வந்தாச்சு UPI 123Pay சிஸ்டம்.. இந்த பேங்க் கஸ்டமர்கள் இனி இன்டர்நெட் இல்லாம GPay, PhonePeவில் பணம் அனுப்பலாம்!
யுபிஐ 123பே (UPI 123Pay) என்கிற குரல் அடிப்படையிலான யுபிஐ கட்டண முறையை (Voice Based UPI Payments System) செயல்படுத்துவதற்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியிடமிம் இருந்து என்பிஎஸ்டி (NPST) என்கிற நெட்வொர்க் பீப்பிள் சர்வீசஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் (Network People Services Technologies Limited) ஆனது ஒரு குறிப்பிடத்தக்க ஆணையைப் பெற்றுள்ளது.
இந்த வாய்ஸ் பேஸ்டு யுபிஐ பேமண்ட் சிஸ்டம் ஆனது பீச்சர் மொபைல் போன் பயனர்கள் (Feature Phone Users) மற்றும் தொழில்நுட்ப ஆர்வலரல்லாத ஸ்மார்ட்போன் பயனர்கள் (Non-tech-savvy smartphone users) ஆகியோர்கள் யுபிஐ கட்டண சேவைகளை அணுகுவதன் மூலம் டிஜிட்டல் பிளவை குறைப்பதை நோக்கமாக கொண்டு உள்ளது.

யுபிஐ 123பே யாருக்கான அம்சமாகும்? இந்தியாவில் இதுவரை யுபிஐ சேவையை ஏற்றுக்கொள்ளாத சுமார் 850 மில்லியன் தனிநபர்கள் உள்ளார், இதில் 400 மில்லியன் பேர் பீச்சர் அல்லது பட்டன் மொபைல் பயனர்களாக உள்ளனர். அவர்கள் தான் யுபிஐ 123பே சிஸ்டமின் டார்கெட் ஆடியன்ஸ் (Target Audience) ஆவார்கள்.
யுபிஐ 123பே முக்கிய அம்சங்கள்:
- டெக்னாலஜி: இது மொபைல் டேட்டா அல்லது இன்டர்னெட் கனெக்ஷன் இல்லாமல் செயல்படும்
- யூஸர் இன்டர்பேஸ்: மிஸ்டு கால்கள் மற்றும் ஐவிஆர் அழைப்புகள் மூலம் குரல் அல்லது கீபேட் இன்புட்ஸ் மூலம் பணம் செலுத்தலாம்,
- லேங்குவேஜ் சப்போர்ட்: இந்த அம்சம் 12 இந்திய மொழிகளில் அணுக கிடைக்கிறது.
- கூடுதல் அம்சங்கள்: பேலன்ஸ் செக்ஸ் (Balance checks), பரிவர்த்தனை வரலாறு (transaction history), டிஸ்ப்யூட் மேனேஜ்மென்ட் (Dispute management) மற்றும் யுபிஐ பின் மேனேஜ்மென்ட் (UPI PIN management) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது
என்பிஎஸ்டி ஆனது மிஸ்கால்பே (MissCallPay) உடன் இணைந்து இந்த வாய்ஸ் பேஸ்டு யுபிஐ பேமண்ட் சிஸ்டமை உருவாக்கியுள்ளது. அதாவது யூஸர் பிரெண்ட்லி பேமெண்ட் முறையை உருவாக்கும் இவ்விரு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த நிபுணத்துவத்தை இந்த அம்சம் பயன்படுத்துகிறது. குரல் அடிப்படையிலான யுபிஐ கட்டண தளம் ஆனது பரந்த அளவிலான பயனர்களுக்கு, குறிப்பாக பாரம்பரிய டிஜிட்டல் கட்டண முறைகளை சவாலாக கருதுபவர்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஜூனியோ பேமெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் (Junio Payments Private - JPPL) ஆனது ப்ரீபெய்ட் பேமென்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை (Prepaid Payment Instruments - PPIs) வழங்க இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து (Reserve Bank of India - RBI) கொள்கை ரீதியான அங்கீகாரத்தை பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
ஜூனியோ பேமெண்ட்ஸ் ஆனது ஃபர்ஸ்ட்பே டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்டின் (FirstPay Technologies Private Limited) துணை நிறுவனம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்புதலின் கீழ், யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த பேமென்ட் இன்டர்ஃபேஸுடன் (Unified Payments Interface) இணைக்கப்பட்ட டிஜிட்டல் வாலட்டை அறிமுகப்படுத்த ஜூனியோவை அனுமதி கிடைத்துள்ளது.
இதனால் பயனர்கள் - குறிப்பாக டீனேஜர்கள் மற்றும் இளைஞர்கள் - யுபிஐ க்யூஆர் குறியீடுகளை ஸ்கேன் செய்து வங்கி கணக்கு இல்லாமலேயே பணம் செலுத்த முடியும். இந்த அம்சம் என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய பேமென்ட் கார்ப்பரேஷனின் (National Payments Corporation of India) யுபிஐ சர்க்கிள் முயற்சியுடன் ஒத்துப்போகிறது.
இது இளம் பயனர்கள் தங்கள் பெற்றோரின் பேங்க் அக்கவுண்ட் உடன் இணைக்கப்பட்டு, அதன் மூலம் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும். அறியாதோர்களுக்கு ஜூனியோ பேமெண்ட்ஸ் என்பது அங்கித் கேரா மற்றும் சங்கர் நாத் ஆகியோரால் நிறுவப்பட்ட, இளம் பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பேமண்ட் ஆப் ஆகும்.


Click it and Unblock the Notifications








