Home
News

ரூ.3000 கடனாக பெற்று ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி பிரபலமான யூடியூபர்: அப்படி என்ன செய்தார்?

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யூடியூப் தளத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்த தளத்தில் நமக்கு தேவையான பல முக்கியத் தகவல்கள் கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி தினசரி செய்திகள் மற்றும் முக்கியமான நிகழ்வுகள் என அனைத்தையும்
இந்த தளத்தில் பார்க்க முடியும்.

தளத்தில் தனிநபர் கூட ஒரு

அதேபோல் யூடியூப் தளத்தில் தனிநபர் கூட ஒரு சேனலை துவங்கி தகவல் நிறைந்த சிறப்பான வீடியோக்களை வெளியிட்டால் வருமானம் கிடைக்கும். அதற்கு உதாரணமாக ஒரு நபர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தரமான வீடியோக்களை வெளியிட்டு லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார். மேலும் அந்த நபர் யார் என்றும், அவர் என்ன வீடியோ வெளியிட்டார் என்பதை பற்றியும் சற்று விரிவாகப்
பார்ப்போம்.

பாதிக்கப்பட்டது

ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் ஐசக் முண்டா (வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவியும் நான்கு பிள்ளைகளும் உள்ளனர். குறிப்பாக தினக்கூலியாக வேலை செய்து வரும் ஐசக் முண்டாவிற்கு வருமானம் மிகவும் கம்மி என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கொரோனா காரணமாக இவரது தினசரி வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது.

ண்பர்கள் செல்போனில் யூடியூ

இந்நிலையில் நண்பர்கள் செல்போனில் யூடியூப் மூலம் அதிக நேரம் வீடியோக்களை பார்ப்பதை கவனித்துள்ளார் ஐசக் முண்டா. பின்பு கடந்தாண்டு ரூ.3000 கடனாக பெற்று ஒரு ஸ்மார்ட்போனை வாங்கி தான் சாப்பிடுவதை வீடியோவாக எடுத்து அதை ஐசன் முண்டா ஈட்டிங் என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டார். குறிப்பாக அவர் சைட் டிஷ் எதுவும் இல்லாமல் அரிசிச் சாதம் சாப்பிடுவதை வீடியோவாக வெளியிட்டார்.

மட்டுமே லட்சக்கணக்கான மக்கள்

அந்த வீடியோ மட்டுமே லட்சக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். பின்பு பழங்குடி கிராம மக்களின் வாழ்க்கை முறை, அவர்களின் தரமான சமையல், கலாச்சாரம் போன்றவற்றை வீடியோவாக எடுத்து போட மிகவும் பிரபலமாகிவிட்டார். அதிலும் அவர் வெளியிட்ட முதல்வீடியோவிற்கு மட்டுமே ரூ.37,000 வரை கிடைத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னர் லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கத் துவங்கியுள்ளது.

மேலும் இதுபற்றி ஐசக் தெரிவித்தது என்னவென்றால், நான் 7-வது வரை படித்துள்ளேன், எனது சமுதாயம் தொடர்பான வீடியோக்களை பதிவிட தொடங்கி தற்போது இந்த சேனல் பிரபலமாகி உள்ளது என்றும், இதுவரை 250 வீடியோ வரை பதிவிட்டுள்ளேன் என்றும் கூறியுள்ளார். பின்பு எனது சேனலுக்கு 7 லட்சம் subscribers உள்ளனர் என்றும், தற்போது எனது வாழ்வாதாரமும் மேம்பட்டுள்ளது என்றும் ஐசக் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Odisha tribal worker earns lakhs from YouTube by taking video of himself eating: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X