புது 30% ரூல்.. Google Pay, PhonePe-விற்கு வரும் மெகா மாற்றம்.. இதனால் UPI யூசர்கள் பாதிக்க படுவார்களா?
யுபிஐ (UPI) என்கிற யுனிஃபைடு பேமண்ட் இன்டர்பேஸ் தளத்தை நிர்வகிக்கும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவின் (NPCI) சமீபத்திய தரவுகள் ஆனது கூகுள் பே (Google Pay) மற்றும் போன்பே (PhonePe) ஆகிய 2 முக்கிய யுபிஐ பேமண்ட் ஆப்களின் லேசான "சரிவை" வெளிப்படுத்தி உள்ளது.
என்பிசிஐ தரவுகளின் படி, மே 2026 இல் போன்பே மற்றும் கூகுள் பே ஆகிய இரண்டும் இணைந்து யுபிஐ சந்தையில் 79 சதவீத பங்கை கொண்டிருந்தன. என்பிசிஐ ஆனது ஆப் -சார்ந்த பரிவர்த்தனை தரவுகளை வெளியிட தொடங்கியதிலிருந்து, இந்த இரண்டு முன்னணி நிறுவனங்களின் கூட்டு ஆதிக்கம் 80 சதவீதத்திற்கு கீழே சரிந்தது இதுவே முதல் முறையாகும். ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாற்றமாக கருதப்படுகிறது.

ஏனென்றால், ஒரு தனிப்பட்ட யுபிஐ ஆப்பிற்கு 30 சதவீத மார்க்கெட் கேப் (market cap) விதியை அமல்படுத்துவதற்கான காலக்கெடு முடிவதற்கு இன்னும் ஆறு மாதங்களே உள்ளன. சந்தை பங்கில் ஏற்பட்டுள்ள இந்த படிப்படியான சரிவு, நாட்டின் பிரபலமான பேமண்ட் சேவையில் (மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் சுமார் 86 சதவீதத்தைக் கொண்ட தளங்கள்) முதல் இரண்டு நிறுவனங்களின் பிடி தளர்ந்து வருவதை காட்டுகிறது.
இதனால் யுபிஐ யூசர்கள் பாதிக்க படுவார்களா? என்பிசிஐ-யின் வெளியிட்டுள்ள இந்த தரவுகள் - பயனர்களை எந்த வகையிலும் பாதிக்காது. மாறாக யுபிஐ ஆப் நிறுவனங்களை தான் பாதிக்கும். அதாவது போட்டி அதிகமாகிறது.உண்மையில் சொல்லப்போனால் இது யுபிஐ பயனர்களுக்கு நல்லது தான். பயனர்களுக்கு நல்ல கேஷ்பேக் அல்லது சலுகைகளை வழங்க யுபிஐ ஆப்கள் போட்டிபோடலாம்.
என்பிசி-க்கான சிறிய வெற்றி: பெரிய மற்றும் வளர்ந்து வரும் மூன்றாம் தரப்பு ஆப் வழங்குநர்கள் (TPAPs) அல்லது யுபிஐ ஆப்களுக்கு இடையே சமமான போட்டி சூழலை உருவாக்க என்பிசிஐ கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக, அம்சங்களுக்கான சமநிலை விதிகளை தளர்த்துவது மற்றும் சிறிய ஆப்களுக்கு சிறப்பு அல்லது முன்கூட்டியே புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை இது மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் முன்னணி நிறுவனங்களை தாண்டி மற்றவர்களின் பங்கேற்பை அதிகரிக்க முயற்சிக்கிறது.
இதன் விளைவாக - என்பிசிஐ-யின் பீம் (BHIM), சச்சின் பன்சால் ஆதரவு பெற்ற நவி (Navi), பிளிப்கார்ட் (Flipkart) குழுமத்தின் சூப்பர்.மணி (super.money) மற்றும் வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) போன்ற யுபிஐ ஆப்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளன. சிறிய யுபிஐ ஆப்களை வலுப்படுத்த என்பிசிஐ மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் பலனளித்துள்ளன என்பது வெளிப்படையாகிறது.
இன்னமும் முதல் இரண்டு நிறுவனங்கள் (கூகுள் பே மற்றும் போன்பே) இன்னும் பெரிய சந்தைப் பங்கை கொண்டிருந்தாலும், இரண்டு ஆண்டுகளில் 7 சதவீத சரிவை சந்தித்து உள்ளன. இதுயுபிஐ சேவையில் நிலவும் இரு நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் (duopoly) குறைப்பதற்கான சில உத்திகள் செயல்படுவதை காட்டுகிறது.
2021 இல் போன்பே மற்றும் கூகுள் பே ஆகியவைகள் 80 சதவீத சந்தை பங்கைக் கொண்டிருந்தன, ஆனால் மே 2024 இல் இவ்விரு நிறுவனங்களின் பங்கு 86 சதவீதமாக உயர்ந்திருந்தது. யுபிஐ சேவையின் கீழ் ஒரு மாதத்தில் சுமார் ரூ. 30 லட்சம் கோடி மதிப்பிலான 23 பில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகால் நடக்கிறது என்பதும், இதுதான் உலகின் மிகப்பெரிய நிகழ்நேர வங்கிகளுக்கு இடையிலான கட்டண செலுத்துதல் அமைப்பாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மார்க்கெட் ஷேரை ட்டும் புதிய ஆப்கள்: கடந்த இரண்டு ஆண்டுகளில் பீம் மற்றும் வாட்ஸ்அப் பே ஆகியவை அதிக பயனடைந்த ஆப்களாக உள்ளன. என்பிசிஐ ஆனது பீம் ஆப்பில் முதலீடு செய்து வருகிறது. இதன் விளைவாக, இந்த ஆப்பின் சந்தை பங்கு இரண்டு ஆண்டுகளில் ஐந்து மடங்கு அதிகரித்து 1 சதவீதத்தை எட்டியுள்ளது.
நவி மற்றும் சூப்பர் மணி ஆகியவைகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தங்கள் செயல்பாடுகளை தொடங்கின. இப்போது இவை இரண்டும் இணைந்து 5.5 சதவீத சந்தை பங்கை பெற்றுள்ளன. போன்பே, கூகுள் பே, பேடிஎம் ஆகிய முன்னணி மூன்று ஆப்கள் இணைந்து, ஜனவரி 2024 இல் நடைபெற்ற மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 95.2 சதவீதத்தை கையாண்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்போது நிலைமை மெல்ல மெல்ல மாற தொடங்கி உள்ளதை என்பிசிஐ-யின் சமீபத்திய தரவுகள் சுட்டிக்காட்டுகிறது.


Click it and Unblock the Notifications