Google Pay, PhonePe யூஸ் பண்றீங்களா.. NPCI அறிவித்துள்ள UPI Help வசதியை பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கணும்!
யுபிஐ (UPI) என்கிற ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (Unified Payment Interface) தளத்தில், சீரான வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி செய்வதற்காக, என்பிஐசி (NPCI) என்கிற இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) ஆனது ஒரு புதிய ஏஐ வசதியை அறிமுகம் செய்துள்ளது.
அது யுபிஐ ஹெல்ப் (UPI Help) வசதி ஆகும். டிஜிட்டல் கட்டண தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிப்பது, யுபிஐ தொடர்பான குறைகளை தீர்ப்பது மற்றும் யுபிஐ பரிவர்த்தனை ஆணை மேலாண்மை (UPI transaction mandate management) ஆகியவற்றை நோக்கமாக கொண்ட யுபிஐ ஹெல்ப் (UPI Help) ஆனது ஒரு ஏஐ-பவர்டு அசிஸ்டென்ட் (AI-powered assistant) ஆகும்.

யுபிஐ வழியிலான பணப்பரிவர்தனைகளை செய்யும்போது பயனர்கள் ஏதேனும் சிக்கலில் சிக்கிக்கொள்ளும் போதெல்லாம், அவரக்ளுக்கு எழும் கேள்விகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களை தீர்க்க யுபிஐ ஹெல்ப் என்கிற ஏஐ பாட்டின் உதவியைப் பெறலாம். யுபிஐ சேவையின் கீழ் கிடைக்கும் பல்வேறு அம்சங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை நன்கு புரிந்துகொள்ள இது உதவும்.
மேலும் யுபிஐ ஹெல்ப் வழியாக பயனர்கள் கூடிய விரைவில் தங்கள் யுபிஐ பரிவர்த்தனைகளின் நிலையை சரிபார்க்கவும், சேவை சிக்கல்கள் தொடர்பான புகார்களை பதிவு செய்யவும் அல்லது கண்காணிக்கவும் முடியும். இந்த புதிய டூல் ஆனது - வங்கிகளுடன் தேவையான விவரங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் விரைவான தீர்வையும் செயல்படுத்தும். குறிப்பாக யுடிஐஆர் (UDIR) கட்டமைப்பின் கீழ் செயலாக்கப்பட்ட முழுமையடையாத அல்லது நிலுவையில் உள்ள பரிவர்த்தனைகளுக்கு!
மேலும் யுபிஐ பயனர்கள் தங்கள் அனைத்து ஆக்டிவ் மென்டேட்களையும் (Active mandates), அதாவது ஆட்டோபே (Autopay) பேமென்ட்களை ஒருங்கிணைந்த பார்வையில் பார்க்க முடியும். இதோடு யுபிஐ பயனர்கள் தங்கள் பரிவர்த்தனை நிலையை சரிபார்க்கவோ அல்லது வழங்கப்பட்ட சேவைகளுக்கு இணங்குவதை பதிவு செய்து கண்காணிக்கவோ முடியும்.
இது முழுமையடையாத பரிவர்த்தனைகளுக்கு (ஸ்டேட்டஸ் தெரியவில்லை என்கிற பரிவர்தனைகளுக்கு) பயனுள்ளதாக இருக்கும், மேலும் யுடிஐஆர் செயல்முறையின் ஒரு பகுதியாக தற்போது ஆதரிக்கப்படும் சேவை தொடர்பான சிக்கல்களுக்கான வணிகர் (பி2எம்) பரிவர்த்தனைகளுக்கு புகார் அளிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
யுபிஐ பயனர்களுக்கான இந்த அசிஸ்டன்ட் எங்கெல்லாம் கிடைக்கும்?
1. வெப்சைட், சாட்பாட் மற்றும் பல மெம்பர் பேங்க்களின் வாடிக்கையாளர் இடைமுக சேனல்களின் வழியாக அணுக கிடைக்கும்.
2. டிஜிசாத்தி (DigiSaathi) வலைத்தளம் / சாட்பாட் போன்றவைகளின் வழியாக அணுக கிடைக்கும்
3. யுபிஐ ஆப்கள் வழியாக அணுக கிடைக்கும்.
ஆரம்பத்தில் இந்த புதிய யுபிஐ ஹெல்ப் வசதி அல்லது அம்சமானது பைலட் திட்டத்தின் கீழ் கிடைக்கும். அதாவது இது வரையறுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும். இருப்பினும் இந்த வசதிக்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் முடிவுகளின் அடிப்படையில் இது படிப்படியாக அனைவருக்கும் வந்தடையும்.
இதேபோல பேங்கிங் தொடர்பான மற்ற சமீபத்திய அப்டேட்களை பொறுத்தவரை எஸ்பிஐ (SBI) என்கிற ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கி ஆனது வருகிற நவம்பர் 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகளை (SBI Credit Card New Rules) அமல்படுத்த உள்ளது
எஸ்பிஐ அறிவித்துள்ள இந்த மாற்றங்கள் முக்கியமாக மூன்றாம் தரப்பு செயலிகள் (Third Party Apps) மூலம் பள்ளி அல்லது கல்லூரி கட்டணங்களை செலுத்துதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் டிஜிட்டல் வாலட்களில் பணத்தை லோட் செய்தல் போன்ற பரிவர்த்தனைகளில் முக்கிய மாற்றங்களை கொண்டுவருகின்றன.
https://tamil.gizbot.com/news/sbi-credit-card-new-rules-effect-from-november-1-education-payment-wallet-load-charges-changed-061991.html


Click it and Unblock the Notifications








