அப்படி போடு.. UPI சேவையில் புதிய அம்சம்.. இனி சுலபமாக பணம் அனுப்பலாம்.. சிக்கல் இருக்காது..
இந்தியாவில் யுபிஐ சேவைகளில் தொடர்ந்து புதிய புதிய அம்சங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. குறிப்பாக இதில் வரும் புதிய அம்சங்கள் மிகவும் பாதுகாப்பாகவும் மற்றும் பயனுள்ள வகையிலும் உள்ளது. இந்நிலையில் யுபிஐ மற்றும் ஏடிஎம் சேவைகளில் தற்போது புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அதன்படி அனைவருக்கும் பயனுள்ள வகையில் UPI-ICD எனப்படும் அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது UPI-ICD எனப்படும் அம்சம் மூலம் ஏடிஎம் கார்டு இல்லாமல் யுபிஐ மூலம் ஏடிஎம்களில் பணத்தை அனுப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அம்சம் ஆனது பயனர்கள் பணம் அனுப்ப ஏடிஎம் செல்லும்போது டெபிட் கார்டு முதலிய எந்த கார்டுகளையும் எடுத்துச் செல்ல வேண்டிய தேவையை நீக்கியுள்ளது.

ஆனால் இந்த புதிய அம்சம் முதன்முதலாக ஆக்ஸிஸ் பேங்க் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த புதிய அம்சம் DM எனப்படும் பணம் போடும் மற்றும் பெறும் அனைத்து டெபாசிட் மெசின்களிலும் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதவிர இன்னொரு முக்கியமான அம்சமும் இந்த யுபிஐ சேவையில் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதாவது UPI Circle எனப்படும் இன்னொரு அம்சத்தைத் தான் சமீபத்தில் NPCI அறிமுகம் செய்தது. இந்த யுபிஐ சர்க்கிள் என்றால் என்ன இதை பயன்படுத்துவது எப்படி என கேள்வி வரும். அதாவது யுபிஐ சர்க்கிள் (UPI Circle) என்றால் உங்கள் யுபிஐ அக்கவுண்ட்டை பயன்படுத்தி நீங்கள் இல்லாமல் கூட உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பணம் செலுத்த முடியும்.
குறிப்பாக யுபிஐ சர்க்கிள் அம்சம் ஆனது ஒரே யுபிஐ அக்கவுண்ட்டில் ஒரு நபரை முதன்மை பயனராகவும், அவர்களின் நம்பகமான குடும்ப உறுப்பினர்களை இரண்டாம் நிலை பயனராகவும் இருக் அனுமதிக்கிறது. எனவே இதன் மூலம் நீங்கள் இல்லாமலேயே உங்கள் யுபிஐ அக்கவுண்ட்டை பயன்படுத்தி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பணத்தைச் செலுத்த முடியும்.
அதேபோல் இதில் குறிப்பிட்ட பணப்பரிவர்த்தனை வரம்புகளையும் உங்களால் வைத்துக்கொள்ள முடியும். எனவே இதனால் உங்கள் அம்மா, அப்பா, மனைவி, மகள், மகன் கையில் பணத்தைக் கொடுக்காமல், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் பேமெண்ட் செய்யும் வரம்புகளை நீங்களே கையாள முடியும். அதேபோல் இது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் ஆன்லைனில் பேமெண்ட் மோசடியில் சிக்கக்கொள்ளாமல் தடுக்கவும் உதவுகிறது.
மேலும் இந்த யுபிஐ சர்க்கிள் வசதியில் இரண்டு முறையில் பராமரிக்கலாம். ஒன்று ஒவ்வொரு பரிவர்த்தனையையும் அனுமதியுங்கள், இரண்டு குறிப்பிட்ட அளவிலான பரிவர்த்தையை மட்டும் அனுமதியுங்கள் என இரண்டு முறைகளில் உங்கள் இரண்டாம் நிலை பயனரை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். குறிப்பாக யுபிஐ சர்க்கிள் அம்சம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

அதேபோல் யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு இனி குரலையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முறையால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு (டைப்) செய்ய வேண்டியதில்லை. அதாவது குரல் மூலமாகவே உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ளலாம்.
சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஃபின்டெக் நிகழ்வில் தான் என்பிசிஐ, ஐஆர்சிடிசி, கோரோவர் ஆகிய தளங்கள் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய வசதி ஐஆர்சிடிசி ( IRCTC) தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் குரல் வழி பரிவர்த்தனை மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications