ஆத்தாடி! இது என்ன போனா? டஃப் லுக்..நாக் அவுட் ஸ்பேஸ்னு ஒட்டுமொத்தமா Nubia Red Magic 7S மிரட்டுதே!

|

Nubia ஸ்மார்ட்போன் நிறுவனம் புதிதாக நுபியா ரெட் மேஜிக் 7எஸ் (Nubia Red Magic 7S) மற்றும் ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ (Nubia Red Magic 7S Pro) என்ற இரண்டு புதிய கேமிங் ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை 11 ஆம் தேதி அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விபரங்கள் இப்போது TENAA இல் குறிப்பிடப்பட்ட பட்டியலில் காணப்பட்டுள்ளது. இந்த அட்டகாசமான இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

புது Nubia Red Magic 7S மற்றும் Nubia Red Magic 7S Pro

புது Nubia Red Magic 7S மற்றும் Nubia Red Magic 7S Pro

இந்த மிரட்டலான தோற்றத்தில் இருக்கும் இரண்டு Nubia Red Magic 7S மற்றும் Nubia Red Magic 7S Pro ஆகிய மாடல்கள் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8+ Gen 1 சிப்செட் உடன் 18ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த டிவைஸ்களில் குறைந்தபட்சம் ஒரு வேரியண்ட் மாடலாவது 1TB ஸ்டோரேஜை பேக் செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 64 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி கேமரா சென்சாரை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்?

இந்த புதிய கேமிங் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம்?

Nubia Red Magic 7S சீரிஸ் சீனாவில் ஜூலை 11 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு (12.30 pm IST) அறிமுகப்படுத்தப்படும். Red Magic 7S Pro வடிவமைப்பைக் காட்டும் ஸ்மார்ட்போன்களின் படங்களையும் Nubia வெளிப்படுத்தியுள்ளது. Nubia ரெட் மேஜிக் 7S ப்ரோ ட்ரிடியம் ஃப்ரண்ட் டிரான்ஸ்பரன்ட் சில்வர் விங் எடிஷன், சில்வர் கலர் பேக் பேனல் மற்றும் அண்டர் ஸ்கிரீன் கேமராவைப் பயன்படுத்துகிறது என்று சமீபத்தில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. RGB லைட்டிங் ஆதரவுடன் இயங்கும் கூலிங் பேன் அம்சமும் இதில் உள்ளது.

ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? அப்போ உங்கள் கைல ரூ. 3,042 இருந்தா போதும்! Samsung-ன் புது ஆஃபர்!

நுபியா ரெட் மேஜிக் 7S மற்றும் ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ டிஸ்பிளே

நுபியா ரெட் மேஜிக் 7S மற்றும் ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ டிஸ்பிளே

Nubia Red Magic 7S, Red Magic 7S Pro விவரக்குறிப்புகள் TENAA பட்டியல்கள் NX679S மற்றும் NX709S ஆகிய மாடல் எண்களைக் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்களை காண்பிக்கிறது. இவை முறையே நுபியா ரெட் மேஜிக் 7S மற்றும் ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் 6.8' இன்ச் கொண்ட முழு எச்டி+ உடைய 1,080 x 2,400 பிக்சல்கள் கொண்ட 120 ஹெர்ட்ஸ் ரெபிரெஷ்ஷிங் ரேட் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

குவால்காமின் Snapdragon 8+ Gen 1 சிப்செட் சக்தி

குவால்காமின் Snapdragon 8+ Gen 1 சிப்செட் சக்தி

இந்த இரண்டு ஸ்மார்ட்போனுமே குவால்காமின் Snapdragon 8+ Gen 1 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன்கள் 18ஜிபி ரேம் விருப்பங்களுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. Red Magic 7S டிவைஸ் ஆனது 8ஜிபி, 12ஜிபி மற்றும் 16ஜிபி விருப்பங்களிலும் வெளிவரலாம் என்று டெக் வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. அதேபோல், நுபிய ரெட் மேஜிக் 7S ப்ரோ மாடல் 12ஜிபி மற்றும் 16ஜிபி வேரியண்ட்டாக வெளிவரலாம் என்று கூறப்படுகிறது.

புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. Asus ROG Phone 6 நாளை வருது!புது போன் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. Asus ROG Phone 6 நாளை வருது!

புதிய நுபியா ரெட் மேஜிக் 7எஸ் சீரிஸ் கேமரா விபரம்

புதிய நுபியா ரெட் மேஜிக் 7எஸ் சீரிஸ் கேமரா விபரம்

இந்த டிவைஸ்கள் கேமிங் போன் சாதனம் என்பதனால், இதில் பிரத்தியேக கூலிங் டெக் தொழில்நுட்பங்களை நிறுவனம் கட்டாயம் உள்ளிட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய நுபியா ரெட் மேஜிக் 7எஸ் மற்றும் ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா இடம்பெற வாய்ப்புள்ளது என்று பட்டியல் தகவல் பரிந்துரைக்கிறது.

1TB ஸ்டோரேஜ் உடன் வருமா?

1TB ஸ்டோரேஜ் உடன் வருமா?

Red Magic 7S ஆனது 128ஜிபி, 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், நுபியா ரெட் மேஜிக் 7எஸ் ப்ரோ மாடல் 1TB ஸ்டோரேஜ் விருப்பத்துடன் வெளிவர வாய்ப்புள்ளது என்று TENAA வலைப்பக்க தகவல் குறிப்பிடுகிறது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் பிளாக், ப்ளூ, க்ரீன் மற்றும் ரெட் வண்ண விருப்பங்களில் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Red Magic 7S ஆனது 4,500mAh பேட்டரியுடன் வரலாம் மற்றும் Red Magic 7S Pro ஆனது 5,000mAh பேட்டரி பேக் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 7S and Red Magic 7S Pro Launch Set for July 11 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X