2013ஐ வரும் நவம்பரில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X