UPI சேவையில் புதிய கட்டுப்பாடு.. Google Pay, PhonePe யூசர்கள் கவனத்திற்கு.. NPCI-யின் 2 முக்கிய மாற்றங்கள்!
என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது, கூகுள் பே, போன்பே, பேடிஎம் உள்ளிட்ட பேமண்ட் ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) சேவையில் சில புதிய கட்டுப்பாடுகளை, கூடிய விரைவில் அறிவிக்கலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது.
மோசடியான பணப்பரிவர்த்தனைகளில் (Fraudulent transactions) தவறாக பயன்படுத்தப்படுவது குறித்த கவலைகளை தொடர்ந்து, யுபிஐ சேவையின் கீழ் அனுக கிடைக்கும் கலெக்ட் (Collect) மற்றும் ஆட்டோபே (AutoPay) அம்சங்களில் மாற்றங்களை கொண்டுவர என்பிசிஐ திட்டமிட்டு வருவதாக, இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்துள்ளதாக என்டிடிவி ப்ராஃபிட் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அறியாதோர்களுக்கு கலெக்ட் என்பது ஒரு பேமண்ட் டூல் ஆகும். இது வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனையை தொடங்குவதற்கு பதிலாக வணிகர்களுக்கு நிதி கோரிக்கையை தொடங்க அனுமதிக்கிறது. மறுகையில் உள்ள ஆட்டோபே அம்சம் என்பது பில்கள் மற்றும் சந்தாக்களுக்கான தொடர்ச்சியான கட்டணங்களை ஆதரிக்கிறது. இரண்டிலுமே - வாடிக்கையாளர்களுக்கும், வணிகர்களுக்கும் இடையில் பேமண்ட் அக்ரிகேட்டர்கள் (யுபிஐ சேவை வழங்குநர்கள்) இடைத்தரகர்களாக செயல்படுகின்றன.
இந்த நடவடிக்கை - வணிகரால் தொடங்கப்பட்ட கோரிக்கைகள் (Merchant-initiated requests) மற்றும் சந்தா கட்டணங்கள் (Subscription payments) ஆகிய இரண்டையும் குறிவைக்கிறது. பெர்சன் டூ பெர்சன் மெர்சண்ட் (person-to-person merchant) வகைக்கான கலெக்ட் அம்சத்தில் - தேர்ந்தெடுக்கப்பட்ட கட்ட வெளியேற்றத்திற்கு (Selective phase-out) தயாராகுமாறு என்பிசிஐ ஆனது பேமண்ட் அக்ரிகேட்டர்களிடம் கேட்டு கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது
வணிகர்களால் மீண்டும் மீண்டும் வசூலிக்கப்படும் கலெக்ட்டை பயன்படுத்துவதைத் தடுப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். மேலும் சந்தா அடிப்படையிலான கட்டணங்களை வாடிக்கையாளர்கள் தெளிவாக காணவும், அதை அங்கீகரிக்கவும் ஆட்டோபேக்கான கடுமையான காட்சி விதிகளை (Display rules) வலுப்படுத்தவும் என்பிசிஐ திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தெளிவற்ற காட்சி வடிவங்கள் (Unclear display formats) ஆனது வாடிக்கையாளர்களுக்கு நிதி இழப்புகளுக்கு பங்களித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக கலெக்ட் அம்சம் ஆனது உள்நோக்கம் சார்ந்த மற்றும் க்யூஆர் டிப்படையிலான பரிவர்த்தனைகளை (intent-based and QR-based transactions) நோக்கி மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோபே அம்சத்தில் - தெளிவான ஆட்டோபே டிஸ்பிளேக்கள் ஆனது திட்டமிடப்படாத நீண்ட கால சந்தா ஒப்புதல்களை கட்டுப்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஒய் இந்தியாவின் கூட்டாளர் மற்றும் கட்டணத் துறைத் தலைவர் ஆன ரனதுர்ஜய் தாலுக்தார், பி2பி கலெக்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட "மறைவு" ஆனது பேடிஎம், பைன் லேப்ஸ் மற்றும் மொபிக்விக் போன்ற நிறுவனங்களை பெரிதும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை என்று கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது
பி2பி கலெக்ட் ஒரு பெரிய வருவாய் இயக்கியாக இருக்கவில்லை என்றும், இந்த வணிகங்கள் முக்கியமாக வணிகர் பேமண்ட், மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள், சந்தாக்கள், கடன் மற்றும் பிஓஎஸ் தீர்வுகள் மூலம் சம்பாதிக்கின்றன என்றும், அவை பாதிக்கப்படாமல் உள்ளன என்றும் அவர் கூறி உள்ளார்.
க்யூஆர் பேமண்ட்கள் மற்றும் வணிகர் சேகரிப்பு விருப்பங்கள் தொடர்வதால் முறையான வணிகர்கள் இடையூறுகளை எதிர்கொள்ள வாய்ப்பில்லை என்றும் தாலுக்தார் குறிப்பிட்டார். இருப்பினும் பி2பி கலெக்டை நம்பியிருக்கும் சிறிய வணிகர்கள் க்யூஆர் மற்றும் புஷ் பேமெண்ட்டுகளுக்கு மாறுவதற்கு முன்பு குறுகிய கால சரிசெய்தல்களை எதிர்கொள்ள நேரிடும்.
வணிகர்களால் தொடங்கப்பட்ட சேகரிப்பு கோரிக்கைகளை கட்டுப்படுத்துவது - வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணம் செலுத்துவதற்கு, வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சமூக-பொறியியல் வழியை மூடக்கூடும். இது யுபிஐ சேவையின் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும் மற்றும்வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏற்படும் குழப்பத்தையும் நிச்சயம் குறைக்கும். ஆனாலும் கூட இது யுபிஐ தொடர்பான அனைத்து மோசடி அபாயங்களையும் நீக்குமா என்று கேட்டால் - நிச்சயமாக இல்லை!


Click it and Unblock the Notifications








