Home
News

மூன்று ரியர் கேமராவுடன் நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

சீனாவில் நுபியா நிறுவனம் தனது நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து இடங்களிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக
இந்த ஸ்மார்ட்போனில் ஆரம்ப விலை ரூ.40,265-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 6.65-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

6.65-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே

இந்த நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.65-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080 × 2340 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

 TUV ரைன்லேண்ட்

இந்த சாதனம் அதிகபட்சமாக 15000 RPM வேகத்துடன் கூடிய குளிரூட்டும் விசிறியுடன் வருகிறது, இது CPU இன் வெப்பநிலையை 18 ° C வரை குறைக்க முடியும். மேலும் இதன் டிஸ்பிளே நீல-ஒளி பாதுகாப்புக்கான TUV ரைன்லேண்ட் சான்றிதழையும் கொண்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 865

ஸ்னாப்டிராகன் 865

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 865 உடன் அட்ரினோ 650ஜிபியு சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்க வேண்டும்

12ஜிபி/16ஜிபி ரேம்

12ஜிபி/16ஜிபி ரேம்

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

64எம்பி பிரைமரி கேமரா

64எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா+8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 12எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு
அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காதுமேலும் 55வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3.5எம்எம் ஆடியோ ஜாக்

3.5எம்எம் ஆடியோ ஜாக்

நுபியா ரெட் மேஜிக் 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி வோல்டிஇ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 218கிராம் எடை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்மாடல்.

Best Mobiles in India

English summary
Nubia Red Magic 5G Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X