Home
News

இனி ரூ.1 லட்சம் லிமிட் இல்லை.. மொத்தமாக மாறிய UPI ரூல்ஸ்.. NPCI அதிரடி மாற்றம்.. இனி இந்த வகை பேமண்ட்க்கு?

யுபிஐ (UPI) வழியாக பெரும்பாலான தினசரி பரிமாற்றங்களுக்கான வரம்பு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும், என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (Unified Payments Interface) அரசு பணப்பரிவர்த்தனைகளுக்காக (government payments) ஒரு குறிப்பிடத்தக்க விதிவிலக்கை உருவாக்கியுள்ளது.

இதன்கீழ் வரி செலுத்துவோர்கள் இப்போது வருமான வரி மற்றும் பிற அரசு நிலுவைகளுக்காக மட்டும் ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் வரை யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். இந்த நடவடிக்கை, அதிக மதிப்புள்ள வரி செலுத்துதலை மளிகை பொருட்கள் வாங்குவது போல தடையற்றதாக மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக மாறிய UPI ரூல்ஸ்.. இனி இந்த வகை பேமண்ட்க்கு?

ரூ.1 லட்சம் உச்சவரம்பை உடைத்தல்: புதுப்பிக்கப்பட்ட 2026 வழிகாட்டுதல்களின்படி, வருமான வரித் துறை உட்பட அரசு துறையில் உள்ள சரிபார்க்கப்பட்ட வணிகர்கள், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5 லட்சம் என்ற உயர்த்தப்பட்ட வரம்பிற்கு தகுதி பெறுகிறார்கள். இது, பயனர்கள் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) அல்லது பீம் (BHIM) போன்ற ஆப்கள் மூலம் கணிசமான வரிப்பொறுப்புகளை உடனடியாக செலுத்த அனுமதிக்கிறது.

வெற்றிகரமான பணப்பரிவர்த்தனையை உறுதி செய்வது எப்படி? என்பிசிஐ ஆனது அதிக வரம்பை அனுமதித்தாலும், உங்கள் பணப்பரிவர்த்தனையின் வெற்றி பெரும்பாலும் உங்கள் தனிப்பட்ட வங்கியை பொறுத்தது. சில கடன் வழங்குநர்கள் மோசடியை தடுப்பதற்காக இன்னமும் உள் வரம்புகளை (Internal caps ) பராமரிக்கின்றனர்.

உங்களுடைய அதிக மதிப்புள்ள வரி செலுத்துதல் நிராகரிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய 3 விஷயங்களை கவனமாக சரிபார்க்க வேண்டும். ஒன்று - வங்கியின் வரம்புகளை சரிபார்க்கவும்: முதலில் "அரசு / வரி" பிரிவுகளுக்கான உயர்த்தப்பட்ட ரூ.5 லட்சம் வரம்பை உங்கள் குறிப்பிட்ட வங்கி ஆதரிக்கிறதா என்பதை சரிபார்க்கவும்.

இரண்டு - இ-தாக்கல் போர்ட்டலை பயன்படுத்தவும்: "பேமெண்ட் கேட்வே" முறையை பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ வருமான வரி இ-தாக்கல் போர்ட்டலில் இருந்து நேரடியாக பணம் செலுத்துதலை தொடங்கவும். மூன்று - காத்திருப்பு காலங்கள்: நீங்கள் சமீபத்தில் உங்கள் யுபிஐ பின் நம்பரை மாற்றியிருந்தால் அல்லது ஒரு புதிய வங்கி கணக்கை இணைத்திருந்தால், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனையை முயற்சிப்பதற்கு முன் 24 மணிநேரம் காத்திருக்கவும்.

ரூ.5 லட்சம் கிளப்பில் ஏற்கனவே உள்ள பேமண்ட்கள்: இந்த டிஜிட்டல் உந்துதலால் பயனடைவது வருமான வரித் துறை மட்டுமல்ல. என்பிசிஐ ஆனது தினசரி ரூ.5 லட்சம் வரம்பை மற்ற முக்கிய துறைகளுக்கும் நீட்டித்துள்ளது: முதலில் உள்ளது சுகாதாரம் - சரிபார்க்கப்பட்ட மருத்துவமனைகளுக்கான பேமெண்ட்களுக்கான லிமிட் ரூ.5 லட்சம் ஆக உள்ளது.

இதேபோல கல்விக்கும், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான கட்டணங்களை செலுத்துவதற்கும் யுபிஐ லிமிட் ரூ.5 லட்சம் ஆக இருக்கிறது. இதேபோல ஐபிஓ-க்கள் (IPO) மற்றும் ஆர்பிஐ ரீடெய்ல் டைரக்ட் திட்டங்களில் முதலீடுகள் செய்யும் போது இந்த லிமிட்டை எட்டலாம். இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலமைப்பு முதிர்ச்சியடையும்போது, ​​இந்த உயர் வரம்புகள், காகிதவழி பரிவர்த்தனைகள் மற்றும் மெதுவான வங்கி இடைமுகங்கள் மீதான நாட்டின் சார்புநிலையை மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுபிஐ தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை என்பிசிஐ (NPCI), தற்போது வியட்நாமின் பாஸ்ட் பேமண்ட் சிஸ்டம் உடன் யுபிஐ (UPI) சேவையை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. துபாய் போன்ற நாடுகளில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிதி செல்வாக்கிற்கு (Financial influence) இந்த நடவடிக்கை மற்றுமொரு மகுடமாக விளங்குகிறது. டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சூழலை எல்லைகளுக்கு அப்பால் சீராக முன்னெடுத்து செல்வதால், இந்தியா ஒரு உலகளாவிய நிதி தொழில்நுட்பத் தலைவராக (Global fintech leader) பார்க்கப்படுகிறது!

Best Mobiles in India

English summary
NPCI now Allows Taxpayers to pay up to Rs 5 lakh per day via UPI Apps Like Google Pay PhonePe BHIM
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X