ஓராண்டுக் காலமாகத் தங்கையைக் கற்பழித்த அண்ணனின் நண்பன்.! வீடியோ வைத்து மிரட்டல்.!
ஸ்வேதா என்ற 29 வயது என்ஜினியர் பெண்ணை ஒரு ஆண்டு காலமாகத் தொடர்ந்து கற்பழித்து, தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து வந்த தொழிலதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு: ஹுலிமாவு பகுதியில் வசிக்கும் ஸ்வேதா என்ற 29 வயது என்ஜினியர் பெண்ணை ஒரு ஆண்டு காலமாகத் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார்.

அதை தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து ஓராண்டு காலமாக மிரட்டி தொடர்ந்து கற்பழித்து வந்த தொழிலதிபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அண்ணனின் நண்பன்
ஹுலிமாவு பகுதியில் உள்ள ஸ்வேதா, அண்ணன் தாராகேஷின் நண்பனான பாலாஜி(36) மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலாஜி பெங்களுரில் உள்ள தேஜஸ்வினி நகரைச் சேர்ந்தவர் என்பதும் இவர் திருமணம் ஆனவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலாஜி மற்றும் தாராகேஷ் இருவரும் பாலிய நண்பர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொலை மிரட்டல்
பிசினெஸ் பார்ட்னர்களான இருவரும் 2016 ஆண்டில் பெரிய இழப்பைச் சந்திலுள்ளனர். பிசினஸ் இல் ஏற்பட்ட இழப்பைச் சரி செய்ய தாராகேஷ், பாலாஜிக்குப் பணம் கொடுக்க வேண்டியதிருந்தது. பணம் கொடுக்காததனால் அவருக்குக் கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மிரட்டல்
இந்நிலையில் தாராகேஷ் மற்றும் அவரின் மனைவி வீட்டில் இல்லாத நேரம், பாலாஜி அவரின் வீட்டிற்குச் சென்று ஸ்வேதாவை கற்பழித்துள்ளார். ஸ்வேதாவை கற்பழித்து அதை மொபைல் போனில் பதிவு செய்தும் உள்ளார். தேவைப்படும் பணத்தைத் தர மறுத்தால் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோவை அப்லோட் செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.

கற்பழிப்புக்கு மனைவியும் உடந்தை
பாலாஜியின் மிரட்டலுக்குப் பயந்து, ஸ்வேதா அவரிடம் இருந்த பணம், நகை மற்றும் செக்குகளை பாலாஜியிடம் கொடுத்துள்ளார். வீடியோ பதிவைக் காட்டி ஸ்வேதாவை மிரட்டி, பாலாஜி கடந்த 2018 இல் இருந்து சுமார் ஒரு ஆண்டு காலமாகத் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். இதற்கு அவரின் மனைவியும் உடந்தை என்ற அதிர்ச்சி தகவலையும் ஸ்வேதா குறிப்பிட்டுள்ளார்.

கைது
பாலாஜியின் கொடுமை தாங்க முடியாமல் ஸ்வேதா நேற்று பாலாஜி மற்றும் அவரின் மனைவி மீது ஹுலிமாவு
காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ள பாலாஜி மற்றும் அவரின் மனைவியிடம் காவல்துறை விசாரணை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications