காயலாங்கடை மொபைல்களிலிருந்து 1,500 கிலோ தங்கம்!

Posted By: Staff
காயலாங்கடை மொபைல்களிலிருந்து 1,500 கிலோ தங்கம்!

வேண்டாத மொபைல்கள் என்று முடிவுகட்டி தூக்கிப்போடும் 10 கோடி மொபைல்களில் இருந்து 1,500 கிலோ தங்கம், 10 லட்சம் கிலோ கிராம் காப்பர், 30,000 கிலோ வெள்ளியை அள்ளி குவிக்கலாம் என்கிறது ஒரு புதிய ரிப்போர்ட்.

பொதுவாக பழைய மொபைல்களை கடைகளில் கொடுத்தால், இன்றைய நிலையில் அதன் மதிப்பு அதிகபட்சம் ரூ.500 அல்லது ரூ.1,000.  உலக அளவில் 1 ஆண்டுக்கு 40 கோடி மொபைல்கள் குப்பைக்கு வருகின்றன. இதில் 10 கோடி மொபைல்களில் இருந்து மேல் கூறப்பட்டுள்ள அளவு தங்கம், வெள்ளி, காப்பர் போன்றவற்றை குவிக்கலாம் என்கிறது சீனா.

சீனாவில் தொழில் நுட்ப தயாரிப்புகளும் அதிகம், அதே சமயம் தொழில் சாதனங்களை பயன்படுத்துவோரது எண்ணிக்கையும் அதிகம். இப்படி இருக்கையில் தேவையில்லை என்று கருதப்படும் 10 கோடி பழைய மொபைல்களை பொக்கிஷமாக மாற்றவும் வழிவகை உண்டு போலிருக்கிறது. புதிய தொழில் நுட்பகளை கொடுக்கும் சீனா, மீண்டும்

அதே தொழில் நுட்பத்தை தங்க குவியலாகவும் மாற்றுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot