அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

|

Nubia நிறுவனத்திற்குச் சொந்தமான புதிய நுபியா Z40S ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை நிறுவனம் இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய Nubia Z40S Pro ஸ்மார்ட்போன் ஆனது, ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 சிப்செட்டில் இயங்கும் இதன் முந்தைய மாடலான Nubia Z40 Pro இன் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாகும். இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது நிறுவனம் புதிய சிப்செட் உடன் இந்த Z40S மாடலை அறிமுகம் செய்துள்ளது.

புதிய Nubia Z40S Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய Nubia Z40S Pro ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய Nubia Z40S Pro ஸ்மார்ட்போன் இப்போது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட சக்தி வாய்ந்த Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவைஸ் நுபியாவின் NEOVision கேமரா தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய புகைப்படம் சார்ந்த ஸ்மார்ட்போன் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிவைஸில் 64 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை பார்க்கலாம்.

Nubia Z40S Pro விலை என்ன?

Nubia Z40S Pro விலை என்ன?

Nubia Z40S Pro ஸ்மார்ட்போன் இப்போது 4 வேரியண்ட் மாடல்களில் வருகிறது. இதன் அடிப்படை வேரியண்ட் மாடல் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் CNY 3,399 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 40238 விலையில் வருகிறது. அதே சமயம் டாப் எண்ட் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி சேமிப்பு மாடல் CNY 4,499 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பின் படி, தோராயமாக ரூ. 55,000 விலையில் வருகிறது.

120W + 4,600mAh வேரியண்ட் மாடலின் விலை என்ன?

120W + 4,600mAh வேரியண்ட் மாடலின் விலை என்ன?

இந்த Nubia ஸ்மார்ட்போனில் 120W + 4,600mAh வேரியண்ட் மாடல் உள்ளது. இது 12GB RAM + 256GB ஸ்டோரேஜ் உடன் CNY 4,299 விலையில் வருகிறது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக ரூ. 51,000 விலையில் உள்ளது. இது 18GB RAM + 1TB ஸ்டோரேஜ் வேரியண்ட்டையும் கொண்டுள்ளது. இதன் விலை CNY 6,699 விலையில் வருகிறது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 80,000 விலையில் வருகிறது. இந்த அனைத்து வகைகளும் மேஜிக் கிரீன் மற்றும் நைட் சீ வண்ண விருப்பங்களில் வருகின்றன. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் ஜூலை 26 அன்று விற்பனைக்கு வருகிறது.

Nubia Z40S Pro சிறப்பம்சம்

Nubia Z40S Pro சிறப்பம்சம்

Nubia Z40S Pro டிவைஸ் 6.67' இன்ச் கொண்ட முழு-HD+ உடன் 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய AMOLED டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது 144Hz ரெப்பிரேஷ் ரேட் உடன், 480Hz டச் சாம்பலிங் மற்றும் 1,000 nits பிரைட்னஸ் அம்சத்துடன் வருகிறது. இந்த டிஸ்ப்ளே செல்ஃபி கேமராவிற்கான மையமாக வைக்கப்பட்டுள்ள பஞ்ச் ஹோல் மற்றும் அண்டர் டிஸ்ப்ளே பிங்கர் பிரிண்ட் சென்சார் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 18GB வரை LPDDR5 ரேம் மற்றும் 1TB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் இணைக்கப்பட்டுள்ளது.

கேமரா அம்சம்

கேமரா அம்சம்

இது Snapdragon 8+ Gen 1 SoC மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் Sony IMX787 பிரைமரி சென்சார் உடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸுடன் 116 டிகிரி வியூ மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார் உள்ளது. இந்த போன் 120fps இல் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் 8K மேக்ரோ ஷூட்டிங் திறனைக் கொண்டுள்ளது. இது 6 LED ஃபிளாஷ்யையும் கொண்டுள்ளது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன்

80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன்

நுபியா Z40S ப்ரோ முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் Nubia NEOVision கேமரா தொழில்நுட்பம் உள்ளது. கேமராவை உடனடியாக அணுகுவதற்கான தனிப்பயன் ஸ்லைடரும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இது 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரி உடன் ஒரு மாடலாகவும், 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,600mAh பேட்டரி உடன் மற்றொரு மாடலாக வருகிறது.

Best Mobiles in India

English summary
Nubia Z40S Pro Launched With Snapdragon 8+ Gen 1 SoC

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X