Google Pay, PhonePe, Paytm-க்கு புது ரூல்ஸ்.. டிச.31 முதல் அமல்.. உங்க பணத்தை அனுப்புவதில் முக்கிய மாற்றம்!
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது யுபிஐ பயனர்களுக்கு ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டுவருகிறது. இந்த மாற்றம் டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து வர இருக்கிறது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த பின்வரும் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஆனது யுபிஐ ஆட்டோபே (UPI Autopay) சேவையில் பயனர்கள் மற்றும் வணிகர்களுக்கான கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையில் பல முக்கிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இந்த மாற்றங்கள் டிசம்பர் 31ஆம் தேதியில் அமலுக்கு வருகிறது.

பயனர்களுக்கான (Users) முக்கிய அம்சங்கள்: எல்லா செயலிகளிலும் மேன்டேட்களைப் பார்த்து கொள்ளலாம். இப்போது, பயனர்கள் தங்கள் விருப்பப்படி எந்த யுபிஐ செயலி (UPI App) வழியாகவும் அவர்கள் ஆக்டிவ் செய்துள்ள அனைத்து யுபிஐ ஆட்டோபே மேன்டேட்கள் மற்றும் ஸ்கெடுள் பேமெண்ட்களை (Automatic Payments/Scheduled Payments) பார்க்க முடியும்.
போர்ட்டிங் வசதி (Port Mandate) வழியாக ஒரு யுபிஐ செயலியில் இருந்து மற்றொரு யுபிஐ செயலிக்கு மேன்டேட்களை மாற்றும் (Port) செய்யும் வசதி பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. போர்ட் மேன்டேட் உட்பட அனைத்து யுபிஐ ஆட்டோபே செயல்பாடுகளுக்கும் யுபிஐ பின் (UPI PIN) கட்டாயம் தேவைப்படும். ஆகவே, பயனர்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறது.
போர்ட்டிங் வசதி என்பது மேன்டேட் விவரங்கள் பக்கத்திலிருந்து பயனர் விருப்பத்தின் பேரில் மட்டுமே செய்யப்படும். மேன்டேட்களை மாற்றுவதற்கு எந்தவிதமான ஊக்கத் தொகைகள், கேஷ்பேக்குகள் அல்லது விளம்பரங்கள் வழங்க முடியாது. போர்ட் மேன்டேட் செய்வதை 90 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே செய்து கொள்ள முடியும்.
வணிகர்களுக்கான (Merchants) முக்கிய அம்சங்கள்: ஒவ்வொரு வணிகருக்கும் தனித்துவமான வணிகர் அடையாளக் குறியீடு (MIC) ஆனது உருவாக்கப்பட வேண்டும். இந்த அடையாளக் குறியீடு பேமெண்ட் சர்வீஸ் புரொவைடர்களால் உருவாக்கப்பட வேண்டும். இது வணிகர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஏஇசட் (AZ) பர்பஸ் கோட் கொண்டதாகும்.
ஆகவே, அனைத்து யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களுக்கும் இது கட்டாயமாகும். மேன்டேட் பாஸ் செய்வதில் வணிகர்கள் இப்போது தங்கள் விருப்பமான Payee PSP (பணம் பெறும் வங்கி/நிறுவனம்) வழியாக யுபிஐ ஆட்டோபே மேன்டேட்களை போர்ட் செய்து, அவற்றைச் செயல்படுத்திக் கொள்ள (Execute) முடியும். அதேபோல யுபிஐ ஐடி புதுப்பித்தல் செய்யலாம்.
ஆகவே, வணிகர்கள் தங்களுக்கு தற்போதுள்ள யுபிஐ ஐடி-களை வணிகர் அடையாளக் குறியீடு அல்லது பிற மேன்டேட் விவரங்களை மாற்றாமல் புதுப்பித்து கொள்ளலாம். இருப்பினும், ஆக்டிவ் ஆக உள்ள மேன்டேட்களுக்கான யுபிஐ ஐடி புதுப்பிப்பு என்பது ஒழுங்குமுறை உத்தரவாகும். ஆகவே, Payee PSP-இன் சேவைகள் நிறுத்தப்படும் சூழ்நிலைகளில் மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்த மாற்றங்கள் அமலுக்கு வந்த பிறகு, 2026 ஜனவரி 1 முதல் பயனர்களால் எந்தவொரு யுபிஐ செயலி வழியாகவும், தங்கள் ஆட்டோபே பேமண்ட்டுகளை நிர்வகிக்கவும் மற்றும் பார்த்து கொள்ளவும் முடியும். போன்பேவில் ஆட்டோபே செய்யப்பட்டிருந்தால், அதை கூகுள் பே வழியாக பார்த்து கொள்ளலாம். இப்படி யுபிஐ செயலிகள் வழியாக போர்ட் செய்து பார்த்து கொள்ளலாம்.
யுபிஐ ஆட்டோபே (UPI Autopay) ஆனது குறிப்பிட்ட சேவைகளுக்கு மாதம் மாதம் தானாகவே பணத்தை எடுத்து கொள்ளும்படியான சேவையை கொடுக்கிறது. மாதாந்திர சந்தா செலுத்துதல், ஓடிடி செயலிகளுக்கு சந்தா செலுத்துதல், எஸ்ஐபி செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளுக்கு கிடைக்கிறது. இது எந்த செயலிகளில் செய்கிறோமோ அதில் மட்டுமே கிடைத்தது. இனிமேல் அனைத்து யுபிஐ செயலிகளிலும் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








