ஒரே மேஜிக் தான்.,அசுரத் தனம்: டர்போ ஃபேன் கூலிங் சிஸ்டம், 960 ஹெர்ட்ஸ் டச் ஆதரவுடன் நூபியா ரெட் மேஜிக்7 ப்ரோ!

|

ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. மலிவு விலை, ப்ரீமியம் விலை, பட்ஜெட் விலை என பல்வேறு விலைப்பிரிவுகளில் சாதனங்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. குறிப்பாக ஒரு சில நிறுவனங்கள் சாதனங்களில் தனித்துவ மற்றும் மேம்பட்ட அம்சங்களோடு வடிவமைப்பையும் கவனித்து சிறப்பாக அறிமுகம் செய்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி, 16 ஜிபி ரேம், 135 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி, 16 ஜிபி ரேம், 135 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ உலகளவில் வெளியிடப்பட்டுள்ளது. நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் கூடிய 6.8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை ஆனது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.60,890 என இருக்கிறது.

16 ஜிபி ரேம் அம்சம்

16 ஜிபி ரேம் அம்சம்

நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது செவ்வாய்கிழமை உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது உயர்தர அம்சங்களைக் கொண்டிருக்கிறது, ரெட் மேஜிக் ஸ்மார்ட்போனின் வரிசையில் இந்த புதிய ஸ்மார்ட்போனை நிறுவனம் பிப்.,17 அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. 16 ஜிபி ரேம் அம்சத்தை இந்த சாதனம் கொண்டிருக்கிறது.

அண்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா

அண்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா

இந்த நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 6.8 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே மற்றும் 64 எம்பி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் அண்டர் டிஸ்ப்ளே செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது போல் 135 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வராமல், 65 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவை மட்டுமே கொண்டிருக்கிறது.

நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை

நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு, 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி என கிடைக்கிறது. நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.60,890 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் அப்சிடியன் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமா ரூ.68,500 ஆக கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இந்த சாதனம் சூப்பர்நோவா வண்ண விருப்பத்தில் கிடைக்கும். இந்தியாவில் ஸ்மார்ட்போன் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

6.8 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

6.8 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், நூபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரெட்மேஜிக் ஓஎஸ் 5.0 மூலம் இயங்குகிறது. இந்த நுபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) டிஸ்ப்ளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 960 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் வீத ஆதரவு மற்றும் 600 நிட்ஸ் உச்ச பிரகாசத் தன்மை உட்பட ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி அம்சத்தோடு வருகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் அம்சம், ஷோல்டர் பட்டன்கள், ஒலி, ஹாப்டிக் மற்றும் லைட்டிங் என பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மேலும் கேமிங் தொடர்பான பணிகளை கண்காணிக்க பிரத்யேகமாக ரெட் கோர் 1 கேமிங் சிப் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை குளிர்ச்சியாக வைத்திருக்க ஐஸ் 9.0 கூலிங் சிஸ்ட அம்சம் மற்றும் 20,000 ஆர்பிஎம்-ல் டர்போ ஆர்ஜிபி விசிறி, நீராவி ரூம், காப்பர் ஃபாயில் மற்றும் கிராஃபைட் தெர்மல் பேட் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

5000 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

நுபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 512 ஜிபி உள்சேமிப்பு ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனத்தின் இணைப்பு ஆதரவுகளுக்கு என 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, ப்ளூடூத் வி5.2 மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. இ-காம்பஸ், ப்ராக்ஸிமிட்டி மற்றும் பயோமெட்ரிக் அங்கீகாரத்துக்கான கைரேகை ஸ்கேனர் ஆதரவோடு வருகிறது. இந்த நுபியா ரெட் மேஜிக் 7 ப்ரோ ஸ்மார்ட்போனானது 135 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் சீனாவில் வெளியடப்பட்டது, ஆனால் பிற சந்தைகளில் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 7 Pro Launched With 960Hz Touch Sampling, Turba RGP Fan Cooling System: Price, Specifications.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X