Home
News

UPI சேவை.. இனி சிரமம் இருக்காது.. NPCI முக்கிய அறிவிப்பு.. உற்சாகத்தில் வாட்ஸ்அப் பயனர்கள்..

வாட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்த ஆப் வசதியில் வரும் ஒவ்வொரு அம்சங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் உலகம் முழுவதும் வாட்ஸ்அப் செயலியை அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப் பே (WhatsApp Pay) குறித்து முக்கியத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் முக்கிய நகரங்கள் முதல் உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக யுபிஐ பணப்பரிவர்த்தனை அறிமுகமான பின்பு பெரும்பாலான இந்தியர்கள் பாக்கெட்களிலும், பர்ஸ்களிலும் பணத்தை வைத்துக்கொள்வதில்லை. இதன் காரணமாகவே இந்தியாவில் PhonePe, Paytm, Google Pay பயன்பாடுகளானது அதிகரித்தது.

UPI சேவை.. NPCI முக்கிய அறிவிப்பு.. உற்சாகத்தில் வாட்ஸ்அப் பயனர்கள்..

இந்த சூழலில் தான் யுபிஐ பணப்பரிவர்த்தனையில் மெட்டாவின் வாட்ஸ்அப்பும் இணைந்தது. ஆனால் தொடக்கத்தில் அதாவது 2020-ம் ஆண்டு வாட்ஸ்அப் பயனர்களில் 40 மில்லியன் மக்களுக்கு மட்டுமே யுபிஐ சேவையை வழங்க வேண்டும் எனவும், படிப்படியாக அதன் வரம்பை உயர்த்திக்கொள்ளவும் தேசிய கொடுப்பனவு கழகமானது (NPCI) வாட்ஸ்அப்பிற்கு அறிவுறுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்பின்பு கடந்த 2022-ம் ஆண்டு அதன் வரம்பானது 100 மில்லியனாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ஒட்டுமொத்த வரம்பை நீக்கி வாட்ஸ்அப் தங்களின் அனைத்து பயனர்களுக்கும் வாட்ஸ்அப் பேவின் மூலம் யுபிஐ சேவையைப் பகிர்ந்துகொள்ளலாம் என தேசிய கொடுப்பனவு கழகமானது அறிவித்துள்ளது. குறிப்பாக வாட்ஸ்அப் 500 மில்லியன் பயனர்களை கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதுவும் வாட்ஸ்அப் பேவின் யுபிஐ வரம்பை நீக்குவதாகத் தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உடனடியாக அமலுக்கு வரும் வகையில், வாட்ஸ்அப் பே-க்கான யுபிஐ யுபிஐ பயனர்களுக்கான ஆன்போர்டிங் வரம்பை நீக்கியுள்ளது.

இந்த முக்கிய அறிவிப்பின் மூலம் வாட்ஸ்அப் பே இப்போது யுபிஐ சேவைகளை இந்தியாவில் உள்ள அதன் முழு பயனர் தளத்திற்கும் நீட்டிக்க முடியும். முன்னதாக NPCI வாட்ஸ்அப்பின் UPI பயனர் தளத்தை படிப்படியாக மட்டுமே விரிவுபடுத்த அனுமதித்தது. ஆனால் இப்போது புதிய அறிவிப்பின் மூலம் வாட்ஸ்அப் பேவில் பயனர் ஆன்போர்டிங் மீதான வரம்பு கட்டுப்பாடுகளை NPCI நீக்குகிறது. மேலும் ஏற்கனவே உள்ள அனைத்து UPI வழிகாட்டுதல்கள் மற்றும் TPAP விதிமுறைகளுக்கு WhatsApp Pay தொடர்ந்து இணங்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

UPI சேவை.. NPCI முக்கிய அறிவிப்பு.. உற்சாகத்தில் வாட்ஸ்அப் பயனர்கள்..

அதேபோல் வாட்ஸ்அப் ஆனது பாதுகாப்பு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துகிறது. அதாவது சமீபத்தில் பழைய சாதனங்களில் வாட்ஸ்அப் செயலி சப்போர்ட் ஆகாது என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்ட்ராய்டு 4.4 அதாவது கிட்கேட் வெர்ஷன் அல்லது அதற்கு முந்தைய பதிப்பில் உங்கள் செல்போன் இருந்தால் அவை ஜன. 1ம் தேதி முதல் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த பழைய செல்போன்களுக்கு வாட்ஸ்அப் வழங்கி வந்த ஆதரவை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த ஆண்டு பல புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்கள் வாட்ஸ்அப் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
NPCI allows WhatsApp Pay to extend UPI services to all Indian users: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X