UPI ஐடிக்கு ஆபத்து.. டிச.31 கடைசி தேதி.. NPCI புது ரூல்ஸ்.. கூகுள் பே, போன்பேவில் கவனம்.. என்ன செய்ய வேண்டும்?
யுபிஐ ஐடி (UPI ID) பேமெண்ட் தொடர்பாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (National Payments Corporation of India) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் கூகுள் பே, போன்பே போன்ற ஆப்களை பயன்படுத்துவோர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.
இந்தியாவில் பணப் பரிவர்த்தனை என்பது முற்றிலும் டிஜிட்டல் மையமாகி வருவதால், நாளுக்கு நாள் அதுதொடர்பான கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதல்களும் அதிகரித்து வருகின்றன. சொல்லப்போனால், வங்கிகள் மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தை செய்ய வேண்டும் என்றால், அவர்களுக்கு யுனிபைட் பேமன்ட்ஸ் இன்டர்பேஸ் (Unified Payments Interface) என்னும் யுபிஐ ஐடி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த யுபிஐ ஐடி வைத்து வாடிக்கையாளர்கள் பேங்க் ஆப்கள் (Bank Apps) மூலமோ அல்லது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற பேமெண்ட் ஆப்கள் (Payment Apps) மூலமோ தங்களது பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடிகிறது. இந்த ஆப்கள் மூலம் சில நொடிகளில் எங்கிருந்து வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவோ பெறவோ முடிகிறது. இதனால், அதுதொடர்பான சிக்கல்களும் அதிகரித்து விட்டன.
இதன் காரணமாக நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனமானது, யுபிஐ ஐடி தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை அவ்வப்போது வழங்கி வருகிறது. அந்த வரிசையில், இப்போது, ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்தாமல் இருக்கும் யுபிஐ ஐடிக்கள் முற்றிலும் செயலிழக்க செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. அதோடு வரும் டிசம்பர் 31 ஆம் தேதியே அதற்கு கடைசி நாள் என்றும் அதிரடியாக குறிப்பிட்டுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்கள் பேமெண்ட் ஆப் வாடிக்கையாளர்களில் வயிற்றில் புளியை கரைக்கும்படி இருக்கிறது. நாள்தோறும் கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்களை பயன்படுத்தித்தான் வருகிறோம். பிறகு எதற்கு பயப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இப்போது தான் விழிப்புணர் உடன் இருக்க வேண்டி இருக்கிறது.
அதாவது, நம்மில் பல பேர் ஒரு மொபைல் நம்பரை வைத்து யுபிஐ ஐடியை ஓப்பன் செய்திருப்பார்கள். அதன் பின் நாளடைவில் வேறு மொபைல் நம்பருக்கு மாறியிருப்பார்கள். இந்த நேரத்தில் அந்த பழைய நம்பரின் யுபிஐ ஐடியை டீஆக்டிவேட் செய்ய மறந்திருக்க வாய்ப்புள்ளது. இதனால், அந்த யுபிஐ ஐடி அந்த மொபைல் நம்பரோடு இணைப்பிலேயே இருக்கும்.
இந்த சூழலில் அந்த மொபைல் நம்பர் வேறொருவருக்கு செல்லும் பட்சத்தில் பணப்பரிவரத்தனையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்க நேரிடும். இதை தவிர்க்கவே ஒரு ஆண்டுக்கும் மேலாக பயன்படுத்ததாத ஐடிகளை நேஷனல் பேமன்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனமான, என்சிபிஐ (NPCI) செயலிழக்க செய்ய இருக்கிறது.
ஒருவேளை எப்போதுதாவது மீண்டும் பயன்படுத்தலாம் என்று டிஆக்டிவேட் செய்யாமல் வைத்திருக்கும் யுபிஐ ஐடிகளுக்கும் இந்த வழிகாட்டுதல்கள் பொருந்தும். இதை விளையாட்டாக விட்டால், டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு அந்த யுபிஐ ஐடியுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற ஆப்களையும், பேங்க் ஆப்களையும் பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்புள்ளது.

ஆகவே, உங்களது பழைய மொபைல் நம்பரில் இணைக்கப்பட்டிருக்கும் யுபிஐ ஐடியை டிஆக்டிவேட் (UPI ID Deactivate) செய்யுங்கள். ஒருவேளை அந்த மொபைல் நம்பர் இப்போது உங்களிடம் இல்லை என்றால், அதோடு இணைக்கப்படிருக்கும் பேங்கில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாதீர்கள். நேரடியாக பேங்குக்கு சென்று புதிய நம்பரை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் இந்த வழிகாட்டுதல்கள் தொடர்பாக அச்சப்படாமல் இருக்கலாம்.


Click it and Unblock the Notifications