Home
News

புது UPI ரூல்ஸ்.. ரூ.5000 ரூபாயோ.. ரூ.15000 ரூபாயோ.. 1 நாளுக்கு இவ்ளோ.. பணம் அனுப்ப இத பண்ணுங்க.. என்ன வருது?

யுபிஐ (UPI) ஆப்கள் மூலம் பணம் அனுப்பும் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் பொருந்தும்படியான புதிய விதிகளை என்பிசிஐ (NPCI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (National Payments Corporation of India) கொண்டு வந்துள்ளது. இது விதிகள் பீம் (BHIM), போன்பே (PhonePe) போன்ற ஆப்களுக்கு வந்துவிட்டது. கூகுள் பே (Google Pay) பரிவர்த்தனைக்கும் வர இருக்கிறது. இந்த விதிகள் என்ன சொல்கிறது?

இந்த புதிய விதிகளால் கஸ்டமர்களுக்கு எந்தவித சிரமும் இருக்காது. சொல்லப்போனால், இந்த விதிகள் யுபிஐ சர்க்கிள் (UPI Circle) மூலம் ஒரே பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து பல மொபைல் நம்பர்கள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, இதற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5,000 மற்றும் ஒரு மாதத்துக்கு ரூ.15,000 என்று வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புது UPI ரூல்ஸ்.. ரூ.5000 ரூபாயோ.. ரூ.15000 ரூபாயோ.. 1 நாளுக்கு இவ்ளோ!

கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களும் யுபிஐ சர்க்கிள் விதிகளை பின்பற்ற நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உத்தரவிட்டுள்ளது. இதில் பீம் மற்றும் போன்பே ஆப்களில் யுபிஐ சர்க்கிள் விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இந்த விதிகளை தெரிந்து கொள்வதற்கு முன்பு யுபிஐ சர்க்கிளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் யுபிஐ ஆப்கள் மூலம் பணம் அனுப்ப வேண்டுமானால், ஒரேவொரு மொபைல் நம்பரை வைத்தே அனுப்ப முடியும். 2 அல்லது அதற்கு மேற்பட்ட மொபைல் நம்பர்கள் இருந்தாலும், பேங்குடன் இணைக்கப்பட்ட நம்பரை வைத்து மட்டுமே யுபிஐ பரிவர்த்தனைகள் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்படுகிறது.

ஆனால், யுபிஐ சர்க்கிள் மூலம் ஒரே பேங்க் அக்கவுண்ட் மூலம் பல மொபைல் நம்பர்களை இணைத்து பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும். ஆனால், பேங்குடன் இணைக்கப்பட்டிருக்கும் நம்பரை வைத்திருக்கும் கஸ்டமர்களின் கட்டுப்பாட்டிலேயே மற்ற மொபைல் நம்பர்களில் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். அதுவும் குறிப்பிட்ட தொகையை மட்டுமே அனுப்ப முடியும்.

அதாவது, பீம் யுபிஐ மற்றும் போன்பே ஆகிய ஆப்களின் இப்போது யுபிஐ சர்க்கிள் கிடைக்கிறது. இந்த யுபிஐ சர்க்கிள் மூலம் உங்களது குடும்ப உறுப்பினர்கள் யாருக்காவது கூடுதலாக ஒரு யுபிஐ அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து கொடுக்க முடியும். அதன் மூலம் அவர்கள் பணத்தை அனுப்பி கொள்ள முடியும். இந்த பணமும் உங்களது பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து எடுக்கப்படும்.

ஆனால், அந்த பணத்தை எடுக்கும்போது உங்களது அனுமதி கேட்கப்படும். இதற்கு நீங்கள் ஒப்புதல் அளித்த பிறகு உங்களது குடும்ப உறுப்பினர்கள் பணத்தை செலவு செய்ய முடியும். இதற்கு விதிகள் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றன. அதை இப்போது பார்ப்போம். பேங்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை வைத்திருக்கும் நபர் மட்டுமே செகண்டரி யுபிஐ ஐடியை ஓப்பன் செய்ய முடியும்.

இந்த செகண்டரி ஐடியானது உங்களது குடும்ப உறுப்பினர் அல்லது நண்பர்களாக இருக்கலாம். செகண்டரி யுபிஐ ஐடிக்கு பேங்க் அக்கவுண்ட் தேவையில்லை. ஆனால், அவர்கள் மொபைல் நம்பர் மற்றும் இன்டர்நெட் வைத்திருக்க வேண்டும். அதேபோல அவர்கள் குறிப்பிட்ட தொகையை மட்டுமே அனுப்ப முடியும். ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5,000 மற்றும் மாதத்துக்கு ரூ.15,000ஆக நிர்ணயம் இருக்கிறது.

இந்த தொகையை அவர்கள் யாருக்காவது அனுப்பும்போது, பிரைமரி மொபைல் நம்பர் வைத்திருக்கும் நபரின் அனுமதி கேட்கப்படும். அவர்கள் அனுமதித்த பிறகே அந்த பரிவர்த்தனையை அவர்கள் செய்து முடிக்க முடியும். இந்த ரூ.15,000 தொகையையும் பிரைமரி நபர் குறைத்து கொள்ளலாம். அவர்கள் எவ்வளவு தொகையை செகண்டரி ஐடிக்குக்கு கொடுக்க நினைக்கிறாரோ அதை அவரே நிர்ணயிக்கலாம்.

இந்த விதிகளின்படி யுபிஐ சர்க்கிளை பயன்படுத்த முடியும். இப்போது, பீம் யுபிஐ ஆப் மற்றும் போன்பே ஆகிய ஆப்களில் இந்த யுபிஐ சர்க்கிள் கிடைக்கிறது. கூகுள் பே, பேடிஎம் போன்ற மற்ற யுபிஐ ஆப்களிலும் கிடைக்க இருக்கிறது. ஏனென்றால், அனைத்து யுபிஐ ஆப்களும் இதை கொடுக்க வேண்டும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
NPCI Transactions Rules For UPI Circle Rs 5000 For Per Transactions Rs 15000 For Per Month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X