Home
News

பெங்களூர் குண்டு வெடிப்பும்...தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியரும்...

பெங்களூர் குண்டு வெடிப்பும்...தமிழக சாஃப்ட்வேர் இன்ஜினியரும்...

Click Here For New Gadget Gallery

நேற்று பெங்களூரில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. மல்லேஸ்வரம் என்ற பகுதியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்திற்கு பக்கத்திலும், ஹெப்பால் பகுதியிலும் குண்டுகள் வெடித்தன. இந்த மல்லேஸ்வரம் குண்டுவெடிப்பு தமிழக பதிவு எண் கொண்ட பைக்கில் குண்டினை வைத்து வெடிக்க செய்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு பெங்களூர் போலிசாரிடமிருந்து தகவல்கள் அனுப்பப்பட்டன. இந்த வாகனத்தின் எண் TN 22 R 3796 என்பதும், இதனுடைய உரிமையாளர் தில்லைநகர் பகுதியை சேர்ந்த சுந்தர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சுந்தர் என்பவரது வயது 45. இவர் பெங்களூரில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

சென்னை போலீசார் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரித்ததில், சுந்தர் வீட்டில் அவரது தந்தை மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் விசாரித்ததில் தன்னுடைய மகன் 1990 ஆம் ஆண்டின் யமாஹா RX 100 வைத்திருந்தார் என்பதும். அதை 5 வருடங்களுக்கு முன்னரே விற்றுவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் அன்மைத்தகவலின் படி, மல்லேஸ்வரம் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் சுசுகி நிறுவனத்தின் சாமுராய். இதிலும் குழப்பங்கள் நீடிக்கின்றன. மேலும் இந்த வண்டியின் என்ஜின் பகுதி ஆந்திராவில் தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்துள்ளது. இம்மாதிரி பெரிய நெருக்கடிகளுக்கிடையில் 3 மாநில போலீசாரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

More from GizBot

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X