ரூ.1 லட்சம் லிமிட் கதை முடிந்தது.. Google Pay, PhonePe அதிரடி மாற்றம்.. UPI லிமிட் இதுதான்.. எந்த பேமெண்ட்?
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பீம் (BHIM) போன்ற யுபிஐ (UPI) ஆப்கள் வழியாக பரிவர்த்தனைகளுக்கு 1 நாளுக்கு ரூ.1 லட்சமாக இருந்த வரம்பு ரூ.10 லட்சமாக மாறிவிட்டது. என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஆனது புதிய வரம்பு கொடுத்துள்ளது.
தங்கம், வெள்ளி வாங்குவது, வருமான வரி செலுத்துவது, பள்ளி, கல்லூரி கட்டணங்களை செலுத்துவது போன்ற குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, விலக்கு அளிக்கப்பட்டு வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த பரிவர்த்தனை வரம்புகள் அமலுக்கு வந்துவிட்டன. பேங்குகளின் வரம்பை சரிபார்த்துவிட்டு, இந்த பரிவர்த்தனைகளை செய்யலாம்.

இன்சூரன்ஸ் செலுத்தும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரையில் செலுத்தலாம். 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரையில் செலுத்தலாம். ஹெல்த் இன்சூரன்ஸ், லைப் இன்சூரன்ஸ் உள்ளிட்ட அதிக தொகைகளுக்கு இந்த வரம்பு பொருந்தும். முன்னதாக ரூ.2 லட்சம் மட்டுமே இதற்கு அதிகபட்ச வரம்பு இருந்நது.
மூலதன சந்தையில் முதலீடு செய்யும்போது, 24 மணி நேரத்துக்கு ரூ.10 லட்சம் வரையில் யுபிஐ ஆப்கள் வழியாக பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். இது பர்சன்-டூ-மெர்ச்சன்ட் (Person-to-Merchant) பரிவர்த்தனைகளுக்கு பொருந்துகிறது. முன்னதாக ரூ.2 லட்சமாக வரம்பு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அரசு இ-சந்தை கட்டணங்கள் செலுத்தும்போது ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். 24 மணி நேரத்துக்கு ரூ.10 லட்சம் வரையில் பரிவர்த்தனைகளை யுபிஐ ஆப்கள் வழியாக செய்து கொள்ளலாம். இந்த வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது.
கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளை கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்கள் வழியாக செய்தால், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரையில் வரம்பு இருக்கிறது. 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சம் வரையில் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். முன்னதாக ரூ.2 லட்சமாக இந்த வரம்பு இருந்தது.
தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்களை வாங்கும்போது, 24 மணி நேரத்தில் ரூ.6 லட்சம் வரையில் பரிவர்த்தனைகளை செய்து கொள்ளலாம். முன்னதாக கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்கள் வழியாக ரூ.2 லட்சம் வரையில் மட்டுமே தங்கம், வெள்ளி, வைரம் போன்ற ஆபரணங்களை வாங்க முடிந்தது.
வியாபார ரீதியிலான கலெக்சன்களில் 24 மணி நேரத்துக்கு ரூ.10 லட்சம் வரையில் பரிவர்த்தனைகளை செய்யலாம். முன்னதாக ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பாக இருந்தது. மூலதன சந்தையில் முதலீடு செய்யும்போது, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் வரம்பு இருக்கிறது. 24 மணி நேரத்துக்கு ரூ.10 லட்சம் வரையில் வரம்பு இருக்கிறது.
இந்த பரிவர்த்தனைகளும் பர்சன்-டூ-மெர்ச்சன்ட் கீழ் வருகிறது. முன்னதாக ரூ.2 லட்சமாக வரம்பு இருந்தது. டிராவல் பரிவர்த்தனைகளில் பர்சன்-டூ-மெர்ச்சன்ட் பரிவர்த்தனைகளை செய்யும்போது, ஒரு பரிவர்த்தனைக்குக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையில் அனுமதி கிடைக்கும். 24 மணி நேரத்தில் ரூ.10 லட்சம் வரையில் அனுப்பலாம்.
முன்னதாக இந்த வரம்பு ரூ.1 லட்சமாக இருந்தது. பிரீமியம் ஹோட்டல் புக்கிங், டிக்கெட் புக்கிங் உள்ளிட்டவைக்கு பொருந்தும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கட்டணங்களை செலுத்தும்போது யுபிஐ வரம்பு ரூ.5 லட்சமாக இருக்கிறது. வரிமான வரியை செலுத்துவதில் ரூ.5 லட்சமாக வரம்பு இருக்கிறது.
ஆனால், சரிபார்க்கப்பட்ட வணிகர்களிடம் பரிவர்த்தனைகளை செய்யும்போது பொருந்தும். கூகுள் பே, போன்பே, பேடிஎம், அமேசான் பே, பீம் போன்ற ஒட்டுமொத்த யுபிஐ ஆப்களுக்கும் இந்த பரிவர்த்தனை வரம்புகள் பொருந்தும். இருப்பினும், பேங்க் அக்கவுண்ட்டுக்கு இருக்கும் வரம்பையும் கஸ்டமர்கள் சரிபார்த்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications