2026 UPI விதி.. 30% லிமிட்.. RBI துணை கவர்னர் எச்சரிக்கை.. NPCI-யின் இந்த நடவடிக்கை வேலைக்கு ஆகாது!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஆன டி ரபி சங்கர், என்பிஐசி (NPCI) என்கிற இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் ஒரு யுபிஐ விதி (UPI Rule) குறித்த தனது கவலைகளை எடுத்துரைத்து உள்ளார்.
அது என்ன விதி? அது யுபிஐ (Unified payments interface) ஆப்களுக்கான 30% சந்தை பங்கு உச்சவரம்பு (30% market share cap for UPI apps) என்கிற இந்திய தேசிய கட்டணக் கழகத்தின் (National Payments Corporation of India) விதி ஆகும்.

என்பிசிஐ VS ஆர்பிஐ: 18வது மின்ட் பிஎப்எஸ்ஐ உச்சிமாநாட்டில் பேசிய ரபி சங்கர், என்பிசிஐ-யின் இந்த 30% யுபிஐ விதி குறித்த ஆர்பிஐ-யின் நிலைப்பாட்டை விவரித்தார். இந்த விதியின் அடிப்படை பிரச்சினை என்னவென்றால், இதை செயல்படுத்துவது கடினம் என்கிறார் ரபி சங்கர்.
மேலும் இந்த விஷயத்தில் எப்படி ஒரு வரம்பை செயல்படுத்த முடியும்? தீவிரமாக வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்திடம் சென்று, வாடிக்கையாளர்களை பெறுவதை நிறுத்தி கொள்ளுங்கள், அதாவது பரிவர்த்தனைகளை செய்வதை நிறுத்துங்கள் என்று எப்படி சொல்வது? என்றும் ரபி சங்கர் கேள்வி எழுப்பினார்.
2026 காலக்கெடு: டிபிஏபி (TPAP) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேர்ட் பார்ட்டி அப்ளிகேஷன் ப்ரொவைடர்கள் (Third-party application providers) தாங்கள் செயலாக்கும் யுபிஐ பரிவர்த்தனை அளவுகளின் வரம்புகளுக்கு இணங்குவதற்கான காலக்கெடுவை 2026 வரை நீட்டிப்பதாக என்பிசிஐ கடந்த ஆண்டு அறிவித்து இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
அதாவது எந்தவொரு யுபிஐ ஆப்பும் - பரிவர்த்தனை அளவுகளில் 30% க்கும் அதிகமாக இருக்க முடியாது என்று என்பிசிஐ முன்பு கூறி இருந்தது. ஆனால் இதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்த வரம்பிற்கு இணங்குவதற்கான காலக்கெடு இப்போது இரண்டு முறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 3 அல்லது 4 புதிய யுபிஐ நிறுவனங்கள் வந்தால்? யுபிஐ அமைப்பின் அணுகலை, மற்றவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் செயல்படுத்துவது கடினம். இந்த முடிவை (30% லிமிட்) அடைவதற்கான சிறந்த வழி, மற்ற நிறுவனங்கள், குறைந்தபட்சம், மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் வந்தால், அது இன்னும் சமமாக விநியோகிக்கப்படும் என்று தான் நினைப்பதாகவும் ரபி சங்கர் கூறியுள்ளார்.
யுபிஐ சுற்றுச்சூழல் அமைப்பில் கூடுதலாக சில நிறுவனங்கள் இருந்தால் செறிவு அபாயம் இருக்காது என்பதையும் ரபி சங்கர் விளக்கினார். இது மூன்றாம் தரப்பு ஆப்களின் சந்தை பங்கை விட வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை உள்ளடக்கியதால், அமைப்பை கணிசமாக பாதிக்காது என்று அவர் கூறினார்.
சாத்தியமான சிக்கல்கள் இருந்தாலும், அமைப்பு பாதுகாப்பாக உள்ளது. யுபிஐ என்பது இரண்டு வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை. எனவே மூன்றாம் தரப்பு பயன்பாடு கொண்டிருக்கும் வணிகத்தின் பங்கு அவ்வளவு முக்கியமல்ல, இரண்டு வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனைகளை எளிதாக்கும் ஒரு அமைப்பு, இது மிகவும் தனித்துவமானது, மிகவும் வித்தியாசமானது. செறிவு அபாயம் இருந்தாலும், அந்த இரண்டில் ஒன்றுக்கு ஏதாவது நடந்தாலும், அமைப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று விளக்கம் அளித்தார்
என்பிசிஐ-யின் 30% வரம்பு: என்பிசிஐ ஆனது கடந்த நவம்பர் 2020 இல் மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 30% தொகுதி வரம்பை அறிமுகப்படுத்தியது. ஜனவரி 1, 2021 முதல் டிசம்பர் 2023 க்குள் இது செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இருப்பினும் இந்த காலக்கெடு டிசம்பர் 2022 இல் நீட்டிக்கப்பட்டது.
முந்தைய மூன்று மாதங்களில் (சுழற்சி அடிப்படையில்) செயலாக்கப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளின் மொத்த அளவை அடிப்படையாக கொண்டு வரம்பு தீர்மானிக்கப்படுகிறது, மேலும் வரம்பை மீறும் தற்போதைய டிபிஏபி-க்கள் (TPAP) படிப்படியாக விதிமுறைகளுக்கு இணங்க இரண்டு ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டதாக (2026 வரை) மின்ட் (Mint) முன்னதாக செய்தி வெளியிட்டது. இதற்கிடையில் ஆர்பிஐ சார்பாக இந்த விதிக்கு மறைமுகமான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications








