தூள் கிளப்புது.. உலகின் முதல் 3D டேப்லெட்.. 3D கிளாஸ் தேவையில்லை.. எல்லா திரைப்படத்தையும் 3D-ல் பார்க்கலாமா?
நுபியா (Nubia) நிறுவனம் உலகத்தின் முதல் 3D டிஸ்பிளே கொண்ட nubia Pad 3D II டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது உலகத்தின் முதல் 5G + AI அம்சம் கொண்ட கிளாஸ் ஃபிரீ 3D டிஸ்பிளே சாதனமாகும்.
nubia Pad 3D II: உலகளவில் எப்போதுமே 3D திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. 3D படங்கள் என்று பேசும் பொழுது அவதார் திரைப்படத்தை நம்மால் நினைத்து பார்க்காமல் இருக்க முடியாது. அவதார் 1, பிறகு அவதார் 2 என்று வரிசையாக ரிலீசான திரைப்பட வரிசையில், விரைவில் அவதார் 3 கூட இணையவுள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவிருக்கிறது.

nubia Pad 3D டேப்லெட்: 3D அனுபவம் மக்களை அதிகமாக கவர்ந்திழுக்கும் காரணத்தினால், சில எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள் 3D டிவிகளை இதற்கு முன்பு அறிமுகம் செய்தனர். அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு அடுத்தபடியாக நுபியா நிறுவனம் 3D டிஸ்பிளேவை ஆதரிக்கும் nubia Pad 3D டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்தது.
3D கண்ணாடிகள் தேவையில்லை: இப்போது, நுபியா நிறுவனம் இந்த டேப்லெட் வரிசையை மேம்படுத்தியுள்ளது. நிறுவனம் இப்போது நுபியா பேட் 3D II (nubia Pad 3D II) என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 3D கண்ணாடிகள் தேவைப்படாத முழுமையான 3D டிஸ்பிளேவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய டேப்லெட் சாதனம் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.
இந்த புதிய நுபியா பேட் 3D II (nubia Pad 3D II) சாதனம் உலகின் முதல் 5G + AI அம்சம் கொண்ட கிளாஸ் ஃபிரீ 3D டிஸ்பிளே சாதனமாக வெளிவந்துள்ளது. இதற்கு முந்தைய வெர்ஷன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வெளிவந்தது. ஆனால், தற்போதைய புதிய நுபியா பேட் 3D II மாடல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

நியோவிஷன் 3D எனிடைம்: இதற்கு முன்பதைய மாடல் நுபியா பேட் 3D மொபைல் கனக்டிவிட்டி அம்சம் எதுவதும் இல்லாமல் வெளியானது. ஆனால், தற்போதைய புதிய டேப்லெட் மாடல் 5G இணைப்புடன் வெளிவந்துள்ளது. இது AI அம்சத்துடனும் செயல்படுகிறது. முந்தைய மாடலில் 2D-to-3D கன்வெர்ட்டர் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் புதிய டேப்லெட் மாடல் புதிய தொழில்நுட்பமான நியோவிஷன் 3D எனிடைம் (Neovision 3D Anytime) அம்சத்தை கொண்டுள்ளது.
டிஸ்பிளே: இது உண்மையில் மிக சிறந்தது. இது AI உதவியுடன் பிக்ச்சர், வீடியோஸ், ஸ்ட்ரீமிங் மீடியா உட்பட மற்றும் கேம்களை கூட 3D ஆக மாற்றி சிறந்த விஷுவல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த புதிய டேப்லெட் சாதனம் 12.1" இன்ச் அளவு கொண்ட IPS LCD உடன் 2,560 x 1,600 பிக்சல் கொண்ட 144Hz ரெஃப்ரஷ் ரேட் கிரிஸ்டல் லென்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது 3D தெளிவுத்திறனில் 80% அதிகரிப்பு மற்றும் 3D பயன்முறையில் பிரகாசத்தை இரட்டிப்பாக்க உறுதியளிக்கிறது. கூடுதலாக, இது 3D க்ரோஸ்டாக்கைக் குறைத்து, 3D நிறங்கள் மற்றும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்தி 3D அனுபவத்தை சிறப்படைய செய்துள்ளது. இந்த டிஸ்ப்ளே 86° பார்க்கும் கோணத்தை வழங்குகிறது. இதனால், பல நபர்களை ஒரே நேரத்தில் 3D விளைவைப் பார்க்க அனுமதிக்கிறது.
இது நேச்சர் மற்றும் எந்தவிதமான உருவப்படமாக இருந்தாலும் அதை 3D ஆக மாற்றி வீடியோவில் காண்பிக்கிறது. இது LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 13MP டூயல் ரியர் கேமராவுடன், முன்பக்கத்தில் டூயல் 8MP கேமராவை கொண்டுள்ளது. இது 10,000mAh பேட்டரி உடன் 66W பாஸ்ட் சார்ஜ்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








