Home
News

ரெடியா இருங்க.. அடிக்கடி ரூ.50 இல்லனா ரூ.100 UPI பேமண்ட் பண்ணுவீங்களா? அப்போ NPCI-யோட அடுத்த குறி நீங்க தான்!

யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தும் அனைவருமே ரூ.1000 அல்லது ரூ.2000 பணம் அனுப்புவதில்லை. அரை லிட்டர் பால் வாங்கும் போது, ஒரு டீ குடிக்கும் போது, ஒரே ஒரு மளிகை பொருள் வாங்கும், மெடிக்கலில் 2 மாத்திரைகள் வாங்கும் போது.. ரூ.50 அல்லது ரூ.100 க்கும் குறைவான தொகையை செலுத்தவும் கூட யுபிஐ சேவையை பயன்படுத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட சிறிய அளவிலான தொகையை பணப்பரிமாற்றம் செய்யும் செயல்முறை ஆனது லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் (Low-ticket payments) என்று அழைக்கப்படுகிறது. இந்த லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் தொடர்பான ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவர என்பிசிஐ (NPCI - National Payments Corporation of India) திட்டமிட்டுள்ளது.

ரெடியா இருங்க.. அடிக்கடி ரூ.50 இல்லனா ரூ.100 UPI பேமண்ட் பண்ணுவீங்களா?

யுபிஐ சேவையில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் பரிவர்த்தனை தோல்விகளை குறைக்கும் நோக்கத்தின் கீழ் லோ-டிக்கெட் பேமண்ட்களை யுபிஐ லைட்டிற்கு மாற்றுவதற்கான வேலைகளை என்பிசிஐ செய்து வருகிறது. இப்படி செய்வதன் மூலம் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சுற்றுச்சூழல் அமைப்பானது (Unified Payments Interface ecosystem) இன்னும் திறம்பட செயல்படும் என்று என்பிசிஐ நம்புகிறது.

யுபிஐ சேவையில் ஏற்படும் சரிவுகள் (Declines) ஆனது, கடந்த 2016 ஆம் ஆண்டில் 8-10 சதவீதமாக இருந்தது, ஆனால் 2024 ஆம் ஆண்டில் 0.7 சதவீதமாக குறைந்துள்ளதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் நிர்வாக இயக்குனர் (MD) மற்றும் தலைமை செயல் அதிகாரி (CEO) திலிப் அஸ்பே கூறியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலோட்டமாக பார்த்தால் 0.7% என்பது மிகவும் குறைவான எண்ணிக்கை தான் என்றாலும் கூட, ஆனால் பணம் அனுப்ப முடியாமல் சிக்கி தவிக்கும் சூழ்நிலையில் உங்களை நீங்களே பொருத்திக்கொண்டு பார்த்தால்.. அதாவது உங்களுக்கு யுபிஐ பேமண்ட் டிக்லைன் ஏற்பட்டால், 0.7% கூட பெரிதாக தோன்றும். யுபிஐ சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதும் இங்கே குறிப்பிடத்தக்கது

இந்தியாவில் தற்போது, ​​400 மில்லியனுக்கும் அதிகமான தனிப்பட்ட பயனர்கள், நிகழ்நேர கட்டணங்களுக்கு யுபிஐ சேவையை பயன்படுத்துகின்றனர். இதில் சிறிய அளவிலான தொகையை அனுப்பும் பயனர்கள் யுபிஐ லைட் சேவையை பயன்படுத்தினால், யுபிஐ சேவையில் ஏற்படும் சரிவுகளின் எண்ணிக்கை இன்னும் குறைக்கப்படும் என்பதில் சந்தேகமே வேண்டாம்

ஏனென்றால் யுபிஐ லைட் என்பது யுபிஐ பின் நம்பரை பயன்படுத்தாமலேயே குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும் சேவையாகும். இதன் கீழ் செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான வெற்றி விகிதம் அதிகமாக இருக்கும். மேலும் இது குறைந்த உள்கட்டமைப்பு லோட்-ஐ (Infrastructure load) கொண்டிருக்கும் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் செயல்முறையை இன்னும் எளிதாக்கும்படியான சிம்பிள் ஆன வடிவமைப்பையும் கொண்டிருக்கும்.

ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்டுடம் இந்திய ரிசர்வ் வங்கி ஆனது யுபிஐ லைட் சேவையில் 3 முக்கிய மாற்றங்களை (நவ.1 முதல்) அமல்படுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பானது (UPI Lite Transaction Limit) ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. கடைசியாக யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், அதை தானாகவே டாப்-அப் செய்யும் ஆட்டோ டாப்-அப் அம்சமும் (Auto top-up feature) அறிமுகம் செய்யப்பட்டது

இந்திய அரசாங்கத்திற்கு யுபிஐ சேவைகள் தொடர்பான இந்த மாற்றங்கள் எல்லாமே மிகவும் முக்கியம். ஏனென்றால் கடந்த 2024 அக்டோபரில் ரூ.23.5 டிரில்லியன் மதிப்புள்ள 16.58 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் (16.58 billion UPI transactions worth Rs.23.5 trillion) நடந்துள்ளதாக என்பிஐசி-யின் தரவு காட்டுகிறது.

Best Mobiles in India

English summary
NPCI To Migrate Low Ticket Payments to UPI Lite to Reduce technical issues transaction failures
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X