மேக்னடிக் சார்ஜிங் பாஸ்: எல்லாம் உச்சம் தான்- வேற லெவல் அம்சத்தோடு நுபியா இசட்40 ப்ரோ!

|

நுபியா இசட் 40 ப்ரோ ஸ்மார்ட்போனானது 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே பெரிஸ்கோப் கேமரா உடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

இசட்டிஇ துணை பிராண்டான நுபியா

இசட்டிஇ துணை பிராண்டான நுபியா

இசட்டிஇ துணை பிராண்டான நுபியா, பல நாட்கள் டீஸ்-க்கு பிறகு நுபியா இசட் 40 ப்ரோ சாதனத்தை சீனாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. நிறுவனத்தின் புதிய முதன்மை மாடல் கடந்த ஆண்டு நுபியா இசட் 30 ப்ரோ சாதனத்தின் வாரிசாக இருக்கிறது. ஸ்மார்ட்போனின் புதிய விவரக்குறிப்புகளுடன் புதிய வடிவமைப்பையும் கொண்டிருக்கிறது.

நுபியா இசட் 40 ப்ரோ விவரக்குறிப்புகள்

நுபியா இசட் 40 ப்ரோ விவரக்குறிப்புகள்

நுபியா இசட் 40 ப்ரோ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், நுபியா இசட் 40 ப்ரோ ஸ்மார்ட்போனானது நுபியா இசட் 30 ப்ரோ போன்ற பாக்ஸி வடிவத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் வேறுபட்ட கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. இந்த புதிய மாடலில் மூன்று லென்ஸ்கள் மட்டுமே செங்குத்தான கட்டமைப்பில் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்பு வெளியான சாதனத்தில் நான்கு லென்ஸ்கள் இருந்தன. இந்த சாதனத்தின் கட்டுமான வடிவமைப்பு குறித்து பார்க்கையில் இது உலோக சட்டத்துடன் கூடிய AG (ஆன்டி-கிளேர்) கண்ணாடி சாண்ட்விச் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது இன்டர்ஸ்டெல்லர் பிளாக் மற்றும் கேலக்ஸி என இரண்டு வண்ணங்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் அனிம் 'தி அவுட்காஸ்ட்' அடிப்படையிலான சிறப்பு பதிப்பிலும் வருகிறது.

144 ஹெர்ட்ஸ் வரையிலான புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

144 ஹெர்ட்ஸ் வரையிலான புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ், 395 பிபிஐ மற்றும் 144 ஹெர்ட்ஸ் வரையிலான புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.67 இன்ச் வளைந்த ஓஎல்டி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனின் மையத்தில் பஞ்ச்-ஹோல் வடிவமைப்பு இருக்கிறது. நுபியா இசட்40 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12ஐ அடிப்படையாகக் கொண்ட மை ஓஎஸ் 12 மூலம் இயக்கப்படுகிறது. பின்புறத்தில், ஓஐஎஸ் உடனான 64 எம்பி Sony ஐஎம்எக்ஸ்787 முதன்மை சென்சார், 50 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் ஓஐஎஸ் உடனான 8 எம்பி பெரிஸ்கோப் கேமராவுடனான டிரிபிள் கேமரா உள்ளமைவை கொண்டிருக்கிறது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என 16 எம்பி கேமரா உள்ளது.

80 வாட்ஸ் ரேபிட் வயர்டு சார்ஜிங்

80 வாட்ஸ் ரேபிட் வயர்டு சார்ஜிங்

இணைப்பு ஆதரவுகளுக்கு என டூயல் சிம், 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.2, யூஎஸ்பி 3.1 ஜெனரல் 1 ஆகியவை உடன் இணைக்கப்படுகிறது. இது டிஸ்ப்ளேயில் பதிக்கப்பட்ட கைரேகை சென்சார் உடன் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5,000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது, இது 80 வாட்ஸ் ரேபிட் வயர்டு சார்ஜிங் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரவைக் கொண்டுள்ளது. இது மேக்னட் சார்ஜிங் ஏற்பாட்டுடன் கூடிய உலகின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இதுவாகும்.

நுபியா இசட்40 ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

நுபியா இசட்40 ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

நுபியா இசட்40 ப்ரோ விலை மற்றும் சீனாவில் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், நுபியா பல்வேறு சேமிப்பு விருப்பங்களுடன் வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் அடிப்படை மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது இதன் விலை சுமார் ரூ.40,500 ஆக இருக்கிறது. இது 8 ஜிபி ரேம்+ 256 ஜிபி உள்சேமிப்பக கட்டமைப்பிலும் கிடைக்கிறது, இதன் விலை சுமார் ரூ.44,100 ஆகும். நிறுவனம் இப்போது 256ஜிபி மற்றும் 512ஜிபி சேமிப்பு திறன் கொண்ட இரண்டு 12ஜிபி ரேம் மாடல்களை வழங்குகிறது. அவற்றின் விலை முறையே ரூ.47,700 மற்றும் ரூ.53,700 ஆக இருக்கிறது. 16ஜிபி மற்றும் 1டிபி சேமிப்பக விருப்பங்கள் கொண்ட மேக்னட் சார்ஜிங் பதிப்பின் விலை ரூ.71,600 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nubia Z40 Pro Launched in India as Newest Flagship Model: Android 12, 12GB RAM, Magnetic Charging Version

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X